வஜ்ராசனம் செய்வது எப்படி? மற்றும் அதன் பயன்கள் | Vajrasana Benefits in Tamil

வஜ்ராசனம் பயன்கள் | Benefits of Vajrasana in Tamil

Vajrasana Benefits in Tamil: யோகா செய்வதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. தினமும் யோகா செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அப்படி உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் ஆசனங்களில் ஒன்று தான் வஜ்ராசனம். சமஸ்கிருத மொழியில் இருந்து எடுக்கப்பட்ட சொல் வஜ்ராசனம். வஜ்ரா என்பதற்கு இடியேறு என்று பொருள். வஜ்ராசனம் செய்யும் முறை மற்றும் இந்த ஆசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

வஜ்ராசனம் பயன்கள்:

 • உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் வலுப்படுத்த உதவும். எந்த ஒரு ஆசனமும் சாப்பிட்டவுடன் செய்யப்படுவதில்லை. இந்த ஆசனம் ஜீரணத்திற்கு உதவுவதால் சாப்பிட்டவுடன் இந்த ஆசனம் செய்வது நல்லது.

முதுகு வலியை சரி செய்ய – Vajrasana Benefits in Tamil:

வஜ்ராசனம் பயன்கள்

 • இந்த ஆசனத்தை செய்வதால் சியாட்டிகாவால் ஏற்படும் வலி மற்றும் கீழ் முதுகின் தசையை வலுப்படுத்தி முதுகு வலியை போக்க உதவுகிறது.

வாத வலியை சரி செய்ய – வஜ்ராசனம் பயன்கள்:

வஜ்ராசனம் பயன்கள்

 • தொடை, கால் தசைகள் நெகிழ்வுத் தன்மை மற்றும் இடுப்பு, முழங்கால், கணுக்கால் சுற்றியுள்ள தசைகளை அதிகரிப்பதன் மூலம் வாத வலியை நீக்க உதவுகிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்வதால் குதிகால் வலி ஏற்படுவதற்கு காரணமான கல்கேனியல் ஸ்பர்ஸ் என்பதை சரி செய்யவும் மற்றும் கீல்வாத வலியை சரி செய்யவும் உதவுகிறது.

இடுப்பு வலிகளை சரி செய்ய – Vajrasana Benefits in Tamil:

வஜ்ராசனம் செய்வது எப்படி

 • இடுப்பில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கும், இடுப்பு தசைகளை வலுப்படுத்தவும் இந்த ஆசனம் பெரிதும் உதவுகிறது. கர்ப்ப காலத்திற்கு பிறகு ஏற்படும் சிறுநீர் அடங்காமையை நீக்கவும் உதவுகிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மற்றும் பிரசவ வலிகளை சரி செய்யவும் உதவும்.

இரத்த அழுத்தத்தை குறைக்க – வஜ்ராசனம் பயன்கள்:

வஜ்ராசனம் செய்வது எப்படி

 • உடலில் ரத்த அழுத்தம் உயராமல் பாதுகாக்க உதவுகிறது.
 • இதய நோய்களை சரி செய்ய பயன்படுகிறது.
 • மன அழுத்தம், மனதில் ஏற்படும் குழப்பம், பதட்டம் போன்றவற்றை நீக்கி மனதை அமைதியாக்க உதவுகிறது.

நல்ல உறக்கம் வருவதற்கு – வஜ்ராசனம்:

வஜ்ராசனம் செய்யும் முறை

 • இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு இந்த ஆசனம் பெரிதும் உதவும். நல்ல தூக்கம் வருவதற்கு வஜ்ராசனம் பயன்படும்.

உடல் எடையை குறைக்க – வஜ்ராசனம்:

வஜ்ராசனம் செய்யும் முறை

 • உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆசனம். இந்த ஆசனம் செய்வதால் நாம் உண்ணும் உணவை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.
 • செரிமானம் அதிகரிப்பதால் தொப்பையை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவுகிறது.
 • மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது

வஜ்ராசனம் செய்வது எப்படி? – வஜ்ராசனம் செய்முறை:

வஜ்ராசனம்

 • இந்த ஆசனத்தை செய்வதற்கு முன்னர் தரையில் விரிப்பை போடவும்.
 • விரிப்பில் இரண்டு கால்களையும் நீட்டி உட்காரவும். காலை மடித்து உங்கள் குதிகாலில் பிட்டத்தை வைத்து உட்காருங்கள். முழங்கால் இரண்டும் இணைந்து இருக்க வேண்டும்.
 • இரண்டு கால்களின் தொடைகளும் உங்கள் கால்களில் இருக்க வேண்டும். கால்களின் பெருவிரல் ஒன்றை ஒன்று தொட வேண்டும்.
 • உங்கள் முதுகை வளைக்காமல் நிமிர்ந்து நேராக வைத்துக்கொள்ளவும். உங்கள் தலை மற்றும் பார்வை நேராகவும் இருக்க வேண்டும். உங்கள் பார்வை முன்னோக்கி இருக்க வேண்டும்.
 • கைகள் இரண்டையும் முழங்கால் மீது வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியே விடவும். உங்கள் கவனம் முழுவதும் மூச்சை இழுத்து விடுவதில் இருக்க வேண்டும்.
 • இதே போன்று ஒரு நாளைக்கு 30 நிமிடம் வஜ்ராசனத்தை செய்யலாம்.

வஜ்ராசனம் செய்ய கூடாதவர்கள்:

 • முழங்கால் வலி, முழங்கால் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ஸ்லிப் டிஸ்க் போன்ற முதுகு பிரச்சனை உள்ளவர்கள், கால், கணுக்கால், முழங்கால்களில் வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளவர்கள் வஜ்ராசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
 • வஜ்ராசனத்தை கர்ப்பிணி பெண்கள் செய்யலாம், ஆனால் செய்யும்பொழுது முழங்கால்களுக்கு அதிக இடைவெளி இருக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வயிறுக்கு அழுத்தம் ஏற்படாது.
 • யோகா பயிற்சியாளரின் உதவியுடன் மட்டுமே குடலிறக்கம் மற்றும் குடல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் வஜ்ராசனத்தை மேற்கொள்ள வேண்டும்.
யோகா வகைகள் மற்றும் பயன்கள்
உடல் எடை குறைய யோகாசனம்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்