நிலவேம்பு பயன்கள் | Nilavembu Benefits in Tamil

Advertisement

நில வேம்பு பயன்கள் | Nilavembu Medicinal Uses in Tamil

Nilavembu Uses in Tamil: இன்றைய காலத்தில் கொரோனா தொற்று பரவலானது அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் நில வேம்பு பயன்பாட்டானது அதிகமாகி விட்டது. நில வேம்பானது கசப்பு தன்மை கொண்டுள்ளதால் பல நோய்களை முடக்கும் ஆற்றல் கொண்டது. சித்த மருத்துவத்தில் சுரம், பித்த மயக்கம், வாத சுரங்கள், உடல் சோர்வு இன்னும் இது போன்ற பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது இந்த நில வேம்பு. இந்த பதிவில் பல மருத்துவ குணம் வாய்ந்த நில வேம்பினை பயன்படுத்தி என்னென்ன நோய்களை சரி செய்யலாம் என்பதை பற்றி படித்து தெரிந்துகொள்ளுவோம்..!

கபசுரக் குடிநீர் நன்மைகள்..!

நிலவேம்பு மருத்துவ குணங்கள்:

காயம் குணமாக:

Nilavembu Uses in Tamil

அடிபட்ட காயங்கள் உள்ளவர்கள் சிறிது மஞ்சளுடன் 10 கிராம் அளவிற்கு நிலவேம்பு பொடியினை சேர்த்து கலந்து அடிபட்ட காயத்தின் மீது நன்கு பூசி வர காயங்கள் குணமாகும். 

பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி நீங்க:

 Nilavembu Uses in Tamil

பெண்கள் மாதவிடாய் நேரத்தில் வயிற்று வலியால் மிகவும் அவதிப்படுவார்கள். மாதவிடாய் நேரத்தில் வயிற்று வலி வராமல் இருப்பதற்கு 10 நிலவேம்பு இலையினை 3 மிளகுடன் சேர்த்து நீரில் நன்றாக கொதிக்க வைத்து 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வர மாதவிடாயின் போது உண்டாகும் வயிறு வலி முற்றிலும் குணமாகும். (குறிப்பு: கர்ப்பிணி பெண்கள் தவிர்த்துக்கொள்வது நல்லது)

கை / காலில் எரிச்சல் நீங்க:

 Nilavembu Uses in Tamilவெயில் நேரத்தில் பெரும்பாலானோருக்கு கை, காலில் எரிச்சல் ஏற்படும். கை மற்றும் கால்களில் எரிச்சல் ஏற்பட்டால் 25 கிராம் நிலவேம்புடன் 400 மி.லி தண்ணீருடன் கலந்து 50 மி.லி வரும் வரை நன்கு காய்ச்சி குடித்து வந்தால் கை, காலில் உண்டான எரிச்சல் நீங்கும். 

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க சிறந்த வழி

தோல் நோய் நீங்க:

 Nilavembu Uses in Tamil

தோல் பகுதியில் சிலருக்கு வெண் புள்ளிகள், தோலில் ஏற்படும் அரிப்புக்கு 2 கிராம் நிலவேம்பு இலைப்பொடியை 48 நாட்கள் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது போன்ற தோல் நோய்க்கு நிலவேம்பினை நல்லெண்யெ உடன் கலந்து பூசி வர தோலில் நல்ல மாற்றம் கிடைக்கும். 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

 Nilavembu Uses in Tamil

நிலவேம்பு வேரினை எடுத்து அதிலிருந்து 1 டம்ளர் அளவிற்கு கஷாயம் செய்து காலை மற்றும் மாலை இரண்டு வேலையும் தொடர்ந்து 2 வாரங்கள் வரை சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 
Advertisement