குழந்தைகளுக்கான களி உணவு வகைகள்..! kali recipe in tamil..!

Baby food tamil

7 மாத குழந்தை உணவு முறை | களி உணவு வகைகள் | kali recipe in tamil | Baby food tamil

kali recipe in tamil:- பொதுவாக வளரும் பச்சிளம் குழந்தைகளுக்கு பற்கள் சரியாக வளர்ச்சியடைந்திருக்காது எனவே அவர்களால் சாப்பிட கூடிய உணவு வகைகளை செய்து தர வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். எனவே பாரம்பர்யமாக பின்பற்றி வரும் ஒரு உணவு வகைதான், களி. அந்த வகையில் தாய்மார்கள் சமைக்கும் உணவானது ஆரோக்யமானதாவும், சுவையாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் குழந்தைகளால் சாப்பிட கூடிய ஓர் உணவாகவும் இருக்க வேண்டும்.  இந்த உணவுகளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. அதே போல் குழந்தைகளாலும் மிக எளிதாகவும் சாப்பிட முடியும். குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவும்கூட.

சரி இந்த களி உணவு (kali recipe in tamil) வகைகளை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

குழந்தைக்கு அரிசி கஞ்சி கொடுப்பதால் கிடைக்கும் பயன்கள்..!

கேழ்வரகுக் களி செய்முறை / Ragi kali recipe in tamil:-

கேழ்வரகுக் களி, கேப்பைக் களி, ராகி களி என வெவ்வேறு பெயரில் இதனை அழைக்கிறார்கள். இந்தக் களியை எளிதாக செய்யலாம்.

கேழ்வரகு களி எப்படி செய்வது? ஸ்டேப்: 1

முதலில் ராகியை நன்றாக அரைத்து ராகி மாவைத் தயார் செய்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். ராகி மாவை, கொதி நீரில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.

கேழ்வரகு களி எப்படி செய்வது? ஸ்டேப்: 2

பின்னர் உருண்டை வடிவில் வார்த்து எடுத்துச் சாப்பிடலாம்.

கேப்பைக் களியைப் பொறுத்தவரையில் அதனுடன் வெல்லம், கருப்பட்டி, தேங்காய் போன்றவற்றைச் சேர்த்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்..

இந்த கேழ்வரகு களியினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது.

கேழ்வரகு களி பயன்கள்

கேழ்வரகு களி பயன்கள்: 1

கேழ்வரகில் கால்சியம் மிகவும் அதிகம் என்பதால், வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், பெண்கள், தாய்மார்களுக்கு ஏற்ற உணவு இது.

கேழ்வரகு களி பயன்கள்: 2

பொதுவாக கேழ்வரகு, பசியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.

கேழ்வரகு களி பயன்கள்: 3

உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது.

கேழ்வரகு களி பயன்கள்: 4

கோடையில் அனைவருமே காலை அல்லது மதிய உணவாக எடுத்து கொள்ளலாம் வைட்டமின்கள், தாதுஉப்புகள் நிறைந்தது.

கேழ்வரகு களி பயன்கள்: 5

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குடல் புண்களை ஆற்றும்.

11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..!

இனிப்பு களி / Sweet kali recipe in tamil:

தேவையான பொருட்கள்:

மாவு தயாரிக்க

  1. பச்சை அரிசி – ½ கிலோ
  2. கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்து – 1½ கிலோ
  3. வெந்தயம் – 20 கிராம்
  4. சுக்கு – 10 கிராம்

இனிப்பு களி செய்முறை / Sweet kali recipe in tamil:

உளுந்து, சுக்கு, வெந்தயத்தை லேசாக வறுத்து, அரிசியுடன் சேர்த்துக் கடையில் கொடுத்து, நைசாக இல்லாமல் பதமாகப் பொடித்துக் கொள்ளவும்.

களி தயாரிக்க தேவையானவை

  • அரைத்து வைத்துள்ள மாவு – 1 கப்
  • பனங்கருப்பட்டி – 1 கப்
  • தண்ணீர் – 3 கப்
  • நல்லெண்ணெய் – ½ கப்

இனிப்பு களி செய்முறை / Sweet kali recipe in tamil:

இனிப்பு களி செய்முறை ஸ்டேப்: 1

அடுப்பில் கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு கருப்பட்டி சேர்த்து கொதிக்கவிடவும்.

கருப்பட்டி கொதிவந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, அவற்றை வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

இனிப்பு களி செய்முறை ஸ்டேப்: 2

பின் ஒரு சுத்தமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் களி மாவை சேர்த்து, தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கிளறவும்.

பின் கலந்து வைத்துள்ள களி மாவைக் கொதிக்கும் கருப்பட்டி நீரில் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு வேக விடுங்கள்.

இனிப்பு களி செய்முறை ஸ்டேப்: 3

சிறிது நேரம் கழித்து அடுப்பை நிறுத்தி விடுங்கள். இப்பொழுது கருப்பட்டி தண்ணீர் மேலாக மிதக்கும். அதை இறுத்துத் தனியாக வைக்கவும்.

இனிப்பு களி செய்முறை ஸ்டேப்: 4

பின்பு மீதியுள்ள வெந்த மாவை ஒரு கரண்டியால் கட்டி இல்லாமல் கிளறவும். பின் மீண்டும் அடுப்பில் வைத்து, ஏற்கெனவே இறுத்து வைத்துள்ள கருப்பட்டி நீரை இதில் சேர்க்கவும்.

இனிப்பு களி செய்முறை ஸ்டேப்: 5

கொஞ்சம் கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்டு கிளறி, கையில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்து விடுங்கள். இனிப்பு களி தயார் (kali recipe in tamil) சூடாறியதும் சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.

இனிப்பு களி செய்முறை ஸ்டேப்: 6

இதில் ஏதாவது நட்ஸ், அல்லது சிறிய தேங்காய் துண்டை நடுவில் வைத்துப் பரிமாறலாம்.

குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க டிப்ஸ்..!

பலன்கள் / Sweet kali recipe in tamil:

ஒரு வயதுக்கு மேல் உள்ள ஆண், பெண் குழந்தைகளுக்கு அவசியம் செய்து கொடுக்கவும். பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. சீரற்ற மாதவிடாய் சரியாகும். இடுப்பு எலும்புகள் உறுதி பெறும். குழந்தைக்கு திட்டமிடுவோர், கர்ப்பிணிகள், தாய்மார்கள் சாப்பிட ஏற்றது. குழந்தையை பெற இடும்பு எலும்புகளுக்கு சக்தி கிடைக்கும்.

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்