குழந்தையின் தலை உருண்டை வடிவத்தில் பெற சில டிப்ஸ்..! Tips For Baby head Shape..!
Tips For Baby head Shape In Tamil: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம் பதிவில் பிறந்த குழந்தையின் தலை உருண்டை வடிவத்தில் பெற சில குறிப்புகளை இங்கே நாம் படித்து தெரிந்துக்கொள்ளுவோம். பொதுவாக பிறந்த குழந்தைக்கு எப்போதும் தலை பகுதியானது உருண்டை வடிவத்தில் இருப்பதில்லை. ஏனென்றால் குழந்தையின் மண்டை பகுதி மிகவும் மெல்லியதாக இருக்கும். மேலும் குழந்தை படுத்த நிலையிலே இருப்பதால் அதன் தலை தட்டை வடிவில் மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. சில தாய்மார்கள் குழந்தையினை குப்பற படுக்க வைப்பார்கள். இதனால் குழந்தைக்கு ஆரோக்கிய மற்றும் அஜீரண பிரச்சனை ஏற்படக்கூடும். சரி வாங்க குழந்தை தலை சரியான வடிவத்தில் இருக்க சில குறிப்புகளை இங்கு நாம் காண்போம்..!
எந்த தொட்டில் குழந்தைக்கு நல்லது..! |
குழந்தை தலை சீரான நிலையில் இல்லாமல் இருப்பதன் காரணம்:
தாய்மார்கள் பிரசவ காலத்தில் இருக்கும் போது குழந்தை மிகவும் சிரமப்பட்டு வெளியில் வந்தால் குழந்தையின் தலை உருண்டை வடிவில் இல்லாமல் இருக்கும்.
சில நேரத்தில் பிறக்கும் போது குழந்தைக்கு தலை பகுதி சீராக இருந்தாலும் நாளடைவில் தலை வடிவம் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதாவது குழந்தையை படுக்க வைக்கும் போது சில மாதம் வரை குழந்தை ஒரே மாதிரியான நிலையில் படுத்து உறங்குவதால் பின் பகுதி தலைக்கு அழுத்தம் கொடுத்து மண்டை பகுதி தட்டையாக மாறுகிறது.
உங்களுடைய குழந்தை தலை பகுதியில் இரண்டு மிருதுவான பகுதிகளை காணலாம். அது மண்டை ஓடு முழுமையாக வளர்ச்சி அடையவில்லை என்பதை குறிக்கிறது. இந்த அறிகுறியானது பிறப்பு கால்வாய் வழியாகக் குழந்தையின் தலையை பிரசவ காலத்தில் வெளியே எடுக்கும் போது ஏற்பட்டதாக இருக்கும்.
பிரசவ காலத்தில் பெரும்பாலான குழந்தை பிறக்கும் போது கூர்மையுடன் கொண்ட தலையுடன் பிறக்கிறார்கள். குழந்தைக்கு ஒரு புறம் தலை தட்டை மற்றும் சீராக இருந்தாலும் தாய்மார்கள் சில முயற்சிகளை பின்பற்ற வேண்டும்.
குழந்தைக்கு சீரற்ற தலை பாதிப்பை ஏற்படுத்துமா:
தலையின் வடிவம் குழந்தை வளரும் நாளடைவில் அழகு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படக்கூடும். குழந்தைக்கு பின் தலையில் ஏற்படும் அழுத்தத்தினால் தலை தட்டையாக மாறும். இதனால் மூளை, குழந்தை வளர்ச்சி பகுதிகள் எதுவும் பாதிப்பு ஏற்படாது.
குழந்தையின் தட்டை தலையினை தவிர்க்க:
குழந்தைக்கு சரியான படுக்கை அமைத்தல்:
உங்கள் குழந்தை பிறந்த நாள் முதல் தூங்குவதற்கு சரியான படுக்கையை தேர்வு செய்யவும். குழந்தை பிறந்த சில நாட்கள் பின்னந்தலை மிருதுவாக இருக்கும். குழந்தையை எப்போதும் ஒரே நிலையில் தூங்க வைத்தால், தலையின் வடிவம் தட்டையாகலாம்.
குழந்தை தலையை ஒரே இடத்தில் வைக்காமல் இருக்கவும்:
குழந்தை பிறந்து சில வாரம் கழித்து ஒவ்வொரு இரவும் குழந்தை தூங்கும் போது தலையை வேறு வேறு பக்கத்தில் வைத்து தூங்கும் படி தாய்மார்கள் செய்ய வேண்டும். இந்த முறையினை பின்பற்றினால் தலைக்குப் போதுமான சுழற்சி கிடைத்து குழந்தையின் தலை நல்ல வடிவம் கிடைக்கும்.
தலைக்கு வாட்டம் கொடுப்பது:
துணிகளை வைத்து குழந்தையின் தலை எப்போதும் ஒரே நிலையில் இருக்கும் படி செய்யாதீர்கள். இதனால் கூட குழந்தைக்கு தலை தட்டையாக வாய்ப்பு அதிகமாக உள்ளது.
குழந்தையை நேராக உறங்க வைக்கும் முறை:
குழந்தையினை எப்போதும் குப்புற படுக்க வைக்காமல் நேராக படுக்க வைக்க வேண்டும்.
குழந்தை சீக்கிரம் நடக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்..! Babies Walk At 8 Months..! |
பால் கொடுக்கும் போது வாட்டம் மாற்றும் முறை:
பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது குழந்தையை மாற்றி மாற்றி வைத்து கொடுக்க வேண்டும். ஒரே கையில் அனைத்து கொடுக்காமல் நிலையினை மாற்றி கொடுப்பதால் குழந்தை தலை தட்டையாக வாய்ப்பு குறைவாக உள்ளது.
ஒரே நிலையை தவிர்க்க வேண்டும்:
உங்களுடைய குழந்தை அதிக நேரம் ஒரே நிலையில் இருப்பதை தவிர்த்து கொள்வது நல்லது. இதனால் குழந்தைக்கு தலையில் ஏற்படும் அழுத்தம் குறையும். மேலும் குழந்தைக்கு தட்டை வடிவம் இல்லாமல் உருண்டையான வடிவத்தில் தலை பகுதியானது கிடைக்கும்.
தாய்மார்கள் உள்ளங்கையால் குழந்தைக்கு செய்ய வேண்டியவை:
குழந்தையின் தலைக்கு தாய்மார்களின் உள்ளங்கைகளால் தலையினை உருட்டி தேய்த்து, அதிக வலி கொடுக்காமல் பொறுமையாக மசாஜ் போல் செய்ய வேண்டும். இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, குழந்தையின் தலை உருண்டை வடிவம் கிடைக்கும். இவற்றையெல்லாம் பின்பற்றிய பிறகும் குழந்தைக்கு தலை தட்டையாக இருந்தால் மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.
குழந்தை பாதுகாப்பு:
குழந்தையின் கழுத்துப் பகுதி திடமாகத் தொடங்கியதும், குழந்தையை சில நிமிடம் வரை குப்புற படுக்க வைக்கலாம். இந்த முறையை செய்து வந்தால் குழந்தைக்கு பின் பகுதியில் அழுத்தம் ஏற்படுவதை தவிர்த்துத் தட்டையான தலை ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.
குழந்தையின் விளையாட்டு இடத்தினை அடிக்கடி மாற்றுவதாலும் தட்டை தலையானது மாற்றம் அடையும்.
குழந்தைக்கு அணியும் தலை கவசம்:
இத்தனை முயற்சிகள் பின்பற்றிய பிறகும் குழந்தைக்கு தலை உருண்டை வடிவில் இல்லையென்றால் அதற்கென தலை கவசம் கிடைக்கின்றது. இதனை நீங்கள் 6 மாதம் முதல் 8 மாதமான குழந்தைக்கு போட்டு தட்டை வடிவில் உள்ள தலையினை சீராக அமைக்கலாம்.
எப்போதும் குழந்தையினை சரியான நிலையில் தூக்க முயற்சி செய்ய வேண்டும். இதனால் குழந்தைக்கு கழுத்துக்கு பிடிப்பு ஏற்படுவதோடு தலை பகுதியிலும் அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவும்.
வீட்டில் உள்ள பெரியவர்களிடம் குழந்தைக்கு உருண்டை வடிவ தலை பெறுவதற்கு ஆலோசனைகளை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம். அவர்கள் கூறும் அறிவுரைகளை பின்பற்றி உங்களுடைய குழந்தை தலையினை பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
1 வயது குழந்தைக்கான புரத உணவு..! 1 Year Baby Protein Foods..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby Health Tips Tamil |