குழந்தையின் தலை வியர்ப்பதற்கான காரணங்கள்..! Baby Head Sweating Reasons..!

Advertisement

குழந்தையின் தலை வியர்ப்பதற்கான காரணங்கள்..! Baby Head Sweating Reasons..!

Baby Head Sweating Reasons: பொதுவாக குழந்தைகளுக்கு தலை அதிகம் வியர்க்கும். தலையில் குழந்தைகளுக்கு அதிகம் வியர்த்தால் சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகள் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து பெற்றோர்கள் உடனே குழந்தைகளை குழந்தை நல மருத்துவரிடம் அழைத்து செல்வர். குழந்தைகளுக்கு தலை வியர்த்து போவது என்பது ஒரு சாதாரண விஷயம் தான் இதற்கு பெற்றோர்கள் பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

சரி வாங்க குழந்தைகளுக்கு தலை வியர்த்து (குழந்தைக்கு தலை வியர்த்தல்) போவதற்கு என்ன காரணம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

குடல் இறக்கம் குணமாக சித்த மருத்துவம்..!Hernia Treatment in Siddha in…

குழந்தைக்கு தலை வியர்த்தல் காரணம் (Baby Head Sweating Reasons): 1

குழந்தைக்கு தலை வியர்த்தல்: குழந்தை பருவத்தில் தான் அனைத்து வகை வளர்ச்சிகளும் நிகழும். அந்த வகையில், இனிப்பு மொட்டுக்கள் முதலில் தலையில் தான் உருவாகும், வளர வளர அது உடல் பாகங்களுக்கு மாற்றப்படும்.

வளர்ந்த பின் சில வருடங்களில், இனிப்பு மொட்டுக்களின் உருவாக்கம் நிறைவுபெறும். இவை தலையில் இருப்பதால், அதிகம் வியர்க்கிறது.

குழந்தைகளின் தலை வியர்ப்பது, மூளையின் வளர்ச்சியையும் குறிக்கும், குழந்தையின் தலையில் வியர்க்கவில்லை எனில், மூளையின் செயல்பாடு சரியானதாக இல்லை என்று பொருள்.

குழந்தைக்கு தலை வியர்த்தல் காரணம் (Baby Head Sweating Reasons): 2

குழந்தைக்கு தலை வியர்த்தல்: பொதுவாக குழந்தைகளுக்கு இதயத்துடிப்பு நிமிடங்களுக்கு 130 துடிப்புகளாக இருக்கும். பெரியவர்களுக்கு ஒரு நிமிடத்துக்கு 70-90 துடிப்புகளாக இருக்கும்.

குழந்தைகளின் சுவாசமும், சுவாசிக்கும் முறையும் அதிகமாக இருக்கும். இவையும் குழந்தைகளின் தலை வியர்ப்பதற்கு காரணங்களாகும்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்..! Baby fever treatment in…

குழந்தைக்கு தலை வியர்த்தல் காரணம் (Baby Head Sweating Reasons): 3

குழந்தைக்கு தலை வியர்த்தல்: பொதுவாக குழந்தைகளை தூங்க வைக்கும் போது, உடல், தலை என அனைத்து உடல் பாகங்களையும் போர்வையால், மூடிவிடக்கூடாது.

அதாவது எப்பொழுதுமே தலையை மூடாமல், குழந்தை தூங்கும் அறை நல்ல காற்றோட்டம் உள்ளதாகவும், வெளிச்சமாகவும் தூய்மையாகவும் இருத்தல் அவசியம்.

ஏனெனில் இது போன்ற காரணங்களினாலும் குழந்தைகளுக்கு தலை வியர்த்து போகும்.

குறிப்புகள்:

குழந்தைக்கு தலை வியர்த்தல்: முன்பு கூறியது போல் இனிப்பு மொட்டுகளால் குழந்தைகளுக்கு தலை வியர்த்து போகும். எனவே மாதத்திற்கு ஒரு முறை தங்கள் குழந்தைகளுக்கு முடி வெட்டி விடுங்கள் அல்லது மொட்டை அடித்து விடவும்.

இதனால் குழந்தைகளுக்கு அதிகம் தலை வியர்த்து போவதினால் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

குழந்தைகளுக்கு அதிகம் வியர்த்து போனால் வாரத்திற்கு இருமுறை தலைக்கு குளிக்க வைக்கவும். குளித்தபின், தலையை நன்றாக துவட்டவும், ஸ்பாஞ்ச் கொண்டு துடைத்து விடவும்.

குழந்தைக்கு தலை வியர்த்தல்:- அதிக வெப்பமான சூழ்நிலை மற்றும் புழுக்கமான சூழ்நிலை இல்லாமல், மேற்கூறிய காரணங்கள் அன்றி குழந்தைக்கு அதிகம் வியர்த்தால், குழந்தைக்கு இருதய பாதிப்பாக இருக்கலாம். ஆகையால், உடனே மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.

குழந்தைக்கு மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement