Lemon Salt Water Benefits in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய கால கட்டத்தில் பலர் தங்களது ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தி வருகின்றன. குறிப்பாக உணவு முறையிலும் அதிக கவனம் செலுத்துகின்றான். என்ன சாப்பிட்ட நமது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம, என்ன சாப்பிட்டால் என்ன பிரச்சனை சரியாகும் என்று தெரிந்து கொள்கின்றன. அப்படி தெரியவில்லை என்றாலும் செல்போன்களிலேயே மருத்துவர்களின் ஆலோசனைகளை வீடியோவாக பார்த்து தெரிந்து கொள்கின்றன. அந்த வகையில் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவும் எலுமிச்சை பழத்துடன் உப்பு சேர்த்து காலை வெறும் வயிற்றில் பானமாக பருகிவந்தால் உடலுக்கு அவ்வளவு நன்மையாம், அதை பற்றி உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
நீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்யும்:
காலை தூங்கி எழுந்ததும் பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பருகிவந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருந்தால் அதனையும் சமன் செய்கிறது.
நீரிழிவு நோயாளிக்கு சிறந்தது:
உப்பில் இருந்து கிடைக்கப்படும் மினரல் சத்துக்களை உறிஞ்சி இன்சுலின் அளவைசமமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். ஆக தினமும் நீரிழிவு நோயாளிகள் காலை வெறும் வயிற்றில் இந்த பானத்தை ஒரு கிளாஸ் பருகி வர சிறந்த பலன்கள் வழங்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்களின் உடல் எடை ஒரே வாரத்தில் அதிகரிக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!
இரத்த அழுத்தம் குறையும்:
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடித்து வந்தால் இரத்த அழுத்தத்தை குறைக்கும் மற்றும் இதய துடிப்பை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
எலுமிச்சை பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளது. ஆக இந்த பானத்தை தினமும் நீங்கள் பருகும் போது உங்கள் நோயெதிர்ப்பு சக்தி வலுவாகும்.
செரிமான பிரச்சனை சரியாகும்:
லெமன் மற்றும் சால்ட் ஆகிய இரண்டும் கலந்து தயார் செய்த இந்த பானம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உருவாகுவதை தூண்டுகிறது, இதன் காரணமாக நாம் சாப்பிடும் உணவு நன்கு ஜீரணமடையும். மேலும் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வதால் கீல்வாதம், சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் மற்றும் பல்வேறு வகையான மூட்டுவலிகள் வராமல் தடுக்கப்படுகிறது.
சிறுநீரக கற்கள் கரைய:
இந்த பானம் நீரிழப்பை தடுக்க செயல்படுவது மட்டும் இல்லாமல், சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க உதவுகிறது, மேலும் சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை உடைத்து வெளிக்கொண்டுவரவும் இந்த பானம் பயன்படுகிறது.
கல்லீரல் நச்சு நீங்க:
இந்த பானத்தை தொடர்ந்து காலை வெறும் வயிற்றில் பருகி வர கல்லீரல் ஏற்படும் பாதிப்புகள் குறையும். மேலும் உங்கள் உடலின் உணர்திறன் pH சமநிலையைக் கட்டுப்படுத்த இந்த பானம் உதவுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |