Jatamansi Benefits in Tamil
அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் சடா மாஞ்சில் என்று சொல்ல கூடிய மூலிகையின் நன்மைகள் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். சடா மாஞ்சில் நறுமணம் கொண்ட மூலிகை ஆகும். இது 10 முதல் 60 செ.மீ வரை வளரக்கூடிய தாவரம் ஆகும். இதன் இலைகள் 15-20 செ.மீ நீளமும், 2-5 செ.மீ அகலமும் கொண்டுள்ளது.
இதன் பூக்கள் மங்கிய சிவப்பு அல்லது நீல நிறத்தில் காணப்படுகின்றன. இதன் தண்டு முடி போன்ற நார்களுடன் காணப்படுவதால் சடா மாஞ்சில் என்ற பெயர் பெற்றது. இதன் தண்டுகளும் வேர்களும் மருந்து பொருளாக மூலிகை கடைகளில் விற்கப்படுகிறது. இது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இந்த பதிவின் மூலம் சடா மாஞ்சில் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
மூலிகை சாறும் அதன் பயன்களும் !!! நோய் தீர்க்கும் மருந்து |
சடாமாஞ்சில் மருத்துவ பயன்கள்:
நரம்பு பிரச்சனைகளை போக்க:
இது நரம்பு சம்மந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த சடா மாஞ்சில் நரம்புத் தளர்ச்சி, காக்கா வலிப்பு மற்றும் மனநோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
இந்த சடா மாஞ்சில் எண்ணெயை நல்லெண்ணையுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.
தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க:
இது சருமத்தில் ஏற்படும் நோய்களை போக்கும் பண்புகளை கொண்டுள்ளது. இந்த சடா மாஞ்சில் தோல் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களையும் போக்குகிறது. சருமத்தில் ஏற்படகூடிய அரிப்பு, தோல் வறட்சி மற்றும் வெடிப்பு போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், இது உடலை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த:
இது இரத்தஓட்டம் சீராக செயல்பட உதவுகிறது. சடா மாஞ்சில் இதயத்துடிப்பு சீராக செயல்பட உதவுகிறது. மேலும் குறைந்த இரத்த அழுத்தத்திற்கு சடா மாஞ்சில் நல்ல மருந்தாக பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இது இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
மாதவிடாய் பிரச்சனைகளை போக்க:
இந்த சடா மாஞ்சில் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்கிறது. மாதவிடாய் கோளாறுகளுக்கு ஒரு நல்ல மருந்தாக சடா மாஞ்சில் பயன்படுகிறது. இது மாதவிடாய் சுழற்சியை சீராக்குகிறது.
மேலும் இது பித்தத்தை தணிக்க உதவுகிறது. வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழிக்கிறது. இது நீண்ட நாள் மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
அழிஞ்சில் இலையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |