மைதா மாவில் செய்த உணவை சாப்பிடுவதற்கு முன் இதை தெரிந்து கொள்ளவும்

Advertisement

மைதா மாவு தீமைகள் | Maida Flour Side Effects

மைதா மாவில் செய்யப்பட்ட உணவுகளான பரோட்டா, சமோசா, பூரி, பிஸ்கட் போன்ற பல உணவுகளை விரும்பி சாப்பிடுவோம். இந்த உணவுகள் எவ்வளவு தான் சாப்பிடுவதற்கு ருசியாக இருந்தாலும் உடலிற்கு கேடுகளை விளைவிக்கும். ஏனென்றால் மைதாவில் பிளீச் என்ற இரசாயன கலவை சேர்க்கப்படுகிறது. இந்த பிளீச் ஆனது நச்சுத்தன்மை வாய்ந்தது. மைதா மாவிலுருந்து 97% நார்ச்சத்தை இழக்கிறது. இந்த மைதா மாவில் உள்ள தீமைகளை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

மைதா மாவு பக்க விளைவுகள்:

பரோட்டோ அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா?

செரிமான பிரச்சனை:

செரிமான பிரச்சனை

மைதாவில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் மலசிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

சர்க்கரை நோய் பிரச்சனை:

சர்க்கரை நோய் பிரச்சனை

மைதா மாவு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இவை அதிகமாக சாப்பிடுவதால் சர்க்கரை நோய் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கபட்டவர்கள் மைதா மாவை தவிர்க்க வேண்டும்.

உடல் பருமன் அதிகரிக்க:

உடல் பருமன் அதிகரிக்க

மைதா சார்ந்த உணவு பொருட்களை சாப்பிடும் போது உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மைதா மாவை சாப்பிடும் போது நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்கும். இதனால் உடல்நிலையை அதிகரிக்கிறது.

இதய பிரச்சனை:

இதய பிரச்சனை

மைதா மாவை சாப்பிடும் போது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும். இதனால் இதய பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் பக்கவாதம் ஏற்படும் பிரச்சனையையும் அதிகரிக்கிறது.

குடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்:

மைதா குடலில் பசை போல் ஒட்டி கொள்ளும். மைதா நல்ல பாக்ட்ரிக்கயாக்களை வளர்ச்சியை ஏற்படுத்தாது. மேலும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி குடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவு:

மைதா குடலுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்பது நாம் அறிந்தது. மைதா அட்ரீனல் சுரப்பிகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் நீங்கள் உணவில் மைதா மாவு சார்ந்த உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தியை குறைய ஆரம்பிக்கும்.

ஊட்டச்சத்து குறைபாடு:

மைதா மாவில் வெறும் கலோரிகள் மட்டுமே உள்ளது. உடலுக்கு தேவையான எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. இதை அடிக்கடி சாப்பிடும் போது தலைவலி, உடல் வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படும்.

 மைதா மாவு சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை அறிந்து கொண்டீர்கள். மைதா மாவு சாப்பிடுவதால் நம் உடலிற்கு எந்த வித சதையும் அளிக்கவில்லை, முழுமையாக உடலுக்கு தீங்கினை மட்டும் கொடுக்கிறது. அதன் மைதா மாவு உணவு சாப்பிடுவதை தவிர்த்து விடவும். அதற்கு பதிலாக கோதுமை மாவு, ராகி மாவு, பாதாம் மாவு போன்ற வகைகளை சாப்பிட வேண்டும்.  

நலங்கு மாவு செய்வது எப்படி? & அதன் பயன்கள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement