தூங்கும் போது கை கால் மரத்துப்போதல் சரியாக..! Numbness in hands and feet treatment

Advertisement

Numbness in hands and feet treatment..!

Numbness in hands and feet treatment:- சிலருக்கு தூங்கும் போது கை, கால் மரத்துபோகும், கால் நரம்புகள் சுருட்டி கொள்ளும், இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீர் என்று கால் நரம்புகள் இழுத்து கொள்ளும். இதனால் அதிக வலிகள் ஏற்படும், தூக்கம் கூட பாதிக்கும். இந்த கை கால் மரத்து போகும் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது என்றால், ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது அல்லது ஒரே இடத்தில் அசையாமல் உறங்குவது இது போன்ற காரணங்களினால் உடலில் இரத்த ஓட்டம் என்பது தடைபடும்.

இதனால் கை கால் மரத்து போகும் பிரச்சனை சாதாரணமா ஏற்படும். இது மட்டும் இன்றி உடலில் தேவையான சத்துக்கள் இல்லை என்றாலும் இந்த கை கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும். சரி இந்த கை கால் மரத்து போகும் பிரச்சனை சரியாக சில வீட்டு வைத்தியம் (Numbness in hands and feet treatment) சிலவற்றை இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.

கை கால் மரத்துப்போதல் சரியாக பாட்டி வைத்தியம்

Numbness in hands and feet treatment

கை கால் மரத்துப்போதல் சரியாக பானம்:

தேவையான பொருட்கள்:

  • பால் – ஒரு கிளாஸ்
  • கசகசா – ஒரு ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  • ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
  • நாட்டு சர்க்கரை – 1 ஸ்பூன்

கை கால் மரத்துப்போதல் சரியாக பானம் செய்முறை:

Numbness in hands and feet treatment: 1

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அவற்றில் ஒரு கிளாஸ் பாலினை ஊற்றுங்கள், பால் கொதி வந்ததும் ஒரு ஸ்பூன் கசகசா சேர்த்து கலந்து விடவும். பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

பின் அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

பின் அடுப்பில் இருந்து இறக்கி பாலை  வடிகட்டி நன்றாக ஆறவிடுங்கள், பின் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

இந்த பாலினை இரவு தூங்குவதற்கு முன் அதாவது 10 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் அருந்த வேண்டும்.

பயன்கள்:

இந்த பானத்தை தொடர்ந்து அருந்திவருவதினால் கை கால் மரத்து போகும் பிரச்சனை சரியாகும்.

சிலருக்கு இரவு தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது திடீர் என்று கை கால்கள் சுருட்டி கொள்ளும் அல்லது நரம்புகள் இழுத்து கொள்ளும். அப்படிப்பட்டவர்கள் இந்த பானத்தை தினமும் அருந்தலாம் நல்ல பலன் கிடைக்கும்.

அதேபோல் கை கால் வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகளும் சரியாகும்.

அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..?

கை கால் மரத்துபோகுதல் பிரச்சனை சரியாக சில கை வைத்தியம்:

Numbness in hands and feet treatment: 2

கை கால் மரத்து போனால் அல்லது கை கால்களில் வலிகள் ஏற்பட்டால் சிறிதளவு தேங்காய் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி வலிகள் ஏற்படும் இடத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து விடுங்கள் இவ்வாறு செய்வதனால் பிரச்சனை சரியாகும்.

Numbness in hands and feet treatment: 3

அதேபோல் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின் அந்த நீரில் டவல் ஒன்றை எடுத்து நன்றாக நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து சுற்றிவிடுங்கள். டவலில் உள்ள சூடு ஆறும் வரை வைத்திருந்து, மறுபடியும் வெந்நீரில் நனைத்து பிழிந்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து சுற்றிவிடுங்கள் இவ்வாறு ஒரு 10 நிமிடங்கள் தொடர்ந்து செய்து வந்தால் கை கால் மரத்து போகும் பிரச்சனை சரியாகும்.

Numbness in hands and feet treatment: 4

கால் வலி சரியாக ஒரு பெரிய டப்பாவில் வெந்நீரை ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் கல் உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து தங்கள் கால்களை 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருங்கள் இவ்வாறு செய்வதினால் கால் வலி உடனே சரியாகும். மேலும் கை கால் மரத்து போகும் பிரச்சனையும் சரியாகும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement