குழந்தை தடுப்பூசி பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

Advertisement

குழந்தை தடுப்பூசி (Vaccines for Children) பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க ..!

பொதுவாக எல்லா பெற்றோர்களும் தன் குழந்தைக்கு (Vaccines for Children) அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்ன தான் தன் குழந்தையை நன்றாக பார்த்துக் கொண்டாளும் இயற்கையாகவே குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் அதை பொற்றோர்கள் தான் எதிர்க் கொள்ள வேண்டும். இது பொற்றோர்களின் தலையாய கடமையாகும்.

குழந்தைகளுக்கு தினமும் ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பதால் நோய்கள் விரட்டப்படுகிறது. மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதும் பெற்றோர்களின் முக்கிய கடமையாகும் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி போடுவதால் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

ஒரு குழந்தைகளுக்கு தடுப்பூசி (Kulandhai Thaduppusi) போடுவதால் அந்த குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சரி குழந்தைகளுக்கு உடல் நலம் சரி இல்லாத நேரத்தில் தடுப்பூசி போடலாமா அல்லது தடுப்பூசி போடகூடாதா என்று இந்த கட்டுரையில் காண்போம்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி – முழுமையான விவரங்கள்

குழந்தை தடுப்பூசி (Vaccines for Children / Kulandhai Thaduppusi):

ஒரு குழந்தை பிறக்கும் போதே குழந்தைகளின் நல மருத்துவர் அந்த குழந்தைக்கான தடுப்பூசி எப்போதெல்லாம் போட வேண்டும் என்று பட்டியலை தந்து விடுவார்கள். எனவே பட்டியலிடப்பட்ட நாட்களில் தன் குழந்தையின் நலன் கருதி குறிப்பிட்ட காலத்தில் பெற்றோர்கள் தன் குழந்தைக்கு தடுப்பூசி (Vaccines for Children / kulandhai thaduppusi) போட்டுவிட வேண்டும்.

குழந்தைக்கு தடுப்பூசி (Vaccines for Children / kulandhai thaduppusi) போடுவது மிக அவசியமான ஒன்றாக விளங்குகிறது.

குழந்தைக்கு தடுப்பூசி (Vaccines for Children / kulandhai thaduppusi) போடும் நேரத்தில் குழந்தைக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால் பெற்றோர்களுக்கு என்ன செய்தால் தன் குழந்தைக்கு நல்லது என்று தெரியாமல் போய்விடுகிறது.

எனவே நாம் இவற்றில் குழந்தைக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால் தடுப்பூசி போடலாமா அல்லது போடக்கூடாத என்று இங்கு காண்போம்.

குழந்தைக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் போது என்ன நடக்கும்?

தடுப்பூசி

சிறியவர் முதல் பெறியவர் வரை உடல் நல பாதிப்பு என்பது இயற்கையாகவே ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் நம் உடலில் ஏதேனும் நோய் கிருமிகள் நுழைவதனால் தான் உடல் நலம் பாதிப்பு ஏற்படுகிறது.

இவ்வாறு நுழையும் நோய் கிருமிகளை எதிர்க்க நம் உடல் இயற்கையாகவே எதிர்ப்பு மருந்துகளை சுரக்க ஆரம்பித்துவிடும். சுரக்கும் மருந்தின் அளவானது ஒவ்வொரு மனிதர்களுக்கும் மாறுப்படும்.

இந்த எதிர்ப்பு மருந்தானது உடலுக்குள் நுழையும் போது உடலில் நுழைந்த கிருமிகளை அழித்து உடல் நலம் சரியாகிவிடுகிறது.

இதே போல் எதிர்க்காலத்திலும் இந்த நோய் எதிர்ப்பு மருந்து நம் உடலுக்குள் நுழையும் கிருமிகளை அழித்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

குழந்தை தடுப்பூசி (Vaccines for Children) போடுவது ஏன்? அதன் அவசியம்:

குழந்தைகளுக்கு தடுப்பூசி (Vaccines for Children / kulandhai thaduppusi) போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து, உடலில் ஏதேனும் நுழையும் கிருமிகளை அழித்து உடல் நலனை பாதுகாக்கிறது.

குழந்தைகளுக்கான எதிர்ப்பு மருந்து உடலுக்குள் சுரப்பதற்கு பதிலாக தடுப்பூசி மூலம் குழந்தைகளுக்கு உடலுக்குள் செலுத்தப்படுகிறது.

குழந்தைகளுக்கு செலுத்தப்படும் மருந்தின் அளவு, செலுத்தப்படும் மருந்தின் தன்மையை பொருத்தது, சில தடுப்பூசி மருந்துகள் குழந்தையின் ஆயுள் காலம் முழுவதும் செயல்பட்டு கொண்டு இருக்கும்.

சில தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு மிக மிக அவசியம்:

குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் எல்லாம் சமமானது அல்ல இதை பெற்றோர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். சில தடுப்பூசி மருந்துகள் குழந்தைகளுக்கு மிக மிக அவசியம்.

உயிர் கொல்லி நோயை எதிர்க்க போடப்படும் தடுப்பூசிகள் முக்கியமானவை. அதுவும் போடப்படும் தடுப்பூசிகள் ஏதேனும் ஒரு நோயை மட்டும் எதிர்க்கிறதா அல்லது தொடர்ந்து வரும் நோய்களை எதிர்க்கிறதா என்று தடுப்பூசின் தன்மையை தெரிந்துகொள்ள வேண்டும்.

சில நோய்களுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பூசி மருந்துகள் (kulandhai thaduppusi) ஒரு முறை மட்டும் போடாமல் உரிய இடைவெளியில் தொடர்ந்து செலுத்தபடுவது போல் இருக்கும். (ஹெப்பட்டிஸ், டைபாய்டு, போலியோ ஆகிய நோய்களுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகள்).

இது போன்ற தடுப்பூசி மருந்துகள் குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்றவை ஏற்பட்டிருந்தாலும் மருந்துவர் கூறும் நேரத்தில் சென்று தடுப்பூசியை போடுவது மிகவும் நல்லது.

இந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு போடாவிட்டால் குழந்தைகளின் உடல் நலனுக்கு மிகவும் கேடு விளைவிக்கும்.

குழந்தை தடுப்பூசி (Vaccines for Children) எப்போதெல்லாம் தள்ளி போடலாம்:

குழந்தைக்கு தொடர்ந்து காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்து வந்தால் தடுப்பூசி போடுவதை தள்ளி போடலாம். ஏன் என்றால் அப்போது குழந்தையின் உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் உருவாகிக் கொண்டிருக்கும்.

அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டல் குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு அதிகமான சுமையை கொடுத்தது போல் ஆகிவிடும்.

எனவே அந்த நேரங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி (kulandhai thaduppusi) போடுவதை தடுத்துக் கொள்ளவது மிகவும் நல்லது.

குழந்தை தடுப்பூசி (Vaccines for Children) எப்போது போட வேண்டும்:

ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருக்கும், குழந்தைகளுக்கு இருமல், சளி போன்ற சிறிய பிரச்சனைகள் உள்ள குழந்தைக்கு தடுப்பூசி (kulandhai thaduppusi) போடும் அந்த நேரத்தில் காய்ச்சல் இல்லாமல் இருந்தால் சளி இருமல் இரண்டு நாளுக்கு மேல் நீடிக்காது என்றால் பெற்றோர்கள் அதை பொறுட்படுத்தாமல் தடுப்பூசி போதுவது தான் மிக சிறந்த முடிவு.

குழந்தை தடுப்பூசி (Vaccines for Children) பற்றி மருத்துவரின் ஆலோசனை:

எல்லா குழந்தைகளின் உடல்நிலையும் வெவ்வேறானவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதன் உடலுக்கு வந்த நோய்க்காக செய்யப்படும் மருத்துவமும் வெவ்வேறானவை.

குழந்தைகள் தனக்கு ஏற்படும் உடல் நல குறைவை சமாளிப்பதும் மாறுபடும். அதனால் தான் இந்த வயதுள்ள குழந்தைகளின் உடல்நிலையை கணிப்பது கடினம்.

இந்த மாதிரி சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் மையத்தை தொடர்பு கொண்டு, அங்குள்ள மருத்துவ ஆலோசகரிடம் குழந்தையின் உடல் நிலையை விளக்கி குறிப்பிட்ட நாளில் ஊசி போட வரலாமா? வேண்டாமா? என தெளிவுபடுத்தி கொள்ளுங்கள்.

இரண்டு மாத குழந்தைக்கு மலச்சிக்கலா அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement