சர்வாங்காசனம் நன்மைகள் | Sarvangasana Benefits in Tamil

Sarvangasana Benefits in Tamil

சர்வாங்காசனம் பயன்கள் | Sarvangasana Payangal in Tamil

உடற்பயிற்சியை தினம்தோறும் செய்து வந்தால் உடலில் பல நோய்கள் காணாமல் போகும். இன்றைய பதிவில் சர்வாங்காசனம் செய்வதால் உடலில் ஏற்படக்கூடிய நன்மைகளை தெரிந்துக்கொள்ளுவோம். சர்வம், அங்கம், ஆசனம் ஆகிய 3 வடமொழிச் சொற்களின் கூட்டுச் சொல்தான் சர்வாங்காசனம் எனப்படுகிறது. சர்வம் என்றால் அனைத்து என்றும் அங்கம் என்றால் உறுப்பு என்றும் ஆசனம் என்றால் நிலை என்றும் பொருள் வழங்கப்படுவதால் உடல் முழுவதும் பயிற்சியில் ஈடுபடும் முறைதான் சர்வாங்கசனம் ஆகும். இந்த சர்வாங்காசனத்தை முறையாக எப்படி செய்ய வேண்டும், இதனால் நமக்கு என்ன பலன்கள் உள்ளது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

யோகா வகைகள் மற்றும் பயன்கள்

சர்வாங்காசனம் செய்முறை:

 sarvangasana payangal in tamil

 • முதலில் கீழே ஒரு விரிப்பின் மீது இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்துப் படுக்கவும். அதன் பிறகு இரண்டு கைகளையும் பொறுமையாக உங்கள் பக்கவாட்டில் விரிப்பில் சாதரணமாக வைக்கவும்.
 • இப்போது கால் பகுதிகளை 90 டிகிரி அளவிற்கு உயர்த்தவும், இப்போது உள்ளங்கைகளை அழுத்தி இடுப்பை பூமியிலிருந்து உயர்த்தி கால்களை பூமியை நோக்கி முன்புறமாக கொண்டு வரவும்.
 • கைகளை இப்போது மடக்கி உள்ளங்கைகளால் இடுப்பை பிடித்து கால்களை ‌‌மீ‌ண்டு‌ம் 90 டிகிரிக்கும் உயர்த்த வேண்டும். உடம்பும் கால்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும்படி உடல் பளுவை தோள்பட்டைகளில் வைத்து சரி செய்ய வேண்டும். கைகளின் முட்டி பகுதிகள் இரண்டும் தரையை பார்த்தபடி இருக்க வேண்டும்.
 • அப்படியே அசையாமல் 50 அல்லது 100 எண்ணிக்கைகள் இருக்க வேண்டும். அடுத்து கண்களை திறந்து கால் விரல்களை பார்க்க வேண்டும்.
 • கால்களை பூமியை நோக்கி பின்புறமாக கொண்டு வந்து முதுகிலுள்ள கையைப் பிரித்து விரிப்பின் மீது மெதுவாக முதுகை வைத்து படுத்து கால்களை விரிப்பின் மீது வைக்க வேண்டும்.

சர்வாங்காசனம் பலன்கள்:

சர்வாங்காசனம் பலன்கள்

 • இந்த சர்வாங்காசனம் செய்வதால் உடலில் தொண்டைப் பகுதிக்கு அதிக இரத்தம் செலுத்தப்படுவதால் தைராய்டு சுரப்பியானது சீராக இயங்க உதவுகிறது. இரத்த ஓட்ட மண்டலம், மூச்சு மண்டலம், ஜீரண மண்டலம், உடல் கழிவை வெளியேற்றும் மண்டலம் ஆகியவை சர்வாங்காசனம் செய்து வருவதால் எந்த தடைகளும் இல்லாமல் சீரான முறையில் செயல்படுகிறது.
 • சர்வாங்காசனம் கிட்னி சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்வது மட்டுமல்லாமல் சிறுநீர் கோளாறுகளையும், இரத்தமின்மை வியாதியையும் நீக்குகிறது. மேலும் உடலில் அசுத்தமான இரத்தத்தை சுத்தம் செய்கிறது. தோல் சம்பந்தமான அனைத்து நோய்களும் விரைவில் குணமாகும். காது, மூக்கு, தொண்டை கோளாறுகளை சரி செய்கிறது.
 • அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யலாம். அதுபோல் மிகவும் மெலிந்து போன உடலை போதுமான அளவிற்கு எடையை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
 • சரும தோல்களில் ஏற்படும் முக சுருக்கங்கள், கிழத்தோற்றம், விரைப்பு ஆகியவற்றை போக்கி இளமையை அதிகரிக்க செய்யும்.
 • இந்த ஆசனம் செய்து வந்தால் தலைமுடி உதிர்வு பிரச்சனை சரியாகும், ஒரு சிலருக்கு இளம் வயதிலையே இளநரை பிரச்சனை இருக்கும். இளநரை பிரச்சனை இருப்பவர்கள் இந்த ஆசனத்தை தினமும் செய்யலாம்.
 • ஆஸ்துமா மூக்கடைப்பு, மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள், குடல்வால்வு நோய், மலச்சிக்கல், குடல் இறக்கம் எனும் ஹிரணியா, சர்க்கரை வியாதி, வெரிக்கோய்வெயின் எனும் கால் நரம்பு முடிச்சு வியாதிகள், தூக்கமின்மை, குதிகால் வலி மற்றும் பாதம் சம்பந்தப்பட்ட நோய்களை விரைவில் குணமடைய செய்யும்.
உடல் எடை குறைய யோகாசனம்

செய்யக்கூடாதவர்கள்:

 • உயர் ரத்த அழுத்தத்தால் சிரமப்படுபவர்கள் இந்த சர்வாங்காசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
 • கழுத்து, தோள்பட்டை, கீழ் முதுகு, இடுப்பு ஆகிய பகுதிகளில் கோளாறுகள் இருக்கும் போதும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
 • பெண்கள் மாதவிடாய் காலத்தில் இந்த ஆசனம் செய்ய வேண்டாம்.
 • சர்வாங்காசனம் செய்யும் போது உமிழ்நீரை வீழுங்கக் கூடாது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்