குழந்தைக்கு ஏற்படும் டயப்பர் ரேஷஸ் சரியாக டிப்ஸ்..! Diaper Rashes Home Remedies..!

Diaper Rashes Home Remedies

குழந்தைக்கு ஏற்படும் டயப்பர் ரேஷஸ் சரியாக டிப்ஸ்..! Natural Diaper Rash Treatment..!

Diaper Rashes Home Remedies:- இப்பொழுது உள்ள மாடர்ன் உலகில் பச்சிளம் குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துவிட்டது. நம் பாட்டிமார்கள் காலத்தில் குழந்தைகளுக்கு வெறும் பருத்தி ஆடைகளையே இடுப்பில் சுற்றி வைத்தனர். ஆனால் இப்பொழுது பெருகி உள்ள மாடர்ன் கலாச்சாரத்தில் பருத்தி உடைகள் மறைந்தே போய்விட்டது.

குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும் போதும், குழந்தைகளை இரவில் தூங்க வைக்கும் போதும் குழந்தைகளுக்கு டயப்பரை அதிகளவு பயன்படுத்துகின்றன.

இந்த டயப்பரை குழந்தைகளுக்கு பயன்படுத்துவதினால் டயப்பர் ரேஷஸ் ஏற்படுகிறது. இந்த டயப்பர் ரேஷஸ் எதனால் ஏற்படுகிறது..? இதற்கு வீட்டு வைத்தியம் என்ன உள்ளது என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறிவோம் வாங்க.

newதாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்..!

குழந்தைக்கு டயப்பர் ரேஷஸ் வருவதற்கான காரணம்:

இந்த டயப்பர் ரேஷஸ் குழந்தைகளுக்கு உராய்வு, ஈரப்பதம், சிறுநீர் மற்றும் மலத்திலுள்ள கெமிக்கல், பூஞ்சை, காளான், தொற்று ஒவ்வாமை போன்ற காரணங்களினால் குழந்தைகளுக்கு டயப்பர் மூலம் ரேஷஸ் ஏற்படுகிறது. குழந்தைகளின் தோல் பகுதி மிகவும் மென்மையானது என்பதால் இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு அதிக எரிச்சல் மற்றும் அரிப்பினை ஏற்படுத்தும். சரி இதற்கான வீட்டு வைத்தியம் என்ன உள்ளது என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

Diaper Rashes Home Remedies..!

தாய்ப்பால்:

Diaper Rashes Home Remedies

குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் சிறிதளவு தாய்ப்பாலினை தடவி ஆற விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் தாய்ப்பாலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு பண்புகள் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை விரைவில் குணப்படுத்தும்.

கற்றாழை ஜெல்:-

Diaper Rashes Home Remedies

நமக்கு இயற்கையாகவே கிடைத்த ஒரு சிறந்த நிவாரண பொருளாக கற்றாழை பயன்படுகிறது. எனவே இந்த கற்றாழை ஜெல்லை சிறிதளவு எடுத்து குழந்தைகளுக்கு தடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தடவுங்கள்.

இவ்வாறு கற்றாழை ஜெல்லினை தடவுவதினால் சில நாட்களிலேயே பிரச்சனை சரியாகிவிடும். மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலுக்கும் கற்றாழை ஜெல்லினை பயன்படுத்தலாம் நல்ல நிவாரணமாக செயல்படும்.

முட்டையின் வெள்ளைக்கரு:-

Diaper Rashes Home Remedies

குழந்தைகளுக்கு ரேஷஸ் ஏற்படும்பொழுது முட்டையை உடைத்து வெள்ளைக்  கருவினை மட்டும் தனியாக பிரித்து எடுத்து கொள்ளுங்கள். இந்த வெள்ளைக் கருவினை ரேஷஸ் உள்ள இடங்களில் அப்ளை செய்து, சிறிது நேரம் கழித்து துணியால் துடைத்து எடுக்கவும். இவ்வாறு செய்வதினால் குழந்தைக்கு ஏற்படும் ரேஷஸ் சரியாகும்.

newகுழந்தைக்கு பசும்பால் எப்படி கொடுக்க வேண்டும்..!

ஆலிவ் ஆயில்:-

Diaper Rashes Home Remedies

ஆலிவ் எண்ணெயில் உள்ள ஈரப்பதம், ரேஷசை போக்கி சருமத்திற்கு மென்மையான தோற்றத்தைத் தருகிறது. 1 ஸ்பூன் தண்ணீரில் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் பின் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் ரேஷஸ் சரியாகும்.

குழந்தைக்கு காற்றோட்டம் மிகவும் அவசியம்:-

Diaper Rashes Home Remedies

குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும் போது மற்றும் இரவு தூங்கும் போது மட்டும் குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துங்கள். மற்ற நேரங்களில் குழந்தைகளின் சருமத்தை காற்றோட்டமாக வைத்திருங்கள்.

இதனால் குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதினால் ஏற்படும் சிவப்பு தடிப்பு, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய சிறந்த இயற்கை வழியாகும்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்