பிறந்த குழந்தைக்கு போதுமான நீர்ச்சத்து இல்லை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்

பிறந்த குழந்தைக்கு போதுமான நீர்ச்சத்து இல்லை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்..! Baby dehydration symptoms..!

நீர்ச்சத்து குறைபாடு அறிகுறிகள் / Baby dehydration symptoms:- குழந்தைகள் என்றாலே அதிக கவனம் மற்றும் பராமரிப்பு மிகவும் அவசியம். அதிலும் பிறந்த பச்சிளம் குழந்தை என்றால் இன்னும் கூடுதல் கவனம் அவசியமாகும். அந்த வகையில் அவ்வப்போது குழந்தையின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க செய்ய வேண்டும். அதேபோல் குழந்தைகளுக்கு முறையானஉணவுகளை கொடுக்கும் போதோ, அவர்கள் மலம் மற்றும் நிறுநீர் கழிக்கும் போதோ பெற்றோர்களாகிய நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.

பிறந்த முதல் வருடம் முழுவதும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவாகும். அதவது குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் இருந்தே கிடைக்கின்றது. குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் ஒரு சிறந்த உணவாகும். பிறந்த குழந்தைக்கு தேவையான நீர்ச்சத்துக்களும் தாயின் தாய்ப்பாலில் இருந்தே கிடைக்க பெறுகிறது.

இருப்பினும் பிறந்த குழந்தைகளுக்கு வயிற்று போக்கு மற்றும் வாந்தி போன்ற காரணங்களினால் குழந்தைக்கு நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நீரிழப்பு பிரச்சனையை  மிக எளிதாக விட்டுவிடக்கூடிய பிரச்சனை இல்லை. இப்படி பிறந்த குழந்தைக்கு ஏற்படும் நீரிழப்பை கீழ்க்கண்ட 5 அறிகுறிகளைக் கொண்டு நீங்கள் அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் குழந்தையை நீரிழப்பு ஆபத்தில் இருந்து காப்பாற்றலாம்.

சரி வாங்க குழந்தையின் நீரிழப்பு பிரச்சனையை உறுதி செய்யும் 5 முக்கியமான அறிகுறிகளை (Baby dehydration symptoms) இப்பொழுது படித்தறிவோம்.

தாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்..! 100% Increase breast milk…

நீர்ச்சத்து குறைபாடு அறிகுறிகள் / Baby dehydration symptoms..!

குழந்தையின் வாய் மற்றும் தோல் பகுதிகளில் வறட்சி ஏற்படும்:

நீர்ச்சத்து குறைபாடு அறிகுறிகள் / Baby dehydration symptoms:- புதியதாக பிறந்த குழந்தையை பெற்றோர்கள் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். எனவே குழந்தைக்கு போதுமான நீர்ச்சத்து இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள குழந்தையின் உதடுகளை வைத்து கண்டறியலாம்.

அதாவது குழந்தைகளின் உதடுகள் அடிக்கடி வறண்டு போகிறதா இல்லையா என்பது கவனியுங்கள். மேலும் குழந்தையின் தோல்களும் வறண்டு போகிறதா என்பதை கவனியுங்கள். நாக்கு மற்றும் உமிழ்நீரின் நிறத்தை பாருங்கள்.

இதன் மூலம் உங்கள் குழந்தைக்கு தாகம் எடுக்கிறதா இல்லையா என்பதை அறியலாம். இதைத் தவிர வாயைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் சருமத்தில் தோல்கள் உரிந்து காணப்படும். இந்த மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக விடாதீர்கள்.

உடனடியாக குழந்தைநலன் மருத்துவரிடம் சென்று அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

மந்தமான நிலை மற்றும் தூக்கம்:-

நீர்ச்சத்து குறைபாடு அறிகுறிகள் / Baby dehydration symptoms:- குழந்தைகளுக்கு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காதபோது குழந்தைகள் மிகவும் சோர்வடைந்து, இயல்பை விட மிகவும் சோம்பலாகத் தோன்றுவார்கள்.

தங்கள் குழந்தைக்கு நீரிழப்பு பிரச்சனை ஏற்பட்டால் அவர்கள் அடிக்கடி தூங்கிக்கொண்டே இருப்பார்கள். எனவே பெற்றோர்களாகிய தாங்கள் தங்கள் குழந்தையின் தூக்க வழக்கத்தை அடிக்கடி கவனிக்க வேண்டியதும் மிகவும் அவசியம்.

குழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..!

உலர்ந்த டயப்பர்கள்:

diapers for babies

நீர்ச்சத்து குறைபாடு அறிகுறிகள் / Baby dehydration symptoms:- பிறந்த குழந்தையின் டாய்லெட் போகும் பழக்கத்தை பற்றி பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது. முதல் ஆறு மாதங்களில், ஒரு நாளைக்கு 5-6 டயப்பர் வரை நீங்கள் மாற்றம் செய்தாக வேண்டும்.

சிறுநீர் கழிப்பது குறைந்தாலோ மலம் கழிப்பது குறைந்தாலோ அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருப்பதை அறிந்து கொள்ளுங்கள்.

குழந்தையின் சிறுநீரின் நிறத்தைப் பாருங்கள், அடர் மஞ்சள் நிறமாக இருந்தால் நீரிழப்பு இருக்கலாம். இது சாதாரணமானது அல்ல.

கண்ணீல் தண்ணீர் வராமல் அழுவது:-

BABY Crying

நீர்ச்சத்து குறைபாடு அறிகுறிகள் / Baby dehydration symptoms:- குழந்தைகள் வளரும் போது எதுக்கெடுத்தாலும் அழுது கொண்டே இருப்பார்கள். இப்படி அவர்கள் அழும் போது கண்ணீல் கண்ணீர் வரவில்லை என்றால் அவர்கள் உடம்பில் போதுமான நீர்ச்சத்து இல்லை என்பதை உணர்த்துகிறது.

இந்த மாதிரியான சமயங்களில் குழந்தைக்கு பால் மற்றும் தண்ணீர் பருகக் கொடுங்கள். அதே மாதிரி குழந்தையின் ஊட்டச்சத்து உணவுகளிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

குழந்தைக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது???

எரிச்சலூட்டும் தன்மை:-

baby crying

நீர்ச்சத்து குறைபாடு அறிகுறிகள் / Baby dehydration symptoms:- தங்கள் குழந்தைக்கு பசி ஏற்பட்டாலோ அல்லது தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலோ அதிக எரிச்சல் அடைய ஆரம்பிப்பார்கள். உங்களை தொந்தரவு கூட செய்வார்கள். எனவே அவர்களை சமாதானம் படுத்த பெற்றோர்களாகிய தாங்கள் எதாவது விளையாட்டு காட்டலாம். குழந்தைகளுக்கு மற்ற சில காரணங்களினால் கூட எரிச்சல் அடையாளம் இந்த ஒரு அறிகுறிகளை (Baby dehydration symptoms) வைத்து கொண்டு குழந்தைக்கு நீரிழப்பு பிரச்சனை உள்ளது என்பதை முடிவு செய்து விடாதீர்கள்.

மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகளையும் கட்டாயம்  பெற்றோர்களிகிய தாங்கள் தான் கவனிக்க வேண்டும்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்