குழந்தைக்கு வீட்டிலே செய்யலாம்..! ஹோம்மேட் ஓட்ஸ் மீல் சோப்..! how To Make Baby Oatmeal At home..!

Advertisement

 வீட்டிலே ஓட்ஸ் மீல் சோப் தயாரிப்பது எப்படி..! homemade Oatmeal Soap For Babies..!

Oatmeal Soap For Babies: அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் வீட்டில் இருந்தபடியே குழந்தைக்கு ஹோம்மேட் ஓட்ஸ் மீல் சோப் எப்படி செய்யலாம் என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். குழந்தைகளின் உணவு முறைகளைபாதுகாப்பதில் பெற்றோர்கள் அனைவருமே தனி கவனம் எடுத்துக்கொள்வோம். அது போலவே அவர்களின் சரும ஆரோக்கியத்திற்கும் நாம் கவனம் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். ஓட்ஸ் பற்றிய விவரம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஓட்ஸானது சரும பிரச்சனைக்கு தீர்வு வகிக்கக்கூடியது. சரி வாங்க தோழிகளே குழந்தையின் சருமத்தினை பாதுகாப்பதற்கு கெமிக்கல் இல்லாத ஓட்ஸ் சோப்பை வீட்டிலே எப்படி தயாரிக்கலாம் என்பதன் விவரங்களை விரிவாக படித்து தெரிந்துகொள்ளுவோம்..!

newகுழந்தைக்கு ஏற்படும் சரும பருக்களின் தீர்வு..! Baby Acne Treatment home Remedies..!

ஓட்ஸ் மீல் சோப் – தேவையான பொருட்கள்:

  1. நிறமற்ற ட்ரான்ஸ்பரென்ட் சோப் – 1
  2. பாதாம் பால் – 4 அல்லது 5 டேபிள் ஸ்பூன் 
  3. தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 
  4. சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன் 
  5. பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் 
  6. சோப் மோல்ட் அல்லது – பேப்பர் கப் – 3

செய்முறை விளக்கம் 1:

ஓட்ஸ் மீல் சோப் செய்வதற்கு முதலில் நிறம் இல்லாத முழு சோப்பை சிறியதாக நறுக்கி ஸ்டீல் பாத்திரத்தில் போட்டு கொள்ளவும். அடுத்து கண்ணாடி பவுலில் பாதாம் பால் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். பாதாம் பாலுடன் 2 டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயினை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை விளக்கம் 2:

அடுத்து அதே கண்ணாடி பவுலில் 3 டேபிள் ஸ்பூன் அளவு ஓட்ஸ் சேர்க்கவும். இதனுடன் சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன் அளவு சேர்க்கவும். பவுலில் இவற்றையெல்லாம் சேர்த்த பிறகு நன்றாக 3 நிமிடம் வரை கலந்து கொள்ளவும். கலவையானது கெட்டியான பதத்தில் இருந்தால் மீண்டும் 1 டேபிள் ஸ்பூன் அளவு பாதாம் பால் சேர்த்து கலக்கினால் கெட்டியான நிலையில் இருந்து மாறிவிடும்.

செய்முறை விளக்கம் 3:

அடுத்து அடுப்பில் ஒரு அகலமான கடாயில் தண்ணீர் பாதியான அளவிற்கு வைத்து ஹீட் செய்யவும். தண்ணீர் நன்றாக ஹீட் ஆனதும் சோப் இருக்கும் பாத்திரத்தினை அகலமான தண்ணீரின் உள் வைக்க வேண்டும். இப்போது சோப்பானது கரைய ஆரம்பிக்கும். சோப் நன்றாக கரைந்ததும் அடுப்பை நிறுத்திக்கொள்ளவும்.

செய்முறை விளக்கம் 4:

ஏற்கனவே கண்ணாடி பவுலில் ஓட்ஸ், பால் பவுடர் கலந்து வைத்துள்ள பவுலில் இப்போது கரைத்து வைத்த சோப்பை சேர்த்து கலந்துகொள்ளவும். அடுத்து இளஞ்சூடாக இருக்கும் நிலையிலே சோப் மவுல்டில் இந்த கலவையினை ஊற்றிவிட வேண்டும்.

தாங்களிடம் சோப் மவுல்ட் இல்லையென்றால் பேப்பர் கப்பில் உள் பகுதியில் வாஸ்லினை தடவி கலவையை ஊற்றிக்கொள்ளவும். அடுத்ததாக 6 -7 மணி நேரம் கழித்த பிறகு சோப் கட்டியாகி விடும். இப்போது சோப்பை எடுத்துக்கொள்ளலாம். அவ்ளோதாங்க வீட்டிலே சுலபமான முறையில் தயாரித்த ஓட்ஸ் மீல் சோப் ரெடி.

newகுழந்தைகளுக்கான குளியல் பொடி செய்யலாம் வாங்க..!

குறிப்பு:

இந்த சோப்பில் கெமிக்கல் மிகவும் குறைவு என்பதால் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

இந்த சோப் தயாரிப்பதற்கு 30 நிமிடம் மட்டுமே ஆகும்.

இந்த சோப்பை 6 மாத குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.

சோப் நிறத்துடன் கிடைக்க:

நிறமில்லாத சோப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். நிறத்துடன் இருக்கக்கூடிய சோப் கிடைத்தால் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சோப் நிறத்துடன் வேண்டும் என்றால் ஒரு சிட்டிகை அளவு குங்குமத்தை தேங்காய் எண்ணெயில் கலக்கி சோப் கலவையில் ஊற்றி விட்டால் நீங்கள் நினைக்கும் வகையில் சோப்பானது நல்ல கலராக கிடைக்கும்.

newஇயற்கை முறையில் பேபி மசாஜ் எண்ணெய்..! homemade Baby Massage Oil..!
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby Health Tips 
Advertisement