5 Foods to Improve Children’s Memory in Tamil
போட்டிகள் நிறைந்துள்ள இவ்வுலகில், ஒவ்வொருவரும் தனது குழந்தை புத்திசாலியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். எனவே குழந்தைகளின் மூளை ஒரு கணினி போல வேலை செய்ய மற்றும் நினைவாற்றல் அதிகரிக்க சில உணவுகள் பெரிதும் உதவும் என்றும், அதன் மூலம் குழந்தைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று சில ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன. அதனால் இன்றைய பதிவில் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
How to Improve Memory Power for Children’s in Tamil:
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. மீன்:
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க மீன்கள் மிகவும் உதவி புரிகின்றன. அதிலும் குறிப்பாக சால்மன், டுனா, கானாங்கெளுத்தி மற்றும் மத்தி மீன் போன்ற மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளது.
இது மூளையின் செயல்பாடுகளுக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. எனவே வாரத்தில் இரு முறையாவது குழந்தைகளுக்கு மீன்களை சாப்பிட கொடுங்கள்.
2. முட்டை:
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் முட்டை மிகவும் அவசியம். இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், லுடீன், கோலின் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் குழந்தையின் மூளைத் திறனை அதிகரிக்கிறது. எனவே தினமும் ஒரு முட்டையாவது குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> குழந்தைகளின் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை முற்றிலும் நீக்க பாட்டி வைத்தியம்..!
3. பால்:
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் பால் மிகவும் அவசியம். இதில் அதிகப்படியான புரோட்டீன், வைட்டமின் மற்றும் மினரல்ஸ் உள்ளது.
இது குழந்தைகளின் மூளைத் திறனை அதிகரிக்க உதவுகிறது. அதனால் தினமும் ஒரு டம்ளர் பாலையாவது குழந்தைகளுக்கு குடிக்க கொடுங்கள்.
4. வால்நட்:
வால்நட் பார்ப்பதற்கு மூளை போலவே காட்சி அளிக்கும். இது குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க மிகவும் உதவுகிறது. இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம், ஃபேட்டி ஆசிட், ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் DHA ஆகியவை அதிக அளவில் உள்ளது.
இது குழந்தைகளின் மூளைத் திறனை அதிகரிக்க உதவுகிறது. இது மூளையில் வரக்கூடிய அல்சைமர் என்ற நோய் குழந்தைகளுக்கு வராமல் குழந்தைகளை பாதுகாக்க உதவுகிறது. அதனால் தினமும் ஒரு வால்நட்டையாவது குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> குழந்தைகளின் நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கு டிப்ஸ்
5. பாதாம்:
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் பாதாம் மிகவும் அவசியம். இதில் வைட்டமின் E அதிக அளவில் உள்ளது. இது குழந்தைகளின் மூளை திறனை அதிகரித்து அவர்களின் ஞாபக சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.
அதனால் தினமும் ஒரு பத்து பாதாமையாவது குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள். குறிப்பாக பாதாமை ஊற வைத்து அதனின் தோலை நீக்கி விட்டு கொடுங்கள்.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |