பச்சை பட்டாணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா.?

பச்சை பட்டாணி பயன்கள்

வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆரோக்கிய பதிவில் பச்சை பட்டாணி சாப்பிடுவதால்  உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பச்சை பட்டாணியானது அதிக சத்துக்களை கொண்டுள்ளது. பொதுவாகவே காய்ந்த பட்டாணிகளை விட பச்சை பட்டாணிகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இந்த பச்சை பட்டாணியில் இருக்கும் சத்துக்களையும், இதை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்களையும் நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

உளுத்தம் பருப்பில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..!

பச்சை பட்டாணி சத்துக்கள்:

பச்சை பட்டாணி சத்துக்கள்

பச்சை பட்டாணியில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. இவை கலோரிகள் குறைந்த ஒன்றாக இருந்தாலும். இவற்றில் அதிகமான நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம், புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், வைட்டமின் A, B, E, K  மற்றும் ஒமேகா சிக்ஸ் கொழுப்பு அமிலங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

பச்சை பட்டாணி நன்மைகள் | Pachai Pattani Benefits in Tamil

பச்சை பட்டாணியை கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் கடையில் இருக்கும் பச்சை பட்டாணிகள் பச்சையாக இருப்பதற்காக அதில் சில இரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன. எனவே புதுமையாக இருக்கும் பச்சை பட்டாணிகளை சாப்பிடுவது நல்லது. பச்சை பட்டாணிகள் கிடைக்கவில்லை என்றால் காய்ந்த பட்டாணிகளை வாங்கி அதை ஊறவைத்து சாப்பிடுவது நல்லது.

உடல் எடையை குறைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் பச்சை பட்டாணியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலில் தேவையில்லாத கொழுப்புகளை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது.

செரிமான பிரச்சனை நீங்க:

செரிமான பிரச்சனை நீங்க

பச்சை பட்டாணியை உணவில் சேர்த்து உணவாக சாப்பிடும் பொழுது நல்ல பாக்டீரியாக்களின் அளவுகளை அதிகரிக்க செய்கிறது.  இதனால் உடல் மற்றும் வயிற்று பகுதிகளை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது. செரிமானம்  வேகமாக நடைபெறுவதற்கு உதவியாக இருக்கிறது.

மலச்சிக்கல் நீங்க

மலச்சிக்கல் நீங்க

ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்துகள் பட்டாணியில் இருந்து கிடைக்கிறது. பட்டாணியை தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது மலசிக்கல் போன்ற பிரச்சனைகள் படிப்படியாக குறைகிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் பச்சை பட்டாணியை சாப்பிடுவது நல்லது.

உயர் இரத்த அழுத்தம் குணமாக:

உயர் இரத்த அழுத்தம் குணமாக

பட்டாணியில் மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் இரத்த ஓட்டத்தை சீராக்கி, உயர் இரத்த அழுத்தம்  போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு உதவியாக இருக்கிறது. எனவே இதயத்தில் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் பச்சை பட்டாணி சாப்பிடுவது நல்லது.

 எலும்பு பலம் பெற:

 pachai pattani in tamil

இந்த பச்சை பட்டாணியில் பாஸ்பரஸ், வைட்டமின் k , கால்சியம் போன்ற சத்துக்கள் பட்டாணியில் அதிகமாக உள்ளதால் எலும்புகளின் வலிமையையும் அதனுடைய அடர்த்திகளையும் அதிகரிக்க செய்கிறது. அதோடுமட்டுமின்றி எலும்பு மண்டலங்களை பாதுக்காப்பாக வைப்பதற்கும் உதவியாக இருக்கிறது.

புரதச்சத்து குறைபாடு உள்ளவர்கள் பச்சை பட்டாணி பருப்பை வாரத்தில் மூன்று முறை வேகவைத்து சாப்பிட்டு வருவதால் உடலில் தேவையான புரதச்சத்துக்களும் அதிகரிக்கும். இதனால் தசைகள் வலிமையடைந்து  உடல் சோர்வு, உடல் வலி போன்ற பிரச்சனைகள் சரியாகுவதற்கும் உதவியாக இருக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்க:

புற்றுநோய் வராமல் தடுக்க

பட்டாணியில் நிறைந்திருக்கும் வைட்டமின் A, B,C, E போன்ற சத்துக்கள் உள்ளதால் கண்கள் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு உதவியாக இருக்கிறது.  பச்சை பட்டாணியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

பட்டாணியில் உள்ள ஒமேகா சிக்ஸ்,  கொழுப்பு அமிலங்கள் போன்றவை கர்ப்பிணி பெண்களுக்கும், கருவில் வளரும் குழந்தைக்கு எலும்பு வளர்ச்சி அடைவதற்கும், மூளை வளர்ச்சி அதிகரிப்பதற்கும் மருந்தாக இருக்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்