5 நாளில், 5 கிலோ உடல் எடையை குறைக்க இந்த ஜூஸ் குடிங்க போதும்..!

Advertisement

Weight Loss Juice in Tamil

பொதுவாக சில டேஸ்ட் பார்த்து சாப்பிடுவோம்.. சிலர் பசியை போக்குவதற்க்காக சாப்பிடுவாங்க. ஆனா யாரும் நாம் சாப்பிடும் உணவுகளில் மருத்துவ குணங்கள் இருக்கிறதா என்பதை தெரிந்து அந்த உணவுகளை செலக்ட் செய்து சாப்பிடுவது இல்லை. இதன் காரணமாகவே பலருக்கு உடல் எடையும் அதிகரித்துவிடுகிறது. பின் உடல் எடையை குறைக்க பலவகையான முறைகளை பின்பற்றுவார்கள். இருப்பினும் அவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைத்திருக்காது. இதன் காரணமாகவே மனம் வெறுத்து போயிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் நீங்கள் என்றால் கண்டிப்பாக இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஆம் 5 நாளில், 5 கிலோ உடல் எடையை குறைக்கக்கூடிய ஒரு அருமையான ஜூஸ் பற்றி தான் பார்க்கப்போகிறோம். வாங்க அது என்ன ஜூஸ் என்று இப்பொழுது பார்க்கலாம்.

வெண்பூசணி ஜூஸ்:

வெண்பூசணி ஜூஸ்

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விருப்புக்கவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெண்பூசணி ஜூஸை அருந்தி வருவதன் மூலம் உடல் எடையை மிக விரைவாக குறைக்க முடியும். அதேபோல் அளவுக்கு அதிமாக சாப்பிடும் எண்ணத்தையும் குறைகிறது.

இதையும் ட்ரை செய்து பாருங்கள் 👉 வெந்நீர் இப்படி குடித்தால் 10 கிலோ உடல் எடை குறையும்..!

சியா விதை:

உடல் எடையை கச்சிதமாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் சியா விதையை தேர்வு செய்யலாம். இதன் மூலம் உடல் எடையை மிக எளிதாக உடல் எடையை குறைத்துவிட முடியும். சியா விதையை எப்படி சாப்பிட வேண்டும் என்றால்? ஒரு டம்ளரில் மிதமான சூட்டில் நீரை எடுத்துகொல்லுங்கள். பின் அதில் ஒரு ஸ்பூன் சியா விதையை ஊறவைக்கவும். 10 நிமிடம் கழித்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன், அரை எலுமிச்சை பழம் சாறினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் இந்த ஜூஸை பருக்க வேண்டும். இப்படி தினமும் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை மிக எளிதாக குறைத்துவிடலாம்.

இந்த ஜூஸை காலை வெறும் வயிற்றில் பருக்கலாம். அதன் பிராகி 1/2 மணி நேரம் கழித்துதான் மற்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.

இதையும் ட்ரை செய்து பாருங்கள் 👉 உடல் எடை குறைய உணவு அட்டவணை

கருவேப்பிலை ஜூஸ்:

கருவேப்பிலை தலை முடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக விளங்கக்கூடிய ஒரு பொருளாகும். மேலும் உடல் எடையை குறைப்பதற்கும் பயன்படுகிறது. இந்த கழுவேப்பிலையை பயன்படுத்தி ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம். உடல் எடை குறையவும் உதவுகிறது அதேபோல், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. ஆகவே ஒரு கைப்பிடி அளவுள்ள கருவேப்பிலையுடன், 1/2 டம்பளர் வெந்நீர், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து மிக்ஷியில் அரைத்துக்கொள்ளுங்கள். பின் வடிகட்டி இந்த ஜூஸை பருக்க வேண்டும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil
Advertisement