உடலில் உள்ள நச்சுக்களின் அறிகுறி..! Symptoms Of Body Toxins..!
Toxins In The Body Symptoms: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் உடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள் பற்றித்தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். சிலருக்கு நச்சுக்கள் அதிகரிப்பதால் உடலில் பல செயல்திறன் பாதிக்கப்படுகிறது. நச்சுக்கள் அதிகரிக்காமல் உடலை நாம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். உடல் எடை கூடுவது, சரும பாதிப்புகள் ஏற்படுவது போன்ற அறிகுறிகளை வைத்தே நச்சுக்கள் அதிகரிப்பதை நாம் அறிந்து கொள்ளலாம். சரி வாங்க நண்பர்களே உடலில் நச்சுக்கள் அதிகரிப்பதன் அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்..!
![]() |
உடல் சூட்டினால் நச்சுக்கள் அதிகரிக்கும்:
உடலில் நச்சு தன்மை அதிகரிக்கும் போது கல்லீரலின் செயல்பாடுகள் மிக கடினமாக செயல்பட துவங்கும். இதனால் உடலில் வெப்ப நிலை அதிகரிக்க செய்யும்.
கொழுப்பு நிறைந்த தொப்பையால் கூட நச்சுக்கள் அதிகரிக்கலாம்:
நச்சுக்கள் உடலில் அதிகரிக்கும் போது வளர்சிதை மாற்றத்தின் செயற்திறன் குறைய ஆரம்பம் ஆகும். இதன் விளைவுகளாக வயிற்றில் தேவையற்ற கொழுப்புகள் சேர தொடங்குகிறது. மேலும் இதனால் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உடல் சோர்வினால் ஏற்படும் நச்சு அதிகரிப்பு:
நச்சுக்கள் உடலில் அதிகரித்து கல்லீரலின் செயல்பாட்டை கடினமாக்குவதன் காரணமாக தான் நமது உடலில் வளர்சிதை செயல்பாட்டினை குறைக்கிறது.
இந்த வளர்சிதை குறைபாட்டினால் அடிக்கடி உடல் சோர்வு, மயக்கம் போன்ற விளைவுகள் ஏற்படும். இதன் மூலம் நம் உடலில் நச்சுக்கள் அதிகரிப்பதை எளிமையாக அறிந்துக்கொள்ளலாம்.
நச்சுக்களின் அறிகுறியான தலை வலி:
நச்சுக்கள் மூளை பகுதியில் சென்று அதிகரிக்கும் போது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவினை குறைக்கிறது. இந்த விளைவினால் கவன குறைபாடுகள், தலை வலி போன்றவை வர காரணமாக உள்ளது.
![]() |
தூக்கமின்மை பிரச்சனை:
உடலில் நச்சுக்கள் அதிகரித்து வருவதன் அறிகுறியாக தூக்கமின்மையினை சொல்லலாம். இதனால் உடலில் இரத்த ஓட்டம் குறைய வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சரும பிரச்சனைகள்:
உடலில் நச்சுக்கள் அதிகரிப்பதன் அறிகுறியாக சருமத்தில் அரிப்புகள், பரு போன்ற பிரச்சனைகள் வருவதை எளிமையாக கண்டறியலாம்.
நாக்கின் நிறம் மாற்றம் அடைதல்:
உங்கள் நாக்கின் மேல் புறத்தில் மஞ்சள், வெள்ளை, கருநீலம் போன்ற நிறங்கள் தோன்றினால் உடலில் நச்சுக்கள் அதிகரித்து வருகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்.
பித்தப்பை கோளாறுகள்:
பித்தப்பை கோளாறு இருக்கிறது என்றால் உடலில் நச்சு தன்மை அதிகரித்து வருகிறது என்று அறிகுறியாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.
![]() |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |