தலைமுடி நரைக்காமல் இருக்க வேண்டுமா? அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..!

Advertisement

தலைமுடி நரைக்காமல் இருக்க வேண்டுமா? அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..!

Narai Mudi Varamal Thadukka – அன்பு தோழர்களுக்கு மற்றும் தோழிகளுக்கு எங்கள் பொதுநலம்.காம் குழுவின் அன்பான வணக்கம்.. இன்றைய கால கட்டத்தில் ஆண்கள், பெண்கள் இருவருமே சிறிய வயதிலேயே சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் நரை முடி.  சிறிய வயதிலேயே நரை முடி பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் மாறிவரும் லைப் ஸ்டையில் தான் முக்கிய காரணம் என்று சொல்லலாம். சரி இந்த பதிவில் தலைமுடி நரைக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

நரைமுடி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? – Narai Mudi Varamal Thadukka

No: 1

நரைமுடி பிரச்சனை வராமல் இருக்க விருப்பும் நபர்கள் இயற்கையான முறையில் காய்கறிகள் மற்றும் பழச்சாறுகள் மூலமும், சம்ப்ளிமென்ட்ஸ் மூலமும் போதுமான ஆன்டிஆக்சிடன்டுகள் எடுத்து கொள்ள வேண்டும்.

No: 2

புரோட்டின் நிறைந்த உணவுகளை அதிக அளவு உங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தலைமுடி இயற்கையான பிரகாசத்தையும், நிறத்தையும் பெறும்.

No: 3

தங்களது உணவு முறையில் எப்பொழுதும் அடர் பச்சை காய்கறிகள், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களில் உள்ள பழங்களை உங்கள் உணவில் அவசியம் சேர்த்து கொள்ளுங்கள்.

No: 4

எப்போதுமே கெமிக்கல்கள் கலக்கப்பட்ட கமர்ஷியல் ப்ராசஸ்டு ஹேர் டையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

No: 5

ஹேர் டை பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தால் வீட்டிலேயே தயார் செய்ய கூடிய இயற்கை ஹேர் டையை தலைக்கு முடிக்கு பயன்படுத்துங்கள்.

No: 6

தலை முடிக்கு பயன்படுத்து பொருட்களை வாங்குவதறகு முன் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

No: 7

சோடியம் லாரில் சல்பேட் போன்ற கடுமையான டிடர்ஜென்ட்ஸ் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றை தவிக்கவும், அதற்கு பதில் மென்மையான தயாரிப்புகளை தலைக்கு முடிக்கு பயன்படுத்துங்கள்.

No: 8

உங்கள் விரல் நுனியால் உங்கள் உச்சந்தலை மற்றும் தலைமுடியின் வேர் பகுதியை அவ்வப்போது மசாஜ் செய்யவும்.

No: 9

தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மட்டுமல்லாமல் தலை முடியின் வேர் பகுதியிலும் நல்ல இரத்த ஓட்டம் இருக்கும். இதனால் தலை முடி நல்ல வளர்ச்சி அடையும், நரை முடி பிரச்னையும் இருக்காது.

 No: 10

காப்பர், செலினியம், இரும்பு, கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் ஆசிட் போன்ற விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உணவுகளை உங்கள் உணவு முறையில் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

No: 11

செயற்கை வண்ணமூட்டப்பட்ட உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட கூடாது. முடிந்த வரை இந்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
தினமும் அலாரம் வைத்து தூக்கினாள் கூட 😱😱 இவ்வளவு பிரச்சனைகள் வருமா??

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement