எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்..! Lemon Leaf Benefits..!
Lemon Leaf Uses In Tamil / எலுமிச்சை இலையின் மருத்துவ பயன்கள்: பொதுநலம்.காம் பதிவில் எலுமிச்சை பழத்தில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்களை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். எலுமிச்சை பழத்தில் மட்டுமல்லாமல் அதனுடைய இலையிலும் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. சரி வாங்க இப்போது எலுமிச்சையில் இருக்கும் நன்மைகளை பற்றி முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
![]() |
உடல் எடை குறைய எலுமிச்சை:
உடல் எடை அதிகமாக இருக்கிறது என்பவர்கள் இந்த எலுமிச்சை ஜுஸை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் அருந்தினால் உடல் எடை குறையும். எலுமிச்சையில் இருக்கும் அமிலத்தன்மை உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க உதவுகிறது.
தொற்றுநோயை நீக்கும் மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சை:
எலுமிச்சை ஜுஸை தினமும் குடித்து வருவதால் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். எலுமிச்சை தொற்றுநோய் பிரச்சனையிலிருந்து விடுவித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது .
இரத்த அழுத்தத்தை குறைக்கும் எலுமிச்சை:
முக்கியமாக உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை பெற்றது. உடலை சுத்தப்படுத்தி டாக்சின்ஸ்களை அகற்றிவிடும்.
எலுமிச்சை தோலில் உள்ள சத்துக்கள்:
எலுமிச்சை ஜூஸில் மட்டும் சத்துக்கள் இல்லை. அதன் தோள்களிலும் நிறைய சத்துக்கள் இருக்கிறது. எலுமிச்சை சாற்றில் 138 மில்லி கிராம் அளவிற்கு பொட்டாசியம் உள்ளன.
எலுமிச்சை சாற்றை விட அதன் தோல்களில் 160 மில்லி கிராம் பொட்டாசியம் இருக்கிறது. எலுமிச்சை தோலில் வைட்டமின் சி 129 மில்லிகிராம் அடங்கியிருக்கு. எலுமிச்சை சாற்றில் மிகவும் குறைவான 53 மில்லிகிராம் அளவே இருக்கிறது.
எலுமிச்சை தோலில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடும். எலுமிச்சை தோலை முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
![]() |
சர்க்கரை நோய் குணமாக:
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு காயம் விரைவில் ஆறாது. அதற்கு இந்த எலுமிச்சை தோலை காயம் பட்ட இடத்தில் தேய்த்து வருவதால் காயங்கள் விரைவில் குணமடையும்.
சர்க்கரை உடலில் குறைவாக இருக்க எலுமிச்சை இலை டீ குடித்து வந்தால் உடலில் உள்ள இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து காணப்படும்.
எலுமிச்சை இலையின் மருத்துவ பயன்கள்:
வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேற தினமும் எலுமிச்சையின் 10 இலைகளை எடுத்து நன்றாக கழுவி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் வயிற்று பூச்சிகள் வெளியேறும். எலுமிச்சை புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை வாய்ந்தது.
நீண்ட நாள் ஆறாமல் இருக்கும் புண்களில் எலுமிச்சை இலையை அரைத்து தடவி வர காயங்கள் விரைவில் குணமடைய செய்யும்.
எலுமிச்சை இலையை தயிரில் ஊறவைத்து சாப்பிட்டு வர உடல் வெப்பம் நீங்கும். அதோடு எலுமிச்சை இலையை அரைத்து தேமல், தடிப்பு போன்ற தோல் சம்மந்தபட்ட நோய்களுக்கு தடவி வந்தால் இந்த நோய் விரைவில் குணமாகும்.
![]() |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |