வைட்டமின் ஏ உணவு வகைகள் | Vitamin A Foods in Tamil

Vitamin A Foods in Tamil

வைட்டமின் ஏ உள்ள காய்கறிகள் | Vitamin A Rich Foods in Tamil

Vitamin A Foods in Tamil: நம்முடைய உடல் எப்போதும் ஆரோக்கியமாய் இருக்க சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். முக்கியமாக சரும அழகு முதல் கூந்தல் வளர்ச்சி வரை வைட்டமின் ஏ சத்து மிகவும் முக்கியம். கண் பார்வை குறைபாட்டினை தடுக்க வைட்டமின் ஏ சத்து பயன்படுகிறது. வைட்டமின் ஏ நோய்களை உருவாக்கும் ஆன்டிஜென்களை எதிர்த்து போராடும் லிம்போசைட்டுகளை அதிகரிக்கிறது. ஏனெனில் இவைகள் தான் உடலில் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது. இந்த பதிவில் வைட்டமின் ஏ நிறைந்துள்ள ஒரு சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அது என்னென்ன உணவுகள் என்று படித்து தெரிந்து கொண்டு, அந்த உணவுகளை இனிமேல் அதிகம் சாப்பிட ஆரம்பியுங்கள்.

வைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்

வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள கேரட்:

வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள கேரட்கேரட் அதிக ஆரோக்கியம் சத்து நிறைந்துள்ள காய்கறி வகையாகும். கேரட்டில் பீட்டா கரோட்டின் என்ற சத்து அதிகளவு காணப்படுகிறது. வைட்டமின் ஏ சத்து அதிகமாக கேரட்டில் உள்ளது. 100 கிராம் கேரட்டில் 836mcg வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. கேரட் சாப்பிடுவதால் கண் பார்வைத்திறன் அதிகாரிக்கும். வைட்டமின் ஏ சத்து அதிகரிக்க உணவில் அதிகமாக கேரட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் ஏ சத்து நிறைந்த ஈரல்:

வைட்டமின் ஏ சத்து நிறைந்த ஈரல்ஆடு, கோழி போன்றவற்றின் ஈரலில் கூட அதிகமாக வைட்டமின் ஏ மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளது. எனவே ஆட்டு கறியின் ஈரல் மற்றும் கோழிக்கறியின் ஈரலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர, உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்துக்கள் கிடைக்கும்.

வைட்டமின் ஏ நிறைந்த கடல் வகை உணவுகள்:

கடல் வகை உணவுகள்100 கிராம் டுனா மீனில் 50% வைட்டமின் ஏ சத்து அதிகளவு நிறைந்துள்ளது. எனவே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த கடல் சார்ந்த உணவுகள் உடல் ஆரோக்கியத்தைமேம்படுத்துகிறது.

வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்

வைட்டமின் ஏ அதிகமுள்ள சர்க்கரைவள்ளி கிழங்கு:

வைட்டமின் ஏ அதிகமுள்ள சர்க்கரைவள்ளி கிழங்குகிழங்கில் பல வகையான கிழங்கு வகைகள் உள்ளன. அதிலும் சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ சத்தானது அதிகமாக உள்ளது. சர்க்கரைவள்ளி கிழங்கில் பீட்டா கரோட்டீன் அதிகமாக இருப்பதால், உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் வைட்டமின் ஏ அதிகமாக கிடைக்கிறது.

வைட்டமின் சத்தான கீரைகள்:

வைட்டமின் சத்தான கீரைகள்

குறைந்த அளவு கலோரிகளே பச்சை இலை காய்கறிகளில் இருக்கிறது. மேலும் பச்சை இலை காய்கறிகள் தான் அதிகளவு வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பச்சை இலை காய்கறிகள், கீரைகள் போன்றவற்றில் வைட்டமின் ஏ சத்தினை தவிர பொட்டாசியம், கால்சியம், புரதம் மற்றும் மாங்கனீசு போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்