வாய் துர்நாற்றம் நீங்க என்ன செய்ய வேண்டும்? | Vai Thurnatram Tips in Tamil

bad breath remedies in tamil

Bad Breath Remedies in Tamil

Vai Thurnatram Tips in Tamil:- பொதுவாக பலர் வாய் துர்நாற்றம் என்பது பல் நன்றாக துலக்கினால் வராது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அது மட்டும் முக்கிய காரணம் கிடையது. நமது வயிற்றில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுப்பழக்கம் தவிர ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கத்தால் மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் 10% மக்களுக்கு பிற உடல் சார்ந்த பிரச்சனைகளினால் இந்த வாய் துர்நாற்றம் வரும். அதாவது கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் வருகிறது. வயிற்றில் அல்சர் இருப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் பிரச்சனை ஏற்படும். என்ன தான் அழகாக ஆடை அணிந்து மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தாலும் நம் வாயிலிருந்து வரும் ஒரு விதமான துர்நாற்றத்தால், யாராலும் அருகில் கூட அமர முடியாது, வெளியில் சொல்லவும் முடியாத ஒரு விதமான மன சங்கடங்களை உண்டாக்கும். சரி இந்த வாய் துர்நாற்றம் நீங்க நாம் என்ன செய்ய வேண்டும்.

வாய் துர்நாற்றம் நீங்க டிப்ஸ் | Vai Thurnatram Tips in Tamil

சோம்பு:

சோம்பு

சோம்பு பொதுவாக நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்கும் சக்தியை மேம்படுத்தும் தன்மை கொண்டது. ஆகவே தினமும் சாப்பிடுவதற்கு முன் சிறிதளவு சோம்பை வெறும் வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிடுங்கள். பின் உணவருந்த செல்லுங்கள் இவ்வாறு செய்வதினால் நாம் சாப்பிடும் உணவு நன்கு ஜீரணம் ஆகும். அதேபோல் துர்நாற்றம் வராது.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

ஏலக்காய்:

ஏலக்காய்

ஏலக்காய் பொதுவாக நல்ல நறுமணம் வீசும் உணவு பொருள். உணவின் மனத்தை அதிகரிக்க ஏலக்காய் அவ்வப்போது சாப்பிடுவதாலும் வாய் துர்நாற்றம் கட்டுப்படுத்த முடியும். ஆகவே சாப்பிட்ட பிறகோ அல்லது மற்ற சாதாரண நேரங்களிலோ ஒரே ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் துர்நாற்றம் மெல்ல மெல்ல குறைந்து விடும்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து தொடர்ந்து வாய் கொப்பளித்து வந்தாலும் துர்நாற்றம் மெல்ல மெல்ல குறையும்.

துளசி:

துளசி

துளசி ஒரு சிறந்த மூலிகை செடி, பலவகையான ஆரோக்கிய பிரச்சனைக்கு சித்த மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வாய் துர்நாற்றம் பிரச்சனைக்கு சிறந்த மூலிகை செடி என்று சொல்லலாம். எனவே  வீட்டில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய துளசியை எடுத்து வாயில் போட்டு மெதுவாக மென்று வர மெல்ல மெல்ல துர்நாற்றம் குறைய தொடங்கும்.

எலுமிச்சை சாறு:

lemon juice

வாய் துர்நாற்றம் பிரச்சனையால் தினமும் அவஸ்த்தைப்படுபவர்கள் தினமும் உணவுக்கு பின்பு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றை அருந்துங்கள், இவ்வாறு லெமன் ஜூஸ் அருந்துவதினால் துர்நாற்றம் வருவதை முற்றிலும் தடுக்கலாம் அல்லது ஆரஞ்சு பழத்தையும் சாப்பிட்ட பிறகு எடுத்துக்கொண்டால் துர்நாற்றம் வருவதை தடுக்கலாம்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்