தூங்கும் முன் இதை செய்யாதிங்க செஞ்சா குண்டாயிருவீங்க..!

Sleeping Tips in Tamil

தூங்குவதற்கு முன் செய்யக்கூடாத விஷயங்கள்..!

தூங்குவதற்கு முன் நாம் செய்யக்கூடாத விஷயங்கள் சில இருக்கின்றன. அந்த செயல்களை நாம் செய்வதால் நமது குண்டாகிடுவோமா.. அதுமட்டும் இல்லாமல் சில வகையான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்குமாம் அதை பற்றி தான் நாம் இந்த பதிவில் முழுமையாக படித்து தெரிந்துகொள்ள போக்கிரும்.

சரி வாங்க தூங்கும் முன் நாம் செய்யக்கூடாத சில விஷயங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

இரவு சாப்பிட்ட பிறகு அமர்ந்திருப்பது:

Sleeping Tips in Tamil – முதலி விஷயம் என்னெவென்றால் இரவு நாம் உணவருந்திய பிறகு சும்மாவே அமர்ந்திருக்க கூடாதாம். சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யலாம் அல்லது வீட்டில் இருக்கும் ஏதாவது வேலையை பார்த்துக்கொண்டு இருக்கலாம்.

நாம் ஏன் சும்மாவே அமர்ந்திருக்க கூடாது என்றால் நாம் சாப்பிடும் உறவு அவ்வளவு எளிதாக இரவு நேரங்களில் செரிக்காது இதனால் நம் உடல் பருமனும் அதிகரிக்கும் ஆகவே முடிந்த வரை இரவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் சிறந்து.

உப்பு:

Sleeping Tips in Tamil – அடுத்ததாக நாம் இரவில் அதிகம் சோடியம் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாதாம். அப்படி உப்பு அதிகம் உள்ள உணவுகளை நாம் எடுத்துக்கொண்டோம் என்றால் நமது உடலில் பொதுவாக மென்டைன் ஆகும் நீரானது அளவுக்கு அதிகமாக ரிட்டைன் ஆகுமாம்.

இதுமட்டும் இல்லாமல் நாம் பொதுவாக அதிகளவு உப்பு எடுத்துக்கொண்டோம் என்றால் நமது உடலில் கொழுப்பு அதிகரிக்குமாம் இதனால் நம் உடல் எடையும் அதிகரிக்குமாம்.

அதனால் எப்பொழுதுமே நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறித்து கொள்வது நல்லது.

சாப்பிட்ட உடனேயே உறக்கம்:

Sleeping Tips in Tamil – பொதுவாக பல இரவு சாப்பிட்ட உடனேயே உறங்க சென்றுவிடுவார்கள். இத்தகைய செயலை நிச்சயம் செய்யவே கூடாது.

ஏனென்றால் நம் உடலானது நன்கு ஆக்டிவாக இருக்கும் போது செரிமானம் ஆகும் தன்மையை கொண்டது.

அப்பிடி இருக்கும்போது நாம் இரவு சாப்பிட்ட உடனேயே தூங்கிட்டோம் என்றால் நாம் உடலில் கலோரிகள் அதிகமாகிவிடும், இதுமட்டும் இல்லாமல் Melatonin அதிகம் சுருக்கம் நேரத்தில் நாம் அதிகமாக உணவை எடுத்துக்கொண்டோம் என்றால் நமது உடல் எடையானது வெகு விரைவாக அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆகவே இரவு சாப்பிட்ட உடனேயே உறங்க கூடாது.

தலையணை இல்லாமல் தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்

காஃபி:

Sleeping Tips in Tamil – உறங்குவதற்கு முன்னதாக காஃபி குடிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அவ்வாறி செய்வது மிகவும் தவறு. காஃபியில் இருக்கும் கஃபைன் மூளையை சுறுசுறுப்பாக இயங்க செய்யும்.

நாம் உறங்குவதே மூளை ஓய்வெடுத்துக்கொள்ள தான். அப்படி இருக்கையில் உறங்க செல்லும் முன் நாம் குடிக்கும் காஃபி, நமது தூக்கத்தையும் கெடுத்து மூளையையும் குழப்பிவிடும். மேலும் நாம் சரியாக உறங்கவில்லை என்றாலும் நமது உடல் பருமனை அதிகரிக்க வழிவகுக்கும்.

இரவில் சாப்பிடாமல் உறங்குவது:

Sleeping Tips in Tamil – இரவில் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்று சாப்பிடாமல் உறங்க செல்லும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இன்றிலிருந்து இந்த தவறை செய்யவே செய்யாதீர்கள். நாம் இரவில் சாப்பிடாமல் இருந்தால் நமது குடல் இரவு முழுவதும் பட்டினியாகவே இருக்கும்.

இதுவே நமக்கு அளவுக்கு அதிகமான பசியை தூண்டிவிடும். அதாவது பசியை தூண்டும் ஹார்மோன்கள் அது அளவுக்கு அதிகமாக அதிகரிக்கும்.

இது அடுத்தநாள் முழுவதுமே நமது பசியை தூண்டிவிட்டுவிடும், நாமளும் பசியை போக்க அதிகளவு சாப்பிட்டுக்கொண்டே இருப்போம். அப்பரும் இதுவே நமது உடல் எடையை அதிகரிக்க காரணமாக அமைந்திடும்.

இரவில் அதிகமாக சாப்பிடட கூடாது:

Sleeping Tips in Tamil – சில எப்பொழுதுமே காலை, மதியம் இரவு என்று பார்க்காமல் அனைத்து வேளைகளிலும் அதிகாவு உணவுகளை சாப்பிடுவார்கள். காலை மற்றும் மதியம் இரண்டு வேளை நாம் அதிகமாக சாப்பிட்டாலும்.

இரவில் மட்டும் அதிகளவு உணவருந்த பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் ஏனென்றால் செரிமானம் ஆகாமல் நமது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்.

தண்ணீரை குடிக்க கூடாது:

Sleeping Tips in Tamil – உறங்குவதற்கு முன்னர் அதிகமாக தண்ணீர் குடிக்க கூடாது. அவ்வாறு குடிக்கும் போது சிறுநீர் கழிக்க அடிக்கடி எழும்ப வேண்டி வரும்.

இதனால் தூக்கம் பாதிக்கப்படும். சிலர் தூங்கும் ஆர்வத்தில் சிறுநீர் கழிக்காமல் அடக்குவர்.

அவ்வாறு செய்வதால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது. எனவே உறங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips