காது அடைப்பு நீங்க வீட்டு வைத்தியம்

Blocked Ear Reasons in Tamil

காது அடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்

பொதுவாக மனிதர்களின் காது பகுதிகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன அவை, வெளிக்காது. நடுக்காது. உட்காது ஆகும். இந்த காது பகுதிகளில் கூட பலவகையான பிரச்சனைகள் ஏற்படும் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பொதுவாக இந்த காது பகுதில் பலருக்கு பிரச்சனைகள் ஏற்படுவது காது அடைப்பு தான். சரி இந்த பதிவில் காது அடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான வீட்டு வைத்தியம் என்னென்ன இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

காது அடைப்பு காரணங்கள் – Blocked Ear Reasons in Tamil:

காரணம்: 1

காது அடைப்பு ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் காது சவ்வில் நீர் கோர்த்துக்கொள்வதாலும், சளி சேர்வதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது.

காரணம்: 2

காது அடைப்பு எதனால் வருகிறது என்றால் சில சமயங்களில் காதில் சேரும் மெழுகினாலும் காது அடைப்பு ஏற்படுகிறது. அதாவது காதுக்குள் சுரக்கும் அதிகமான மெழுகுகள், காதிற்குள் செல்லும் குழாயில் அடைத்துக்கொண்டு ஒலி அலைகள் செல்வதை தடுக்கும். இதனால் பாதி காதுதான் நமக்கு கேட்கும்.

காரணம்: 3

காது அடைப்பு எதனால் வருகிறது என்றால் சளி தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள் வேகமாக தும்முவதன் மூலமும் காது அடைப்பு ஏற்படுகிறது.

காரணம்: 4

செவிக்கால்வாயில் உண்டாகும் பாக்டீரியா தொற்றுகள், சைனஸ் பிரச்சனை, வீக்கமடைதல், சதை வளர்ச்சி போன்றவற்றாலும் காது அடைப்பு பிரச்சனை ஏற்படுகிறது, இது சில சமயங்களில் காது பகுதியில் ஒருவகையான  இரைச்சலை உண்டாக்கும்.

காரணம்: 6

காது அடைப்பை எளிதாக எண்ணி விட்டுவிட்டால், காதில் புகும் நீர் மற்றும் சளியால், சீழ் பிடித்து மூளைக்கு செல்லும் நரம்பில் நோய்த் தொற்று ஏற்பட்டு மூளைகாய்ச்சலை உண்டாக்கும். ஆகவே இத்தகைய  பிரச்சனையை யாரும் சாதரணமாக நினைக்கக்கூடாது.

குறிப்பு:

காதில் நோய் தொற்று ஏற்படுவதற்கான அறிகுறியே காது அடைப்பு என்று சொல்லலாம். காது அடைப்பை அலட்சியமாக நினைத்தால், அது நிரந்தர காது கேளாமைக்கு வழிவகுக்கும்.

இந்த பிரச்சனை ஒரு முறை, இரு முறை வந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை. தொடர்ந்து இந்த பிரச்சனை ஒருவருக்கு இருக்கிறது என்றால் கட்டாயம் காது சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்தும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவது நல்லது.

காது அடைப்பு ஏற்படாமல் இருக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் | Kathu Adaippu Sariyaga:

  1. நமது காது பகுதியை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  2. காதில் நீர் புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  3. குளிர்ந்த காற்று காதுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்.
  4. ஈரப்பதம் நிறைந்த இடத்திற்கு செல்லும்போது காதை பஞ்சு அல்லது காது அடைப்பான்களை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும்.
  5. காதினுள் அதிக மெழுகு சேர்ந்துள்ளதா என்பதை ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரிசோதித்துக்கொள்வது நல்லது
  6. காது பகுதில் கூர்மையான பொருட்கள், காகிதம் மற்றும் விரல் ஆகியவற்றை கொண்டு சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
காது வலி நீங்க பாட்டி வைத்தியம்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்