குழந்தைக்கு மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்..!

மூக்கடைப்பு பாட்டி வைத்தியம்

குழந்தைக்கு மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம் (blocked nose home remedies)..!

மூக்கடைப்பு பாட்டி வைத்தியம்: குழந்தைகளுக்கு அடிக்கடி மூக்கடைப்பு பிரச்சனை (blocked nose home remedies) வருவது சாதாரண விஷயம் தான். பெரும்பாலும் இந்த மூக்கடைப்பு பிரச்சனை சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு தான் அதிகமாக ஏற்படும். அந்த வகையில் குழந்தைகள் அதிகமாக இந்த மூக்கடைப்பு பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.

சரி இந்த மூக்கடைப்பு குணமாக (blocked nose home remedies) என்ன வீட்டு வைத்தியம் உள்ளது. எப்படி குணப்படுத்தலாம் என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க…

குழந்தைக்கு சளி பிரச்சனை சரியாக..!

குழந்தைக்கு மூக்கடைப்பு நீங்க வீட்டு வைத்தியம்:

மூக்கடைப்பு பாட்டி வைத்தியம் – தேன் மிளகு:-

Mookadaipu patti vaiththiyam – குழந்தையின் மூக்கடைப்பு பிரச்சனையை (blocked nose home remedies) சரி செய்ய 10 மிளகினை இரவிலேயே தேனில் ஊறவைத்து மறுநாள் காலை அதனை எடுத்து வறுத்து கொள்ளவும்.

இவற்றை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வெறும் வாயில் சாப்பிடலாம். இவ்வாறு வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வர மூக்கடைப்பு பிரச்சனை உடனே சரியாகிவிடும்.

மூக்கடைப்பு பாட்டி வைத்தியம் – மூலிகை டீ:-

Mookadaipu patti vaiththiyam – புதினா டீ, இஞ்சி டீ, சுக்கு காபி ஆகியவற்றை குழந்தைக்கு கொடுக்கலாம். மிளகு கஷாயம், இஞ்சி, சுக்கு கஷாயம் ஆகியவையும் குழந்தைகளுக்கு போட்டு கொடுக்கலாம்.

இவ்வாறு செய்து கொடுப்பதினால் குழந்தைக்கு மூக்கடைப்பு பிரச்சனை உடனே சரியாகிவிடும்.

மூக்கடைப்பு பாட்டி வைத்தியம் – பூண்டு:

Mookadaipu patti vaiththiyam (குழந்தைக்கு மூக்கடைப்பு நீங்க) -குழந்தைக்கு ஏற்படும் மூக்கடைப்பு பிரச்னையை (blocked nose home remedies) சரிசெய்ய இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்.

ஒரு கப் நீரில் மூன்று பூண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து கொதிக்க வைத்து, 21 நாட்கள் தொடர்ந்து குடித்து வர மூக்கடைப்பு பிரச்சனையை உடனே சரியாகிவிடும். மேலும் சளி வெளியேறிவிடும்.

குழந்தைக்கு மூக்கடைப்பு நீங்க – சின்ன வெங்காயம்:

Mookadaipu patti vaiththiyam -சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, சுத்தமாக கழுவி பச்சையாக தினமும் சாப்பிட்டு வர மூக்கடைப்பு பிரச்சனை சரியாகிவிடும்.

மூக்கடைப்பு பாட்டி வைத்தியம் – தூதுவேளை ரசம்:

Mookadaipu patti vaiththiyam (குழந்தைக்கு மூக்கடைப்பு குணமாக) – குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு பிரச்சனை சரியாக, குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தூதுவேளை ரசம் செய்து கொடுங்கள்.

இந்த ரசத்தை குடிக்கலாம் அல்லது சாதத்தில் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம். தூதுவேளை இயற்கையாகவே சளி, இருமல் போன்ற பிரச்சனையை சரி செய்யும் ஒரு சிறந்த மருந்து.

குழந்தையின் சளி, இருமல் குணமாக பாட்டி வைத்தியம்..!

மூக்கடைப்பு பாட்டி வைத்தியம் – கற்பூரம்:-

Mookadaipu patti vaiththiyam – சிறிதளவு தேங்காய் எண்ணெயை எடுத்து, சூடு படுத்தவேண்டும், எண்ணெய் சூடாகியதும் சிறிதளவு கற்பூரத்தை எடுத்து தூள் செய்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

எண்ணெய் சூடு ஆறியதும் 5 துளிகள் எடுத்து உள்ளங்கையில் தேய்த்து, குழந்தையின் மார்பு பகுதியில் தடவிவிடுங்கள்.

இவ்வாறு செய்வதினால் குழந்தைகளை மிகவும் கதகதப்பாக உணர்வார்கள். குழந்தையின் மூக்கடைப்பு பிரச்சனை உடனே சரியாகிவிடும்.

குழந்தைக்கு மூக்கடைப்பு நீங்க:-

குழந்தைகளுக்கு குளிர் மற்றும் மழைக்காலங்களில் சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய மொசுமொசுக்கை சிறந்த மூலிகை மருந்தாக விளங்குகிறது.

எனவே ஒரு டம்ளர் புழுங்கல் அரிசியை ஊறவைத்து கொள்ளவும், இந்த அரிசியுடன் ஒரு கையளவு மொசுமொசுக்கை இலை, ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு போல் அரைத்து கொள்ளவும்.

இந்த மாவை தோசை போல் ஊற்றி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இவ்வாறு செய்து கொடுப்பதினால் குழந்தைகளுக்கு ஏற்படும்க் சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் உடனே சரியாகிவிடும்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்