0-5 வயதுள்ள குழந்தைக்கு போட வேண்டிய தடுப்பூசி அட்டவணை..! Baby Vaccination Chart in Tamil
Baby Vaccination Chart in Tamil – குழந்தைகளை நன்கு ஆரோக்கியமும், ஊட்டச்சத்து நிறைந்த குழந்தையாகவும் வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைக்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சையை தரவேண்டியது மிகவும் அவசியம். குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு முன்னதாகவே 5 தடுப்பூசி மருந்துகளை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தடுப்பூசி போடுவதில் மட்டும் அலட்சியம்படுத்தக்கூடாது. அப்படி அலட்சியம்படுத்தினால் அந்த குழந்தைக்கு தான் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனை ஏற்படும். சரி இந்த பதிவில் குழந்தைக்கு போட வேண்டிய தடுப்பூசிகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
தடுப்பூசி அட்டவணை – Vaccination for Babies in Tamil:
டிபிடி பூஸ்டர் 1, ஓரல் போலியோ பூஸ்டர் 1, விட்டமின் ஏ-2 வது டோஸ், மீசில்ஸ் பூஸ்டர், மூளைக்காய்ச்சல் தடுப்பு மருந்து – தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் மட்டுமே
பாதுகாக்கும் நோய்கள்
டிப்தீரியா, கக்குவான் இருமல், டெடனஸ், போலியோ, விட்டமின் ஏ குறைபாடு, தட்டம்மை, மூளைக்காய்ச்சல்