துத்தி கீரையின் மருத்துவ பயன்கள்..! Thuthi Keerai Benefits In Tamil..!
Thuthi Keerai Uses In Tamil/ thuthi leaf uses in tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் துத்தி இலையின் மகத்தான மருத்துவ குணங்களை பற்றித்தான் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த துத்தி இலையானது சாலை ஓரத்தில், கிராம புறங்களில், தரிசு நிலம் போன்ற இடத்தில் புதர்களாகவும், சிறிய செடிகளாகவும் வளர்ந்து காட்சியளிக்கும். துத்தி இலை செடியில் மஞ்சள் நிறத்தில் உள்ள மலர்கள் காட்சி தரும். இந்த துத்தி இலையானது இரண்டு வகையாக காணப்படுகிறது. ஒன்று பெருந்துத்தி மற்றொன்று சிருந்துத்தி என்று கூறுகிறார்கள்.
பெருந்துத்தி இலையில் அதிக மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. பெருந்துத்தி இலையில் நார்சத்துக்கள், பிளேவனாய்டு போன்ற வேதி பொருள்கள் அதிகமாக உள்ளது. இந்த இலை உடல் வெப்பத்தினால் ஏற்படும் அனைத்து வித நோய் பிரச்சனைகளையும் சரி செய்யும் ஆற்றல் கொண்டது. இந்த துத்தி இலையை கூட்டு முறையிலும் அல்லது சூப் செய்தும் சாப்பிடலாம். எந்த முறையில் துத்தி கீரையினை சாப்பிட்டாலும் நம் உடலுக்கு அதிக பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. சரி வாங்க துத்தி கீரை (thuthi ilai uses in tamil) சாப்பிடுவதன் மூலம் என்னென்ன நோய்களை குணப்படுத்தலாம் என்று விரிவாக படித்தறியலாம் வாங்க..!
மூல நோயை குணப்படுத்தும் துத்தி:
மூல நோயில் அதாவது உள் மூலம், வெளி மூலம், இரத்த மூலம் போன்ற மூல நோய்களை துத்தி இலையினை சாப்பிட்டு வருவதால் எளிமையாக குணப்படுத்திவிடலாம்.
வயிற்று சம்மந்த பிரச்சனையை சரி செய்யும் துத்தி:
அல்சரால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. வயிற்று எரிச்சல், வயிற்று புண், அடிக்கடி ஏப்பம், வாந்தி வருதல், அல்சர் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் உணவில் இந்த துத்தி கீரையினை சேர்த்து கொண்டால் நாளடைவில் வயிற்று சம்மந்த அனைத்து நோய்களும் விரைவில் குணமடையும்.
கல்லீரல் நோயை குணமாக்கும் துத்தி:
கல்லீரல் நோய் உள்ளவர்கள் இந்த துத்தி கீரையினை சாப்பிட்டு வர விரைவில் கல்லீரலானது குணமாகும். துத்தியானது கல்லீரலை நன்கு வலுப்படுத்தி, கல்லீரலின் செயல்பாட்டை சரியான நிலையில் வைத்து, கல்லீரல் பகுதிக்கு எந்த வித பாதிப்புகளும் வராமல் துத்தியானது தடுத்து நிறுத்தும்.
சர்க்கரை நோயை தடுக்கும் துத்தி கீரை:
துத்தி இலை பயன்கள்: துத்தி கீரை சாப்பிடுவதால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவினை குறைக்க செய்யும். சர்க்கரை நோயிலுருந்து முற்றிலுமாக துத்தி கீரையானது விடுவிக்க செய்யும்.
குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யும் துத்தி:
ஆண்களின் விந்து அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க செய்யும் துத்தி கீரை. விந்து அளவானது குறைவாக இருந்தால் துத்தியானது அதனை சீராக வைத்து குழந்தை பேரினை உண்டாக்க செய்யும்.
இந்த துத்தி கீரையானது உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடியது.
குறிப்பு:
thuthi leaf health benefits in tamil: துத்தி கீரையை வாரத்தில் இரண்டு முறை சாப்பிடலாம். துத்தி கீரையில் புளி சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டு வருவது நல்லது.
துத்தி கீரையுடன் சிறிதளவு நெய் சேர்த்து சமைக்க வேண்டும்.
துத்தி கீரையினை திருமணம் ஆன தம்பதிகள் இருவரும் ஒரு தேக்கரண்டி அளவிற்கு துத்தி கீரையின் சாற்றில் தேன் சேர்த்து 3 முதல் 6 மாதங்கள் வரை சாப்பிட்டு வர எந்த வித பிரச்சனையும் இன்றி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |