சப்போட்டா பழம் நன்மைகள் | Sapota Benefits in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் சப்போட்டா பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் என்று பார்க்கலாம். இந்த பழத்தின் அறிவியல் பெயர் அக்ரஸ் சப்போட்டா. இதனை ஆங்கிலத்தில் சிக்கோ என்று அழைப்பர். சப்போட்டேசியே எனும் அறிவியல் குடும்பத்தை சார்ந்தது. அமெரிக்கன்புல்லி என்ற சிறப்பு பெயரும் உள்ளது. கர்நாடகாவில் அதிகமான அளவு சப்போட்டா பழம் பயிரிடப்படுகிறது. சரி வாங்க சப்போட்டா பழம் நன்மைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
கண்பார்வை தெளிவாகும் – Sapota Benefits in Tamil:
- சப்போட்டா பழத்தில் அதிக அளவு விட்டமின் A உள்ளது. வாரத்தில் எல்லா நாட்களும் ஒரு சப்போட்டா பழத்தை சாப்பிடுவதன் மூலம் கண் பார்வை நன்றாக தெரிய உதவுகிறது மற்றும் சருமத்தை சீக்கிரம் முதுமை அடையாமலும் பார்த்து கொள்கிறது.
இதய நோய் வராமல் தடுக்க – Sapota Benefits in Tamil
- இதயநோயை குணப்படுத்துவதற்கு சப்போட்டா பழம் பெரிதும் உதவுகிறது. மேலும் ரத்தநாளங்களை சீராக வைக்கவும் மற்றும் ரத்த நாளத்தில் கொழுப்புகள் படிவதை தடுக்கவும் உதவுகிறது.
- கெட்ட கொழுப்புகள் உடலில் சேராமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
தூக்கமின்மையை போக்க – Sapota Fruit Benefits For Health in Tamil
- தேநீருடன் சப்போட்டா பழசாறை கலந்து குடிப்பதன் முலம் ரத்தபேதியை குணப்படுத்தும். இரவில் உறங்குவதற்கு முன்னர் சப்போட்டா பழத்தை ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் தூக்கமின்மையை தவிர்க்கலாம்.
Sapota Fruit Benefits in Tamil: ஆற்றலை அதிகரிக்க
- சப்போட்டா பழத்தில் இருக்கும் குளுக்கோஸ் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி மற்றும் ஆற்றலை கொடுக்கிறது. விளையாட்டு வீரர்கள் சப்போட்டா பழ ஜூஸை பருகுவது நல்லது.
- இவற்றில் இருக்கும் அதிக அளவு வைட்டமின் A மற்றும் B உடலை தொற்றிலிருந்து பாதுகாக்கவும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்கிறது.
புற்றுநோய் வராமல் தடுக்க – Sapota Fruit Benefits in Tamil:
- இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, ஊட்டச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் புற்று நோய் செல்கள் உடலில் வளருவதை தடுக்கவும், குடல் புற்றுநோய் மற்றும் வாய்க்குழி புற்றுநோய் வராமலும் பாதுகாக்க உதவுகிறது.
காச நோய் குணமாக – Sapota Juice Benefits in Tamil:
- சப்போட்டா பழத்தில் இருக்கும் வைட்டமின் A பெருங்குடல் சளி சவ்வை தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. Starting Stage Tuberculosis-ஐ குணப்படுத்தவும் உதவுகிறது.
சப்போட்டா பழம் நன்மைகள் – எலும்பு வளர்ச்சி அடைய:
- இந்த பழத்தில் இருக்கும் பாஸ்பரஸ், கால்சியம், மாங்கனீஸ் மற்றும் இரும்பு சத்து எலும்பை வலுப்படுத்த உதவுகிறது. மூட்டு வலி மற்றும் எலும்பு நோய் உள்ளவர்களுக்கு தேவையான சத்துக்களை கொண்டுள்ளது. மேலும் எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.
- சப்போட்டா பழத்தை ஜூஸ் செய்து அதனுடன் சுக்கு சித்தரத்தை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் இதில் இருக்கும் பாஸ்பரஸ், கால்சியம் எலும்பு வளர்ச்சி அதிகரிக்கும்.
Sapota Juice Benefits in Tamil – மலச்சிக்கலை போக்க:
- 100g சப்போட்டா பழத்தில் 5.6g அளவு நார்ச்சத்து உள்ளது ஆதலால் மலச்சிக்கலை குணப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
- சப்போட்டா பழத்தை சாப்பிட்டு முடித்த பின் 1 டேபிள் ஸ்பூன் அளவு சீரகத்தை மென்று சாப்பிடுவதன் மூலம் பித்தத்தை சரி செய்யவும் மற்றும் பித்த மயக்கத்தை சரி செய்யவும் பயன்படுகிறது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர சரும நோய்களை தவிர்க்கலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
Health Tips In Tamil |