உடல் எடை குறைய எதையும் சாப்பிட வேண்டாம், குடிக்க வேண்டாம் இதை மட்டும் Follow செய்தாலே போதும்

weight loss morning drink in tamil

உடல் எடை குறைய டிப்ஸ்

உடல் எடை அதிகமாக இருந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உடல் பருமன் அதிகமாக இருந்தால் வயதை அதிகமாக காட்டும். பிடித்த உடைகளை அணிய முடியாது. மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள். சில நபர்களுக்கு என்ன தான் செய்தாலும் உடல் எடை குறையாது. ஏனென்றால் அவர்கள் ஜீன் சம்மந்தமாக இருந்தால் உடல் எடை குறையாது. காலை மற்றும்  மாலை நேரத்தில் இந்த ஜூஸ் குடித்தால் உடல் எடை குறைவதோடு அதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி காண்போம. மேலும் நீங்கள் ஒன்றுமே செய்யாமல் உடல் எடை குறைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று படித்து தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ வீட்டிலிருந்தே ஒரே வாரத்தில் 7 கிலோ உடல் எடையை குறைக்கலாம் இத மட்டும் பண்ணுங்க

உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்:

உணவை சாப்பிடாமல் இருந்தால்  உடல் எடை குறையும் என்று நம்புகின்றனர். ஆனால் நீங்கள் சாப்பிடாமல் இருந்தால் அதிகரிக்குமே தவிர குறையாது. காலை உணவை சாப்பிட வேண்டும். காலை உணவை தவிர்த்தால் உடல் எடை அதிகரிக்கும்.

கலோரிகள் குறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். புரதம் சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். செயற்கை  ரசாயனம் கலந்த ஜூஸை குடிக்க கூடாது.

தூங்குவது முக்கியமான ஒன்றாகும். இரவில் 6 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியமான ஒன்றாகும்.

ஜூஸ் செய்வது எப்படி.? 

பெருஞ்சீரகத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் ஊறிய பெருஞ்சீரகத்தை அரைத்து கொள்ளவும். பின் அரைத்ததை வடிகட்டியில் வைத்து வடிக்கடவும். சக்கை இல்லாமல் ஜூஸாக எடுத்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளலாம். வாங்க இந்த ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி காண்போம்.

உடல் எடை குறைய:

இந்த பெருஞ்சீரகம் ஜூஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் இது நம் உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறையை செய்கிறது. அதுமட்டுமில்லாமல் பசி உணர்வை கட்டுப்படுத்தும். அதனால் தினமும் காலை மற்றும்  மாலை நேரத்தில் இந்த ஜூஸை குடியுங்கள்.

செரிமான பிரச்சனை நீங்க:

பெருஞ்சீரகம் செரிமானத்திற்கு பெரிதும் வழி வகுக்கும். அதனால் தான் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வீட்டில் சாப்பிட்டவுடன் பெருஞ்சீரகம் வைத்திருப்பார்கள். பெருஞ்சீரகம் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். தினமும் உணவு சாப்பிட்ட பிறகு பெருஞ்சீரகம் சாப்பிடலாம். மலசிக்கல் மற்றும் வாயு பிரச்சனையிலிருந்து விடுபட செய்கிறது.

சரும பிரச்சனைகள்:

இந்த ஜூஸ் தினமும் குடித்து வந்தால் ரத்தத்தை சுத்தப்படுத்தும். அதோடு சரும பிரச்சனைகளான பருவை நீக்கி முகத்தை பளபளப்பாக்க உதவுகிறது.

மாதவிடாய் வலி நீங்க:

பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வரும் வலிகளிலுருந்து விடுபட செய்கிறது. அதனால் பெருஞ்சீரகம் ஜூஸ் குடிப்பது நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil