கழற்சிக்காய் மருத்துவ பயன்கள்..! kalachikai Benefits In Tamil..!
Nickernut Uses / கழற்சிக்காய்: வணக்கம் தோழிகளே..! இன்றைய பதிவில் பல மருத்துவ பலன்களை அள்ளித்தரும் கழற்சிக்காயின் பயன்களை பற்றித்தான் இன்றைய பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். கழற்சிக்காய் என்பது ஒரு அற்புதமான மூலிகை வகை மருந்தாகும். வெப்ப தன்மை அதிகம் கொண்ட நாடுகளில் இந்த கழற்சிக்கையானது அதிகளவு வளர்ந்து வருகின்றன. இந்த செடியானது வேலி பகுதிகளில், சாலை ஓரங்களில், புதர்களில் அதிகமாக தென்படுகின்றன. தானாக வளர்ந்து வரும் இந்த கழற்சிக்காய் செடியில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது. இந்த கழற்சிக்காயிற்கு கச்சுரம், வஜ்ர பீஜம், கச்சக்காய், களிச்சக்காய் என்ற பல பெயரினாலும் அழைக்கப்பட்டு வருகின்றன.
கழற்சிக்காயின் மேல் ஓடு கடினமான பகுதியாக விளங்குகிறது. காயின் மேல் பகுதி முட்களை போன்ற அமைப்பினை கொண்டிருக்கும். கழற்சிகளின் உள் பகுதியில் வெள்ளை நிறம் கொண்ட பருப்பு இருக்கும். இந்த பருப்பானது பார்ப்பதற்கு மென்மையான பகுதியுடன் இருந்தாலும் கசப்பு தன்மை அதிகம் கொண்டவை. இந்த கசப்பு தன்மை கொண்ட பருப்புகளில் தான் அதிக நன்மைகள் அடங்கியுள்ளது. சரி வாங்க நண்பர்களே இப்போது கழற்சிக்காயின் மருத்துவம் நிறைந்த நன்மைகளை விரிவாக படித்தறியலாம் வாங்க..!
கருப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் கழற்சிக்காய்:
பெண்கள் என்றாலே மாதவிடாய் பிரச்சனை, கருப்பை சம்மந்தப்பட்ட கோளாறுகளை சந்தித்து வருவது இப்போது அதிகமாகி விட்டது. மாத விடாய் சீரற்ற நிலையில் இருப்பதன் காரணம் பெண்களுக்கு கருப்பையில் இருக்கக்கூடிய நீர்கட்டிகள் என்றே சொல்லலாம். இதனை பாதுகாக்காமல் அலட்சியமாக விட்டோம் என்றால் பிற்காலங்களில் கருத்தரித்தலில் பல விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதோடு திருமணம் ஆன பெண்களுக்கு குழந்தையின்மை காரணமும் கருப்பையில் உள்ள நீர்கட்டிகள் தான். இது போன்று உள்ளவர்களுக்கு ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் என்று சொல்லக்கூடிய ஹார்மோனானது சரியான அளவில் உற்பத்தி ஆகாது. இதன் பக்க விளைவாக பெண்களுடைய சினைப்பையில் சிறுசிறு நீர்கட்டிகள் வர தொடக்கம் ஆகும்.
இது போன்ற பிரச்சனை ருதுவான பெண்களிடம் காணப்படுகிறது. இந்த நோயானது 15 முதல் 45 வயது உள்ள பெண்களை தாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த நோயினை சரி செய்வதற்கு பல மருந்துகளை எடுத்துக்கொள்வதாலும் மேலும் பல துன்பங்களை சந்தித்து வருகின்றனர் நம் இளம்பெண்கள்.
பெண்கள் இந்த நோயிலிருந்து முற்றிலும் விடுபட கழற்சிக்காயின் சூரணத்தை 5 கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் அளவு மோரில் கலந்து காலை மற்றும் மாலை என்ற இரு வேளைகளிலும் அருந்திவர வேண்டும்.
நீர்க்கட்டி கரைய தொடங்கும்:
கழற்சிக்காய் சூரணத்தை தொடர்ச்சியாக 2 மாதம் வரை அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும். இரண்டு மாதம் பிறகு சினைப்பையில் இருந்த நீர்கட்டிகள் முற்றிலும் கரைந்துவிடும்.
கழற்சிக்காய் சூரணம் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் எளிமையாக கிடைக்கிறது. கருப்பையில் நீர்க்கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் இந்த முறையை பின்பற்றி வரலாம்.
கழற்சிக்காய் பல நோய்க்கு விடுதலை:
தீராத வயிற்று புண்ணை குணப்படுத்தும் கழற்சிக்காய்:
வயிற்று புண்களை ஆற்றுவதற்கு பல வித வழிகள் இருக்கின்றன. ஆனால் நாள்பட்ட வயிற்று புண்கள் விரைவில் ஆறாது. நாள்பட்ட வயிற்று புண்களை விரைவில் ஆற்றக்கூடிய சக்தி கழற்சிக்காய்க்கு உண்டு. கழற்சிக்காயினை சாப்பிட்டு வர தீராத வயிற்று புண் விரைவில் ஆறிவிடும்.
வயிற்று வலியை குணப்படுத்தும் கழற்சிக்காய்:
கழற்சிக்காய் மட்டுமல்ல அதன் இலைகளும் மிக மருத்துவ குணம் வாய்ந்தவை. கழற்சிகளின் இலைகளை நன்கு காய வைத்து பொடி செய்து சாப்பிட்டு வர வயிற்று வலி பிரச்சனை குறைந்துவிடும்.
காயங்களால் ஏற்பட்ட வீக்கத்தை குறைக்கும் கழற்சிக்காய் விதை:
புண்கள் மற்றும் காயங்களால் ஏற்பட்ட வீக்கத்தினை போக்குவதற்கு கழற்சிக்காயின் விதையினை அரைத்து வீக்கத்தின் மேல் தடவி வர வீக்கங்கள் குணமடையும்.
சர்க்கரை நோயை குணப்படுத்தும் கழற்சிக்காய்:
கழற்சிக்காய் சூரணத்தை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும். உடலில் சர்க்கரை நோய் அதிகம் உள்ளவர்கள் 15 நாட்கள் தொடர்ந்து இந்த மூலிகை சூரணத்தை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவானது குறைய தொடங்கும்.
பல் வலியை போக்கும் கழற்சிக்காய் பொடி:
பல் வலியால் அவதிப்படுபவர்கள் தினமும் கழற்சிக்காய் பொடியினால் பல் துலக்கி வருவதன் மூலம் பல் வலி பிரச்சனையிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும். வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்க இதன் இலைகளை நீரில் காய்ச்சி வடிகட்டிய பின் கொப்பளித்து வர துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.
கழற்சிக்காயின் மருத்துவ குணம் நிறைந்த பயன்களின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பதிவு செய்கின்றோம் நன்றி வணக்கம்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |