வலிப்பு நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? Valippu Treatment in Tamil..!
Fits Treatment in Tamil:- பொதுவாக வலிப்பு நோய் என்பது மூளை மற்றும் நரம்பு சம்மந்தப்பட்ட ஒரு நோயாகும். தலைவலிக்கு அடுத்ததாக பெரும்பாலானவர்கள் இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்படுகின்றன. இந்த வலிப்பு நோய் பொறுத்தவரை சிறிய குழந்தைகள், இளம்வயதினார்கள் மற்றும் முதியவர்கள் என்று அனைவரும் சந்திக்கின்றன. சரி இந்த பதிவில் வலிப்பு நோய் என்றால் என்ன?, வலிப்பு நோய் வர என்ன காரணம்? வலிப்பு வராமல் இருக்க நாம் செய்ய வேண்டும்?, வலிப்பு நோய் அறிகுறிகள் என்னென்ன போன்ற விவரங்களை இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.
வலிப்பு நோய் என்றால் என்ன?
வலிப்பு என்பது ஒரு நோயின் அறிகுறி மட்டுமே தவிர அது நோய் அல்ல. அதாவது மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ, அதிக காய்ச்சல், உயர் இரத்த அழுத்தத்தால் உடல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிகுறிகளாக தெரிவிப்பதற்கே வலிப்பு ஏற்படுகிறது.
ஒருவருக்கு வலிப்பு ஏற்படும் பொழுது அவர்களுக்கு கை மற்றும் கால்கள் இழுத்துக்கொள்ளும், வாயில் இருந்து நுரை தள்ளும், கண்கள் மேலே சுழன்று, நாக்கு பற்களுக்கிடையே சிக்கி கடிப்பது, வாயில் இருந்து ரத்தம் வலிந்து, சுயநினைவை இழந்து தரையில் கிடப்பார்கள். இருப்பினும் சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சரியாகி கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவுக்கு வருவார்கள் இதற்கு பெயர் தான் வலிப்பு.
வலிப்பு எதனால் ஏற்படுகிறது?
பொதுவாக நம் உடலில் மூளை மற்றும் நரம்பு செல்களுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்வதற்காக இயல்பாகவே நம் உடலில் மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது.
ஏதாவது ஒரு சில காரணத்தினால் மூளையில் உண்டாகிற அதிக அழுத்தத்தின் காரணமாக இந்த மின்சாரம் அபரிவிதமாக உருவாகி ஒரு மின் புயல் போல் கிளம்புகிறது. இது நரம்பு வழியாக உடல் உறுப்புகளுக்கு கடத்தப்படும் பொழுது அந்த சமயத்தில் உடல் உறுப்பு இயக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக கை மற்றும் கால்கள் இழுத்து கொண்டு வலிப்பு பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
சைனஸ் குணமாக பாட்டி வைத்தியம்..! |
வலிப்பு நோய் வருவதற்கான காரணங்கள்:-
- தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித் தொற்று, புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சி காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள்.
- உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே.
- வலிப்பு உள்ளவர்களின் உறவினர்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் பரம்பரையாகவும் வலிப்பு வரலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
- கர்ப்பிணிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்தால், பிரசவக் காலத்தில் வலிப்பு வருவதுண்டு.
- பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்தக்குழாய் மாற்றங்கள், அல்சைமர் நோய் (Alzheimer’s disease), ரத்தத்தில் தட்டணுக்கள், சோடியம் அளவு குறைதல் போன்ற காரணங்களால் வயதானவர்களுக்கு வலிப்பு ஏற்படக்கூடும்.
- சிலருக்கு மன உளைச்சல் காரணமாக Pseudo seizure வருவதும் உண்டு. பல நேரம் எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாத வலிப்புகளே அதிகமாகக் காணப்படும்.
வலிப்பு நோயின் அறிகுறிகள் – Fits Symptoms in Tamil:-
திடீர் தலைவலி, உடல் சோர்வு, குழப்பமான மனநிலை, பதட்டம், பயம், வியர்த்தல்,
கண்கள் கூசுவது அல்லது மங்கலான பார்வை, உடலில் மதமதப்பு, நடை தடுமாற்றம்,
இந்த அறிகுறிகள் தென்பட்டால் வலிப்புப் பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்குச் சென்று படுத்துக்கொள்வது நல்லது.
அப்படியும் வலிப்பு வந்துவிட்டது என்றால், அருகில் உள்ளவர்கள் இவ்வாறு செய்யுங்கள்:
அவரை இடது பக்கமாகச் சாய்த்துப்படுக்க வையுங்கள்.
சட்டைப் பொத்தான், இடுப்பு பெல்ட் போன்றவற்றைத் தளர்த்த வேண்டும், நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய்யுங்கள்.
முகத்தில் கண்ணாடி அணிந்திருந்தால், வாயில் செயற்கைப் பல் இருந்தால் அவற்றை அகற்றி விடுங்கள். அவர் கையில் ஏதேனும் பொருள் இருந்தாலும் அகற்றி விடுங்கள்.
மேலும் அவர் படுத்திருக்கும் இடத்தைச் சுற்றி கூர்மையான பொருட்கள் இருந்தால், அவற்றையும் அகற்றி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் வலிப்பின்போது பாதிக்கப்பட்டவரின் உடலில் காயம் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
மின்விசிறி / கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள்.
எலும்பு தேய்மானம் குணமாக இதை விட வேறு மருந்து தேவை இல்லை..! |
குறிப்பு:-
ஒருவருக்கு வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் அது உயிருக்கே ஆபத்து. உடனே அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சையை அளிக்க வேண்டியது அவசியம்.
அதன் பின் சிறப்பு மருத்துவரிடமோ அல்லது பாதிக்கப்பட்டவர் ஏற்கனவே சிகிச்சை பெறும் மருத்துவரிடமோ அழைத்துச் செல்லுங்கள்.
வலிப்பு வந்தவருக்குச் சிகிச்சை பெறச் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்து தரும் விளைவுகள் உடலில் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |