1 வயது குழந்தைக்கு உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்..! 1 Year Baby Weight Gain Food In Tamil..!
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க உணவு(baby weight gain food) முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம். பிறந்தும் சில குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். இதனால் நிறைய குழந்தைகளின் தாய்மார்கள் அனைவரும் பெரிதும் கவலை கொள்வார்கள். அந்த கவலை இனி வேண்டாம். அதற்காகவே குழந்தையின் உடல் எடை அதிகரிக்க இதோ அருமையான டிப்ஸை படித்து தெரிந்து கொள்ளுவோம் வாங்க..!
குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க டிப்ஸ்..! |
உடல் எடை அதிகரிக்க:
தேவையான பொருட்கள்:
- பேரிச்சை பழம் – 3 (நறுக்கியது)
- பாதாம் – 3
- திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- அவுல் – 1/4 கப்
- பால் – 1/2 கப்
குழந்தை உடல் எடை அதிகரிக்க உணவு செய்முறை:
முதலில் ஒரு சிறிய பவுலில் 3 பேரிச்சம் பழத்தை எடுத்து கொட்டையை நீக்கி நறுக்கி வைத்து கொள்ளவும். அந்த பவுலில் 3 பாதாமை சேர்க்க வேண்டும். அடுத்து திராட்சை 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்க்க வேண்டும்.
குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க:
இந்த மூன்றையும் தண்ணீரில் நன்றாக வாஷ் செய்து கொள்ளவும். அதன் பிறகு தண்ணீர் சேர்த்து 6 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அடுத்து தனியாக ஒரு பவுலில் அவுல் 1/4 கப் அளவு எடுத்து 10 நிமிடம் நன்றாக ஊறவைத்து கொள்ளவும்.
1 வருட குழந்தைக்கு உடல் எடை அதிகரிக்க:
அடுத்ததாக மிக்ஸி ஜாரில் நன்றாக 10 நிமிடம் ஊறிய அவுலை ஜாரில் கொட்டவும். அதன் பிறகு ஊறவைத்த திராட்சை, பேரிச்சையை அவுலுடன் மிக்ஸி ஜாரில் அரைத்து கொள்ளவும்.
குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க நட்ஸ் பௌடர்..! |
குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்க:
இப்போது அரைத்ததை கடாயில் ஊற்றிக்கொள்ளவும். இதனுடன் 1/2 கப் அளவிற்கு பால் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை மிதமான சூட்டில் வைத்து 4 அல்லது 5 நிமிடம் வரை கொதிக்க வைக்கவேண்டும். நன்றாக கொதித்த பிறகு அடுப்பை நிறுத்தி கொள்ளலாம்.
குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்:
இப்போது இதை தனியாக பவுலில் ஊற்றி எடுத்துக் கொள்ளவும். அவ்ளோதாங்க குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க ஈஸியான உணவு முறை ரெடி. இந்த உணவை குழந்தைகளுக்கு ஆறவைத்த பின்னரே ஊட்ட வேண்டும். இந்த உணவு முறையை வீட்டில் அனைவரும் செய்து உங்களுடைய குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க செய்யுங்கள்.
குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby Health Tips Tamil |