கடலை மிட்டாய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

peanut candy benefits in tamil

கடலை மிட்டாய் நன்மைகள்..!| Peanut Candy Benefits in Tamil

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் நாம் பார்க்க இருப்பது கடலை மிட்டாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தான். பொதுவாக நம்மில் சிலருக்கு கடலை மிட்டாய் என்றாலே பிடிக்காது. பெரும்பாலும் அதனை சாப்பிடுவதை தவிர்த்துவிடுவோம்.

ஆனால் இந்த பதிவை முழுதாக படித்தீர்கள் என்றால் இனிமேல் கடலை மிட்டாயை வாங்கி சாப்பிடுவீர்கள். அப்படி இந்த கடலை மிட்டாயை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம்.

கடலை மிட்டாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

 kadalai mittai benefits in tamil

கடலை மிட்டாயில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன. இவற்றால் நமது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது,அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

முதலாவதாக தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலில் உள்ள கெட்ட  கொழுப்பை குறைத்து, நல்ல  கொழுப்பை அதிகமாக்குகிறது. இதனால் நமது இதயத்தில் அடைப்புகள் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.

அடுத்து இதில் உள்ள வைட்டமின் E, மெக்னீசியம் மற்றும் ஜிங்க் ஆகியவை நமது தோல்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் போக்குகிறது.

இதில் அதிகப்படியான புரதம் உள்ளதால்  நமது உடலுக்கு தேவையான புரதச்சத்தில் பாதி அளவு இதிலிருந்தே நமக்கு கிடைத்து விடுகிறது.

இந்த கடலை மிட்டாயில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சத்துக்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்  நமது உடலின் உள்ளுறுப்புகள் நன்கு புத்துணர்ச்சியுடன் செயல்பட பெரிதாக உதவுகிறது. மேலும் புற்றுநோய் வருவதையும்  தடுக்கிறது.

அடுத்து இதில் உள்ள மாங்கனீஸ் என்னும் சத்து நமது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகின்றது.

இந்த கடலை மிட்டாயில் உள்ள நார்ச்சத்து கர்ப்பிணி பெண்களுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கிறது.

இதில் உள்ள கால்சியம் சத்து நமது உடலின் எலும்புகளுக்கு பலத்தை அளிக்கிறது.

இந்த கடலை மிட்டாயில் உள்ள வைட்டமின் B3 நமது மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.

கோவில்பட்டி கடலை மிட்டாய் செய்வது எப்படி

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்