பல் வலி குணமாக பாட்டி வைத்தியம்..! Pal Vali Kunamaga..!

பல் வலி குணமாக

பல் வலி குணமாக..! Teeth Problems Home Remedies in Tamil..!

பிரசவ வலிக்கு அடுத்ததாக மிக கடுமையான வலியாக கருதப்படுவது பல் வலி ஒன்று என தங்களுக்கு தெரியுமா..? உண்மை தான் பல் வலியால் அவஸ்த்தை படுபவர்கள் நிறைய பேர் உண்டு. இந்த பல் வலி வந்து விட்டால் சரியாக உறங்ககூட முடியாது, பல் வலியுடன் தலைவலியும் சேர்த்து நமக்கு மரண அவஸ்த்தையை கொடுக்கும். மேலும் சரியாக சாப்பிட முடியாது, சரியாக பேச முடியாது. சரி இத்தகைய பிரச்சனையை சரி செய்ய வீட்டு வைத்தியம் நிறைய உள்ளது அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பல் வலி சரியாக சில இயற்கை வலிகள்..!

பல் வலி மருத்துவம் கிராம்பு:-

கிராம்பு

பற்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய கிராம்பு ஒரு சிறந்த கை வைத்திய பொருளாக விளங்குகிறது.

எனவே சொத்தை பல்லினால் ஏற்படும் வலியினை குறைக்க இரவு உறங்குவதற்கு முன் ஒரு கிராம்பினை எடுத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்து நன்றாக கடிக்க வேண்டும்.

கிராம்பில் உள்ள மூலிகை தன்மை பற்களில் உள்ள கிருமிகளை உடனடியாக அழித்து, பற்களில் ஏற்படும் வலிகளை உடனடியாக குணப்படுத்தும்.

பல் வலி வைத்தியம் புதினா:-

புதினா

அசைவ உணவுகளில் அதிகளவு பயன்படுத்தும் புதினா பல் வலி உடனே குணமாக பயன்படுகிறது. எனவே சிறிதளவு புதினாவை பல் வலி உள்ள இடத்தில் வைத்து நன்றாக மெல்ல வேண்டும். புதினாவின் சாற்றிற்கு பல் வலி பறந்தோடிவிடும்.

பல் சொத்து பாட்டி வைத்தியம்..!

பல் வலி உடனே குணமாக கொய்யா இலை:-

கொய்யா இலை

கொய்யா இலையில் ஆன்டி மைக்ரோபியல் என்னும் மூலக்கூறுகள் உள்ளது. இது  பற்களில் ஏற்படும் அழற்சியை குணப்படுத்தும். எனவே பல் வலி ஏற்படும் பொழுது 2 அல்லது 3 கொய்யா இலைகளை எடுத்து வாயில் போடு நன்றாக மெல்ல வேண்டும், இவ்வாறு செய்வதன் மூலம் பல் வலி உடனே குணமாகும்.

அல்லது 5 கொய்யா இலைகளை எடுத்து அரை கப் தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து, வடிகட்டி மிதமான சூட்டில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர பல் வலி குணமாகும்.

பல் வலி குணமாக இஞ்சி:-

இஞ்சி

பொதுவாக பல் வலி பிரச்சனையால் அடிக்கடி அவஸ்த்தை படுபவர்கள் சிறிதளவு இஞ்சி சாறை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளிப்பதன் மூலம் பல் வலி குணமாகும்.

பல் வலி நீங்க ஆல்கஹால்:-

ஆல்கஹால்

ஆல்கஹாலில் உள்ள திரவங்கள் பல் வலியை குறைக்கும் தன்மைவாய்ந்தது. எனவே சிறிதளவு கார்டன் பஞ்சியினை ஆல்கஹாவில் நனைத்து பல் வலி உள்ள இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பல் வலி குறைய ஆரம்பிக்கும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health tips tamil