குழந்தைகளுக்கான குளியல் பொடி செய்யலாம் வாங்க..!

baby bathing powder

குழந்தைகளுக்கான குளியல் பொடி (Homemade Baby Bathing Powder)..!

குழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால் குழந்தைகளுக்கு எளிதில் நோய் தொற்றுகளால் பாதிக்கப்படுவார்கள். எனவே குழந்தைகளுக்கு நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருப்பதற்காக குழந்தைகளுக்கான குளியல் சோப் பயன்படுத்துவோம். இருப்பினும் குழந்தைகளுக்கு குளியல் சோப் பயன்படுத்துவதற்கு பதில், வீட்டில் இயற்கை முறையில் தயாரிக்க கூடிய குழந்தைகளுக்கான குளியல் பொடி (baby bathing powder) பயன்படுத்தலாமல்லவா. இதனால் குழந்தைகளுக்கு எந்த ஒரு நோய் தொற்றுகளும் தீண்டாது. இதனால் குழந்தையின் உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.

சரி வாருங்கள் இனியாவது குழந்தைகளுக்கான குளியல் பொடி (baby bathing powder) தயாரித்து பயன்படுத்துவோம். சரி இப்போது குழந்தைகளுக்கான குளியல் (baby bathing powder) பொடி எப்படி தயாரிப்பது என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

குழந்தை குளிக்கும் போது ஏன் அழுகிறது தெரியுமா..?

குளியல் பொடி(bath powder) தயாரிக்க தேவையான பொருட்கள்:

  1. ரோஜா இதழ்கள் – 100 கிராம்
  2. பச்சைப் பயிர் – 500 கிராம்
  3. வெட்டி வேர் – ஒரு கைப்பிடி அளவு
  4. பூலான் கிழங்கு – 50 கிராம்
  5. ஆவாரம்பூ – 100 கிராம்
  6. கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்
  7. வேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு

குளியல் பொடி(bath powder) செய்முறை:

மேற்கூறிய பொருட்களை நன்கு வெயிலில் உலர்த்தவும். பூ வகைகள் அனைத்தும் கைகளால் பிடித்தால், நொறுங்கும் படி நன்கு உலர வேண்டும். பின் இவற்றை மிஷினில் அரைத்து மீண்டும் உலர வைத்து பத்திரப்படுத்தி வைத்து கொள்ளுங்கள். இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

குறிப்புகள்:

ஆண் குழந்தையாக இருந்தால் கஸ்தூரி மஞ்சளை அதிகம் சேர்க்க வேண்டாம். அதுவே பெண் குழந்தையாக இருந்தால் கஸ்துரிமஞ்சளை அதிகம் சேர்த்துகொள்ளலாம்.

குழந்தையை குளிக்கவைப்பதற்கு முன் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்துவிட்டு பின்பு, இந்த குளியல் பொடியை பயன்படுத்துங்கள்.

குளியல் பொடி(bath powder) பயன்படுத்து முறை:

இந்த குளியல் பொடியை ஆறுமாத குழந்தை முதல் அனைத்து குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்.

குழந்தையை குளிக்கவைப்பதற்கு முன், ஒரு கிண்ணத்தில் இந்த குழந்தைகளுக்கான குளியல் பொடியை (baby bathing powder) ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள். பின்பு பசும்பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின் குழந்தைகளுக்கு குளியல் பொடியாக(bath powder) பயன்படுத்துங்கள்.

குழந்தையின் நாக்கு, வாய், நகம் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா ?

குழந்தைகளுக்கு குளியல் பொடியின் பயன்கள்:

ரோஜா இதழ்:

ரோஜா இதழ்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது குழந்தையின் சருமத்தை (baby bathing powder) மென்மையாக்கவும், மிளிர செய்யவும், ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது. மேலும் சூரிய கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது.

பாசிப்பயர்:

பாசிப்பயரில் வைட்டமின் எ மற்றும் சி நிறைந்துள்ளது. இது குழந்தையின் இறந்த செல்களை அகற்றவும் (baby bathing powder), மென்மையாகவும், சருமத்தை பொலிவு பெறவும் செய்ய உதவுகிறது.

வெட்டி வேர்:

வெட்டி வேர் உடலின் குளிர்ச்சியை தக்க வைக்கவும், கிருமிநாசினியாகவும், சருமத்தை மென்மையாக்கவும் பயன்படுகிறது.

பூலான் கிழங்கு:

பூலான் கிழங்கு மற்றும் சந்தனம் வாசனை பொருளாகவும், சருமத்தின் நிறத்தை மெருகூட்டவும், சரும பிரச்சனைகளை சரி செய்யவும், கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.

ஆவாரம் பூ:

ஆவாரம் பூ நல்ல மணத்தை தருவதோடு, உடலில் நிறத்தை மாற்றி பொலிவு பெற செய்யவும், சரும பிரச்சனைகளுக்கான நல்ல தீர்வாகவும் அமைகிறது.

கஸ்துரி மஞ்சள்:

கஸ்தூரி மஞ்சள் சருமத்தின் தேவையற்ற முடிகளை அகற்றவும், சரும நிறத்தை மென்மையாக்கி மிளிர செய்யவும்,கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

வேப்பிலை:

வேப்பிலை இயற்கை கிருமிநாசினியாக செயல்படுவதோடு, சருமத்திலிருக்கும் எண்ணெய் பசையை அகற்ற உதவுகிறது. (baby bathing powder)

குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க நட்ஸ் பௌடர்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.