7 நாட்களில் உங்கள் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ் இதோ உங்களுக்காக..!

Weight Loss Drink in 7 Days in Tamil

7 நாட்களில் தொப்பை குறைய டிப்ஸ் – Weight Loss Drink in 7 Days in Tamil

உடல் எடையை குறிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம் ஆகும். இன்றிய காலகட்டத்தில் பலர் உடல் எடையை குறிக்க பலவகையாக முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகின்றன. அந்த வகையில் இன்றைய பதிவில் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க முயற்சி செய்யும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். வெறும் 7 நாட்களில் தொப்பையை குறைக்க ஒரு அருமையான டிப்ஸ் இருக்கிறது. அது வேறு ஒன்று இல்லை உடல் எடையை குறைக்க உதவும் சில வகையான பானங்கள் தான். அதன் பானங்களை எப்படி தயார் செய்யலாம்? எப்படி அருந்தலாம் போன்ற தகவல்களை பற்றி தான் பார்க்க போகிறோம் சரி வாங்க அது எப்படி என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்த்துவிடலாம்.

சீரகம் பானம்:

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சீரகத்தில் பானம் தயார் செய்து அருந்திவரலாம் அதாவது இரண்டு ஸ்பூன் சீரகத்தை இரவு முழுவது ஒரு கிளாஸ் நீரில் நன்றாக உறவியாக்கவும், பின் மறுநாள் காலை எழுத்தும் அந்த நீரை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டவும் பின் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து மிதமான சூட்டில் வெறும் வயிற்றில் தினமும் காலை அருந்திவந்தால் போதும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உடல் எடையை குறைக்க செய்யும். ஆக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த பானத்தை மட்டும் ட்ரை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

சீரகம் மற்றும் எலுமிச்சை சாறு:

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் இந்த பானத்தை ட்ரை செய்யலாம், அதாவது 2 டீஸ்பூன் சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் எழுந்ததும் இதை நன்கு கொதிக்கவிடவும். அதன் பிறகு, அதை வடிகட்டி ஆறவைத்து, எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். இதனால் உடல் எடைகுறைவதை கண்கூடாக காணலாம்.

சீரகம் மற்றும் கருவேப்பிலை தண்ணீர்:

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த பானத்தை தினமும் அருந்தி வரலாம், அதாவது இரவு தூங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் நீரில் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்றாக ஊறவைக்கவும். பின் மறுநாள் காலை எழுத்து பல்துலக்கி விட்டு இந்த நீரை வடிகட்டி அருந்திவரலாம். இந்த தண்ணீரை குடிப்பதால், உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரித்து, உடல் எடை கட்டுக்குள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

சீரக பொடி தண்ணீர்:

உடல் எடையை குறைக்க உதவுவதில் சீரகத்திற்கு பெரும் பங்கு இருக்கிறது. உடல் எடையை சரியான நிலையில் வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் இந்த பணத்தை தயார் செய்து அருந்திவரலாம். அதாவது ஒரு கிளாஸ் தண்ணீரை சூடாக்கவும். அதன் பிறகு, அதில் ஒரு ஸ்பூன் சீரகப் பொடி சேர்க்கவும். இதனுடன் கருப்பு உப்பும் சேர்த்து சுவையை கூட்டலாம். அதன் பிறகு இந்த தண்ணீரை ஆறவைத்து குடிக்கவும். இதனால் உங்கள் வயிறு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

சீரகம் மற்றும் கொத்தமல்லி தண்ணீர்:

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த பானத்தையும் ட்ரை செய்யலாம். அதாவது ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு கொத்தமல்லி மற்றும் சீரகத்தைப் போட்டு வைக்கவும். காலையில் எழுந்ததும் அந்த நீரை வடிகட்டி குடிக்கவும். இந்த வைத்தியம் உடல் பருமனை குறைப்பது மட்டுமின்றி நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.

மேல் கூறப்பட்டுள்ள பனங்களில் எதாவது ஒரு பானத்தை தினமும் காலை வரும் வயிற்றில் அருந்தி வந்தாலே போதும் உடல் எடை 7 நாட்களில் குறைய ஆரம்பிக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Natural health tips in tamil