குழந்தை தலையில் அடிபட்டால்
வணக்கம் நண்பர்களே.! குழந்தைகள் உள்ள வீட்டில் நாம் என்ன தான் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்தாலும் குழந்தைகள் கீழே விழுந்து விடுவார்கள். தினமும் விளையாடும் போது சரி, நடந்து போனாலும் சரி கீழே விழுந்து விடுவார்கள். ஆனால் கீழே விழும் போது கை மற்றும் கால்களில் அடிபட்டால் பெரிய பிரச்சனை இருக்காது. அதுவே உங்கள் குழந்தைகள் கீழே விழுந்து தலையில் அடிபட்டால் சில அறிகுறிகள் இருக்கும் போது அதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அது என்னென்ன அறிகுறிகள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
தலையில் அடிபட்டால் ஆபத்தான அறிகுறிகள்:
குழந்தைகள் கீழே விழுந்தால் லேசான காயம் மற்றும் தீவிரமான காயம் என இரண்டாக பிரிக்கலாம்.
தலையில் அடிபட்டு லேசான காயம் மற்றும் கீறல் போன்றவை இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே சில அறிகுறிகள் இருந்தால் கவனிக்க வேண்டும். அது என்னென்ன அறிகுறிகள் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ குழந்தை தலையில் அடிபட்டால் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள்..!
குழந்தைகள் தலையில் அடிபட்டால் அந்த இடத்தில் வீக்கம் ஏற்படுவது முக்கிய அறிகுறியாகும். அதோடு அந்த வீக்கம் நேரம் ஆக ஆக வீக்கம் அதிகரித்து கொண்டே போனால் தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.
மேலும் குழந்தைகள் தலையில் அடிபட்டவனுடன் வாந்தி எடுத்தால் கவனிக்க வேண்டும். அடிபட்டதிலுருந்து ஒரு நாள் முழுவதும் வாந்தி எடுத்து கொண்டே இருந்தால் தலையில் பயங்கரமாக அடிபட்டிருக்கிறது என்று பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.அடுத்து அடிபட்டவுடன் காது மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வந்தால் நேரம் கடத்தமால் மருத்துவரை அணுக வேண்டும்.
குழந்தைகள் கீழே விழுந்து அடிபட்டவுடன் அவர்கள் எப்பொழுதும் போல் இல்லாமல் கொஞ்சம் மந்தமாக இருந்தால் கவனிக்க வேண்டும்.
ரொம்ப முக்கியமாக குழந்தை கீழே விழுந்தவுடனே அல்லது நேரம் கடந்த பிறகு வலிப்பு ஏற்பட்டால் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.
மேலும் பெரியவர்களுக்கு அடிபட்டால் என்ன செய்கிறது என்று சொல்லுவர்கள். ஆனால் குழந்தைகளுக்கு சொல்ல தெரியாது. அதனால் குழந்தைகள் அடிபட்டு எந்திருத்ததும் எப்பொழுதும் போல் நடக்காமல் கொஞ்சம் தள்ளாடி தள்ளாடி நடந்தால் அதாவது மயக்கம் வருவது போல் நடந்தால் தாமதிக்காமல் குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.
பெற்றோர்களே குழ்நதைகளுக்கு தலையில் அடிபட்டவுடன் மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சைகள் பெறுவது அவசியமானதாகும்.
இதையும் படியுங்கள் ⇒ பிறந்த குழந்தைகளுக்கு நெஞ்சு சளி எளிதில் குணமாக இதை தெரிந்துகொள்ளுங்கள்
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |