ஒற்றை தலைவலி வர காரணம் என்ன..? அதனை எப்படி சரி செய்வது..?

Migraine Treatment in Tamil

Migraine Treatment in Tamil

பொதுவாக அனைவருக்கும் இந்த தலை வலியானது ஏற்படும்..! ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் இந்த பிரச்சனையானது ஏற்படும். முக்கியமாக பெண்களுக்கு ஏனென்றால் வீட்டிலும் சரி வேலைபார்க்கும் இடத்திலும் ஏற்படும் சிக்கல்களை சமாளித்து வருவதற்குள் நிறைய தலைவலிகள் ஏற்படும் அல்லவா..? தலை வலியானது சாதாரணமான தலை வலி இருந்தால் கூட பரவாயில்லை. ஒற்றை தலை வலி ஏற்படும். ஒற்றை தலைவலியை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. இது எதனால் வருகிறது இதனை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

 One Side Head Pain Reason in Tamil:

Migraine Treatment in Tamil

ஒற்றை தலை வலி வருவதற்கு முக்கிய காரணம் உங்களின் உணவின் மாற்றத்தால் தான் வருகிறது. அதாவது எப்போதும் சாப்பிடும் நேரம் இல்லாமல் வேறு நேரத்தில் சாப்பிட்டால் அது ஒற்றை தலையை ஏற்படுத்தும்.

அதேபோல் சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு இந்த ஒற்றை தலை வலி ஏற்படுத்தவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதனை சரி செய்ய உடற்பயிற்சி செய்யவேண்டும். இப்படி உடற்பயிற்சி செய்வதால் மூளைக்கு நல்ல இரத்த ஓட்டம் போகும்.

அதேபோல் உடல் எடை அதிகம் இருந்தாலும் ஒற்றை தலைவலியை ஏற்படுத்தலாம். அதிகமாக கவலைபடுபவர்கள் கூட இந்த ஒற்றை தலைவலிக்கு ஆளாகலாம்.

எப்படி கண்டுபிடிப்பது:

நெற்றியின் ஒரு பக்கம் மட்டும் வலிப்பது தான் ஒற்றை தலைவலி ஆகும். ஒற்றை பக்கம் வலியானது முதலில் துடிப்பது போன்ற உணர்வுகளை உண்டாக்கும். சில சமயம் சிலருக்கு குமட்டல், வாந்தி போன்ற உணர்வுகளும் ஏற்படுத்தும். இதனை சரி செய்ய சில நேரம் தூங்குவது ஓய்வு எடுத்தால் அது தானாகவே சரி ஆகிவிடும்.

இதனை சரி செய்ய பட்டி வைத்தியம் உள்ளது அதனை பற்றி தெரிந்துகொள்ள  நினைத்தால் கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉 பாட்டி வைத்தியம்

இயற்கையான முறையில் தலைவலி குணமாக பாட்டி வைத்தியம் 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil