மூச்சு பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம் | Moochu Pidippu Patti Vaithiyam

Advertisement

மூச்சு பிடிப்பு நீங்க என்ன செய்ய வேண்டும்? | Moochu Pidippu Vaithiyam | Moochu Pidippu Treatment in Tamil

Moochu Pidippu Patti Vaithiyam: பொதுவாக மூச்சு பிடிப்பு ஏற்படும் போது யாராலும் சரியாக மூச்சுவிட முடியாது அதிகளவு அவஸ்த்தைகளையும், கஷ்டத்தை கொடுக்கும். மூச்சுவிட முயற்சி செய்தாலும் அதிகளவு வலி ஏற்படும். இதன் காரணமாகவே மூச்சு பிடிப்பு ஏற்படும் போது அனைவருமே மூச்சை மெதுவாக விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். பொதுவாக ஒருவருக்கு இந்த மூச்சுப்பிடிப்பு பிரச்சனை ஏற்பட பல காரணங்கள் இருக்கிறது அவை என்னென்ன? இந்த மூச்சு பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம் என்னென்ன இருக்கிறது என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

மூச்சு பிடிப்பு காரணம்:

பெரும்பாலும் அதிக எடை உள்ள பொருட்களை தூக்குவதன் மூலமாக இந்த மூச்சுப்பிடிப்பு பிரச்சனை ஏற்படுகின்றது. அதேபோல் அஜீரணம் சம்மந்தமான பிரச்சனை உள்ளவருக்கு இந்த மூச்சுப்பிடிப்பு பிரச்சனை ஏற்படுகின்றது. சளி, ஆஸ்துமா போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த மூச்சு பிடிப்பு பிரச்சனை ஏற்படலாம். அதேபோல் சிலருக்கு மார்பு எலும்புகளில் உள்ள தசை நாறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மூச்சுப்பிடிப்பு ஏற்படலாம். சரி இந்த மூச்சு பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம் பற்றி கீழே படித்தறியலாமா?

மூச்சு பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம் | Moochu Pidippu Treatment:

மஞ்சள் கடுகு:

முதுகில் மூச்சு பிடிப்பு நீங்க

சில நேரங்களிலில் திடீரென முதுகு பகுதியில் பிடித்துக்கொண்டு அதிகளவு வலியை ஏற்படுத்தும். சரியாக மூச்சுவிட முடியாது இதனை தசைப்பிடிப்பு என்று சொல்வார்கள். இந்த பிரச்சனையை சரி செய்ய மஞ்சள் கடுகு சிறந்த தீர்வினை அளிக்கின்றது. அதாவது தசைப்பிடிப்பிற்கு காரணமான தசைநரம்புகளைத் தளர செய்கிறது. எனவே இது போன்ற திடீரென முதுகு பகுதியில் தசைப்பிடித்து கொண்டால் 1 டீ ஸ்பூன் மஞ்சள் கடுகை எடுத்து சாப்பிட்டு வாருங்கள் நல்ல ரிலீவ் கிடைக்கும்.

மூச்சு பிடிப்பு நீங்க வைத்தியம்:

சுக்கு, பெருங்காயம், சாம்பிராணி, சூடம் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொள்ளுங்கள். பின் இவற்றை வடித்த கஞ்சியில் சேர்த்து நன்றாக கலந்து விடவும். இந்த கஞ்சியை சுடவைத்து வலி உள்ள இடத்தில் ஒரு நாளைக்கு மூன்று முறை அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் மூச்சுப்பிடிப்பு குணமாகும்.

ஆஸ்துமா உணவு வகைகள்

மூச்சு பிடிப்பு குணமாக பாட்டி வைத்தியம்:

சளி, ஆஸ்துமா மற்றும் வீசிங் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூச்சு பிடிப்பு ஏற்படுகின்றது என்றால் தினமும் காலை வேளையில் ஒரு கற்பூரவள்ளி இலையினை நன்கு மென்று சாப்பிடுங்கள். இவ்வாறு சாப்பிடுவதினால் நுரையீரல் நன்கு செயல்படும். மூச்சு பிடிப்பு நீங்கி நன்கு சுவாசிக்க முடியும்.

மூச்சு பிடிப்பு குணமாக பாட்டி வைத்தியம்:

Vayu Pidippu Remedy in Tamil – முறையற்ற உணவு முறையினால் சிலருக்கு வாயுத் தொல்லை அதிகளவு இருக்கும். இந்த வாய்வு தொல்லை காரணமாக சிலருக்கு மூச்சு நன்றாக பிடித்து கொள்ளும். வாய்வு காரணமாக மூச்சு பிடித்து கொண்டால் கொத்தமல்லி, புதினா, பெருங்காயம், பனைவெல்லம் ஆகிய நான்கையும் நன்கு இடித்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும், வயிற்று வலி குறையும், வாயு தொல்லையால் மூச்சி பிடிப்பு ஏற்பட்டிருந்தால் அதுவும் நீங்கும்.

சுடுநீர் ஒத்தடம்:-

பாதிக்கப்பட்ட இடத்தில் 72 மணி நேரத்தில் வெந்நீர் ஒத்தடம் தருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பாதிக்கப்பட்ட இடத்தில் சுடுநீர் ஒத்தடம் கொடுப்பதினால் அந்த பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தசைகளை நீட்டிக்கவும் குறைக்கவும் உதவி செய்கின்றது. ஆகவே ஒரு பாத்திரத்தில் சூடான நீரை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் துண்டை நனைத்து பிழிந்து கொள்ளுங்கள், பின் மிதமான சூட்டில் பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த துண்டை வைத்து 10 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கவும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை செய்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

எப்சன் உப்பு:-

பொதுவாக நமது உடலில் மக்னீசியத்தின் அளவு குறையும் போது தசைப்பிடிப்பு பிரச்சனையானது அதிகரிக்கும். எனவே எப்சம் உப்பு இந்த பிரச்சனையை சரி செய்ய பயன்படுகிறது. எப்சம் உப்பில் உள்ள மக்னீசியம் தசைகளை ரிலாக்ஸ் செய்ய பயன்படுகிறது. ஆனால் இதை 48 மணி நேரங்கள் கழித்தே செய்ய வேண்டும். ஒரு குளியல் டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பிக் கொள்ளுங்கள் அதில் 1-2 கப் எப்சம் உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள். பிறகு 20 நிமிடங்கள் வரை இந்த நீரில் குளிக்கவும். இவ்வாறு குளிக்கும் போது தசைப்பிடிப்புகளினால் ஏற்பட்ட வலிகள் அனைத்தும் பறந்தோடும்.

முதுகில் மூச்சு பிடிப்பு நீங்க:

முதுகில் மூச்சு பிடிப்பு நீங்க

தேவையான பொருட்கள்:

  1. சாதம் வடித்த கஞ்சி- 3 ஸ்பூன் 
  2. சுக்கு பொடி- 1 ஸ்பூன்
  3. பெருங்காயத்தூள்-1 ஸ்பூன் 
  4. கற்பூரம்-1 

செய்முறை:

ஸ்டேப்:1

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொண்டு, அதில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் சுக்கு பொடி- 1 ஸ்பூன்,
பெருங்காயத் தூள்-1 ஸ்பூன், சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும்.

ஸ்டேப்:2

பிறகு நாம் கலக்கி வைத்த கிண்ணத்தில், ஒரு கெட்டியான கற்பூரத்தை எடுத்து, அதை கையால் பொடியாக்கி, அந்த கிண்ணத்தில் சேர்க்க வேண்டும். நாம் எடுத்து வைத்த நான்கு பொருளையும் கிண்ணத்தில் சேர்த்த பிறகு, அதை நன்றாக கலந்துவிட வேண்டும்.

ஸ்டேப்:3

அடுத்ததாக அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, நாம்  கலந்து வைத்த கலவையை, ஒரு குளிக்கரண்டியில் சேர்த்து, அடுப்பில் எறியும் நெருப்பில் மேலோட்டமாக காட்ட வேண்டும்.  ஒரு 5 நிமிடம் காட்டிய பிறகு, அடுப்பை அணைக்கவும். இப்பொழுது  மருந்து தயார்.

மருந்தை பயன்படுத்தும் முறை  மற்றும் பயன்கள்:

நாம் தயார் செய்த மருந்தை மிதமான சூட்டில் இருக்கும் பொழுதே, மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டிருக்கும் பகுதியில் அழுத்தி தடவ வேண்டும். பிறகு  அரை மணி நேரம் கழித்து நீங்கள் துடைத்துக் கொள்ளலாம்.

இந்த மருந்தில் நாம் பயன்படுத்திய,  சாதத்தின் கஞ்சி ஆனது, முதுகு பகுதியில் இருக்கும் சதையை இழுத்து பிடித்து, மூச்சுப்பிடிப்பை சரி செய்ய உதவியாக இருக்கின்றது. இதனை நீங்கள் மூச்சி பிடிப்பு பிரச்சனைகள் ஏற்படும் பொழுது, இந்த மருந்தை பயன்படுத்தி வந்தால், 5 அல்லது 10 நிமிடத்தில் வலி நின்றுவிடும். 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 
Advertisement