குறைந்த இரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தம் பற்றியும், அதன் பாதிப்புகளை பற்றியும் ஓரளவு அனைவருக்கும் விழிப்புணர்ச்சி இருந்தாலும் கூட, பலருக்கும் குறைந்த ரத்த அழுத்தம் இருக்கிறது. இது உலகளவில் பலரையும் பாதிப்படைய வைத்திருக்கின்றது. இந்த குறை ரத்த அழுத்தம் நோயால் பாதிப்படைந்தவர்கள் மயக்கம், உடல்நல கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்ட பின்பு அதற்கான சிகிச்சையை மருத்துவரிடம் பெற செல்லும் போதுதான் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் உள்ளதை தெரிந்து கொள்கின்றனர். இந்த குறை ரத்த அழுத்தத்தில் பலவகை உண்டு. உயர் ரத்த அழுத்தம் நோய் எந்த அளவிற்கு ஆபத்தானதோ, அதே போன்றுதான் இந்த குறை ரத்த அழுத்தம் நோய் கூட.
சரி இந்த பதிவில் குறை ரத்த அழுத்தம் என்றால் என்ன? குறை ரத்த அழுத்தம் அறிகுறிகள், குறை ரத்த அழுத்தம் வர காரணங்கள் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் வீட்டு வைத்தியம் என்ன உள்ளது என்பதை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க.
இரத்த அழுத்தம் குறைய பாட்டி வைத்தியம்..! |
குறைந்த இரத்த அழுத்தம் வீட்டு வைத்தியம் (Low blood pressure emergency treatment at home in tamil)..!
குறை ரத்த அழுத்தம் என்றால் என்ன?
30 வயதுள்ள ஒரு நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இதில் 120 என்பது மேல் அழுத்தம், 80 என்பது கீழ் அழுத்தம்.
ரத்த அழுத்தம் 90/60 மி.மீ.க்குக் கீழ் குறைந்தால் அது ‘குறை ரத்த அழுத்தம்’. இதில் பல வகை உண்டு. வழக்கத்தில் நாம் குறிப்பிடும் குறை ரத்த அழுத்த நோய்க்குத் ‘தமனிநாளக் குறை ரத்த அழுத்தம்’ (Arterial Hypotension) என்று பெயர்.
நம்மில் பலருக்கும் குறை ரத்த அழுத்தம் இருக்கிறது, அதை கண்டு பயப்படத் தேவையில்லை.
திடீரென்று மேல் அழுத்தத்தில் 20 மி.மீ. குறைகிறதென்றால் அல்லது கீழ் அழுத்தத்தில் 10 மி.மீ. குறைகிறதென்றால் மயக்கம் உள்ளிட்ட சில பிரச்சனைகள் ஏற்படும். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
ரத்த அழுத்தம் குறைய காரணம்?
இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்லத் தடை உண்டாவதுதான் குறை ரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம் ஆகும்.
ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்றுவிடுகிறது, இதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் ரத்தம் குறைகிறது.
இதனால் ரத்த அழுத்தம் குறைந்துவிடுகிறது, இதன் காரணமாகத்தான் மயக்கம் ஏற்படுகிறது.
இரத்தக் குழாய் அடைப்பு நீங்க இயற்கை மருத்துவம்..! |
குறை ரத்த அழுத்தம் அறிகுறிகள் (Low bp symptoms in tamil):-
மயக்கம், தலைசுற்றல், தலைக்கனம், அதிக தாகம், வாந்தி, கண்கள் இருட்டாவது போன்று உணர்வும், சோர்வு, உடல் சில்லிட்டு போவது, வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைமை, படபடப்பு, மூச்சுவாங்குவது போன்ற அறிகுறிகள் குறை ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் (Low bp symptoms in tamil) ஆகும்.
குறைந்த இரத்த அழுத்தம் வீட்டு வைத்தியம்:
குறைந்த இரத்த அழுத்தம் வீட்டு வைத்தியம் (Low blood pressure emergency treatment at home in tamil) டிப்ஸ் No: 1
இந்த குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு வைத்தியம், அதாவது ஒரு கிளாஸ் வெந்நீரில், அரை துண்டு எலுமிச்சை பழத்தை பிழிந்து, அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு கல் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, இந்த குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை சரியாகிவிடும்.
குறைந்த இரத்த அழுத்தம் வீட்டு வைத்தியம் (Low blood pressure emergency treatment at home in tamil) டிப்ஸ் No: 2
10 பாதாம் பருப்புகளை தோல் நீக்கி, நன்கு பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளுங்கள், பின் அவற்றை பாலுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அருந்திவர குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை சரியாகிவிடும்.
குறைந்த இரத்த அழுத்தம் வீட்டு வைத்தியம் (Low blood pressure emergency treatment at home in tamil) டிப்ஸ் No: 3
குறைந்த ரத்த அழுத்தம் நோய் குணமாக தினமும் சாப்பிடும் உணவில் 10 மில்லி ரோஸ்மேரி எண்ணெயை சேர்த்து கொள்ளுங்கள்.
இவ்வாறு ரோஸ்மேரி எண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதினால் குறைந்த இரத்த அழுத்தம் நோய் சீராகும்.
குறைந்த இரத்த அழுத்தம் வீட்டு வைத்தியம் (Low blood pressure emergency treatment at home in tamil) டிப்ஸ் No: 4
இந்த குறைந்த இரத்த அழுத்தம் குணமாக இரண்டு கேரட்டினை சிறு, சிறு துண்டுகளாக கட் செய்து, மிக்சியில் ஜூஸ் போல் அடித்து எடுத்து கொள்ளுங்கள் அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து தினமும் அருந்திவர குறைந்த இரத்த அழுத்தம் சரியாகிவிடும்.
குறைந்த இரத்த அழுத்தம் வீட்டு வைத்தியம் (Low blood pressure emergency treatment at home in tamil) டிப்ஸ் No: 5
இரத்த அழுத்தம் பிரச்சனையில் இருந்து விடுபட ஒரு இஞ்சியை நன்றாக தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின் அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு நாள் முழுவது நன்றாக சூரிய வெளிச்சத்தில் காயவைக்கவும்.
பின் மறுநாள் அவற்றை ஒரு பாட்டிலில் மாற்றி அந்த இஞ்சி துண்டுகள் நன்றாக முழுகும் அளவிற்கு தேனில் ஒரு நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
பின் இந்த இஞ்சி துண்டுகளை தினமும் சாப்பிட பிறகு ஒரு துண்டு எடுத்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதினால் இரத்த அழுத்தம் பிரச்சனை குணமாகும்.
இரத்த சோகை குணமாக உடனடி தீர்வு..! ஒரே வாரத்தில் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |