நகம் சொத்தை குணமாக வீட்டு இயற்கை மருந்து..!
இப்போது அனைத்து வயதினரும் சந்திக்கின்ற ஒரு பிரச்சனைகளில் நகம் சொத்தை பிரச்சனை உள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால் ஒழுங்கற்ற பராமரிப்பு முறை மட்டுமே காரணமாக உள்ளது.
இந்த நகம் சொத்தை பிரச்சனையை ஆரம்பக்காலத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இல்லையெனில் நகங்களில் பலவகையான நோய்களை ஏற்படுத்திவிடும்.
இந்த நகம் சொத்தை பிரச்சனையை சரி செய்ய மருத்துவரிடம் செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. நமக்கு எளிதில் கிடைக்கும் சில பொருட்களை வைத்தே இந்த நகம் சொத்தை பிரச்சனையை சரிசெய்து விட முடியும்.
பகுதி – 1 கால் விரல் நகம் சொத்தை காரணம் மற்றும் குணப்படுத்தும் முறை !!! முழு விளக்கம் !!! |
சரி வாங்க இந்த கால் நகம் சொத்தை குணமாக இயற்கை வழிமுறைகள் என்ன உள்ளது என்பதை பற்றி இப்போது இந்த பகுதில் படித்தறிவோம் வாங்க.
நகம் சொத்தை காரணம்: 1
குறிப்பாக காலில் செருப்பு அணியாமல் நடப்பது.
நகம் சொத்தை காரணம்: 2
மற்றவர்கள் செருப்பை போட்டுக் கொள்வது.
நகம் சொத்தை காரணம்: 3
கால் விரல் நகம் சொத்தை உள்ளவர்களின் செருப்பை அணிந்துக் கொள்வது போன்றவை காரணமாக, கால் விரல் நகம் சொத்தை (ingrown toenail treatment) ஏற்படுகிறது.
கால் விரல் நகம் சொத்தை (ingrown toenail treatment) ஏற்பட்டவுடன் அதனை கவனிக்காமல் விட்டு விட்டால் மற்ற விரல்களையும் பாதித்து விடும். ஆரம்ப காலத்திலேயே கவனித்து தகுந்த மருத்துவத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கால் நகம் சொத்தை குணமாக கீழாநெல்லி:
நகம் சொத்தை பிரச்சனை உள்ளவர்கள் இனி கவலைப்பட தேவையில்லை. கீழாநெல்லி கீரை, நகம் சொத்தை பிரச்சனையை சரிசெய்ய சிறந்த மருந்தாக விளங்குகிறது.
எனவே இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு கீழாநெல்லி கீரை மற்றும் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து அரைத்து நகம் சொத்தை உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
பின்பு மறுநாள் காலை வெது வெதுப்பான நீரை கொண்டு நகம் சொத்தை உள்ள விரல்களை சொத்தமாக கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, ஒரே வாரத்தில் நகம் சொத்தை சரியாகி விடும்.
கால் நகம் சொத்தை குணமாக படிகாரம்:
படிகாரம் கால் நகம் சொத்தை பிரச்னையை சரி செய்ய மிகவும் பயன்படுகிறது. எனவே படிகாரத்தை சிறிதளவு எடுத்து ஊற வைக்க வேண்டும். படிகாரம் நன்றாக ஊறியதும், அதனை பேஸ்ட் போல் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
இந்த பேஸ்ட்டினை இரவு தூங்கும் போது நகம் சொத்தை உள்ள இடத்தில் வைத்து கட்டி இரவு முழுவதும் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
பின்பு மறுநாள் காலை வெது வெதுப்பான நீரில் நகங்களை சுத்தமாக கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சில நாட்லளிலேயே நகம் சொத்தை பிரச்சனை சரியாகிவிடும்.
உங்கள் விரல் நகம் சொல்லும் உங்களின் எதிர்காலம் |
கால் நகம் சொத்தை மற்றும் நகம் பூச்சி குணமாக சித்த மருந்து:
நக பூச்சி மற்றும் நகம் சொத்தை குணமாக ஒரு சிறந்த இயற்கை மருத்துவ குறிப்பு. அதாவது இந்த இயற்கை குறிப்பு முறையை தினமும் ஒரு முறை பின்பற்றி வர ஒரு சில நாட்களிலேயே நகம் சொத்தை மற்றும் நகம் பூச்சி பிரச்சனைகள் சரியாகிவிடும்.
கால் நகம் சொத்தை குணமாக சித்த மருந்து தேவையான பொருட்கள்:-
- வெண்குங்கிலியம்
- துருசு
- படிகாரம்
- வெண்காரம்
- மிருதரசிங்கி
- கந்தகம்
- காசுக்கட்டி
கால் நகம் சொத்தை குணமாக சித்த மருந்து செய்முறை:
மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். இவையனைத்தையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும்.
மேலு கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தனி தனியாக பொடி செய்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து பொடி செய்து வைத்துள்ள பொடிகளை அனைத்தும் 1/4 ஸ்பூன் எடுத்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.
கலந்து வைத்துள்ள இந்த பொடியுடன் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.
இப்பொழுது இந்த கலவையை நகம் சொத்தை மற்றும் நகம் பூச்சிகள் உள்ள நகங்களில் தடவ வேண்டும். பின் அப்படியே சிறிது நேரம் நன்றாக காயவிட வேண்டும். இந்த முறையை இரவு தூங்கும் போது செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |