வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்..!

Updated On: August 12, 2022 12:57 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

ஆண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்..! 

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைக்கும் அனைவருமே அவர்களது உணவு முறையில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். உணவு முறையில் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். குறிப்பாக ஆண்கள் சில உணவு முறைகளை தவிர்ப்பது அவர்களுது ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் சிறந்தது. ஆண்கள் குறிப்பாக இந்த பதிவில் கூறப்பட்டுள்ள உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏன் இப்படி சொல்றோம்னா இந்த வகை உணவுகளை எடுத்துக்கொள்வதினால் ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் பாதிக்கும். ஆகவே கீழ் கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை ஆண்கள் அதிகம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சரி வாங்க அந்த ஆறு உணவுகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

Six Foods That Men Should Avoid Eating for Health in Tamil

சோயா உணவுகள்:

சோயா உணவுகள்

ஆண்கள் அவசியம் தவிர்க்க வேண்டிய உணவுகளில் ஒன்று தான் சோயா உணவுகள். இதனை ஆண்கள் அதிகளவு உட்கொண்டால் அவர்களது ஹார்மோன்களில் அதிகளவு ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்திவிடுமாம். ஆகவே ஆண்கள் இந்த சோயா உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

பாப்கார்ன்:

பாப்கார்ன்

பாப்கார்ன் சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக தான் இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விருப்பி சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ் வகையை சேர்ந்தது. இருப்பினும் இந்த பாப்கார்னில் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள், அதிக சோடியம் மற்றும் கார்சினோஜென்களால் நிறைந்திருக்கின்றன. எனவே சுபல செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படும் பாப்கார்னை சாப்பிடுவது, ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள் 👉 மீல் மேக்கரை ஆண்கள் அதிகம் சாப்பிட கூடாது! ஏன் தெரியுமா?

பதப்படுத்தப்பட்ட இறைச்சி:

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பொதுவாக  அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் பதப்படுத்திய உணவுகளை  சாப்பிடுவது உடலுக்கு கேடுவிளைவிக்கும் என்று. அதிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவது என்பது நமது உடலுக்கு நாமே பல நோயிகள்  உருவாவதற்கு வழிவகுகின்றோம். அதிலும் ஆண்கள் இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை  குறைத்துவிடும். ஆகவே ஆண்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

பிரெஞ்சு ப்ரைஸ்:

பிரெஞ்சு ப்ரைஸ்

மொறு மொறுப்பான ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்று தான் இந்த பிரெஞ்சு ப்ரைஸ் இது சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றாலும். ஆண்கள் இதனை சாப்பிடுவதினால் விந்தணு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

பால் சார்ந்த பொருட்கள்:

milk products

பொதுவாக பால் பொருட்கள் ஆரோக்கியமானது என்றால், இவற்றில் அதிகளவு கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது என்று அனைவருக்குமே தெரிந்திருக்கும். இந்த கொழுப்பு ஆண்களின் விந்தணுக்களை குறைந்துவிடுமாம். ஆகவே ஆண்கள் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது.

மது (Alcohol):

மது அருந்துவது நாட்டிற்கும், வீட்டிற்கும், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும் என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் ஆண்கள் அதனை பற்றி நினைப்பது இல்லை, அதேபோல் பெண்களும் கூட இப்போதெல்லாம் மது அருந்த ஆரம்பித்துவிட்டார்கள். எது என்னவே திருமணம் ஆனவர்கள் குழந்தைக்காக முயற்சிக்கும் அந்த காலகட்டத்தில் மது அருந்துவதை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் சிறந்தது. மது அருந்துவதை தவிர்ப்பது ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழி வகுக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now