குழந்தைக்கு சளி இருமலின் போது கொடுக்க கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

குழந்தைக்கு சளி இருமல்

பொதுவாக பெரியவர்களுக்கே சளி அல்லது இருமல் போன்ற பிரச்சனைகள் வந்தால் தாங்கி கொள்ள முடியாது. அப்படி ஒருவேளை சளி, இருமல் வந்தால் சரியான தூக்கமின்மை, மூச்சு விடுவதில் சிரமம், வறட்டு இருமல் மற்றும் சளியுடன் கூடிய இருமல் என பல பிரச்சனைகள் தொடர்ச்சியாக வந்து விடும் என்று நாம் கூறுகின்றோம். இந்த மாதிரி இருக்கும் போது குழந்தைகளுக்கு சளி இருந்தால் அவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நமக்கே தெரியும். குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் அதனை சரி செய்வதற்கு மருத்துவரின் ஆலோசனை படி மருந்து மாத்திரை வாங்கி கொடுப்போம். அப்படி இருந்தாலும் கூட குழந்தைக்கு சளி இருமல் இருக்கும் போது சில உணவுகள் கொடுப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும். அது என்னென்ன உணவுகள் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ குழந்தைக்கு தேன் கொடுக்கும் முன் இதை படித்துவிடுங்கள்..!

What Food to Eat During Cold and Cough:

 foods to avoid during cold for babies in tamil

பழங்களில் நிறைய சத்துக்கள் இருந்தாலும் கூட திராட்சை, வாழைப்பழம், தர்பூசணி மற்றும் சாத்துக்குடி போன்ற பழங்களை கொடுக்க கூடாது. இந்த பழங்களையும் கூட நீங்கள் காலை நேரங்களில் மட்டும் தான் கொடுக்க வேண்டும்.

பால் சம்பந்தப்பட்ட பொருட்கள்:

குழந்தைக்கு சளி இருமல்

குழந்தைகளுக்கு சளி அல்லது இருமல் இரண்டில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் தயிர், நெய், வெண்ணெய், கிரீம் மற்றும் பட்டர் போன்ற பொருட்கள் கொடுப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் இது போன்ற பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அவர்களுக்கு சளி மற்றும் இருமலை அதிகரிக்க செய்யும். 

பால் நீங்கள் குழந்தைக்கு கொடுக்க விரும்பினால் வெறும் பாலாக இல்லாமல் அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து அதன் பிறகு பாலை காய்ச்சி 2 வேளை மட்டும் கொடுங்கள்.

உலர் உணவுப் பொருட்கள்:

 குழந்தைக்கு சளி

உலர் உணவு பொருட்களான முந்திரி, திராட்சை மற்றும் பாதாம் போன்ற பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.

அதுமட்டும் இல்லாமல் உலர் உணவு பொருட்கள் அனைத்தையும் பவுடர் போல செய்து பாலில் கலந்தும் கொடுக்க கூடாது. இது போன்ற பொருட்கள் கொடுப்பதை தவிர்க்கவும் ஏனென்றால் நாம் முந்திரி மற்றும் திராட்சை போன்றவற்றை குழந்தைக்கு கொடுக்கும் போது அதனை குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் விழுங்கி விடுவார்கள்.

அப்படி விழுங்கும் போது அவர்களுக்கு இருமல் மற்றும் வாந்தியை அதிகமாக ஏற்படுத்தும். 

பிரிட்ஜில் வைத்த உணவு:

குழந்தையின் இருமல்

நமது வீட்டில் பிரிட்ஜில் வைத்து இருக்கும் பழம், காய் மற்றும் உணவு இவற்றில் எதுவாக இருந்தாலும் அதனை குழந்தைக்கு கொடுக்க கூடாது.

ஒரு வேளை அப்படி கொடுத்தால் அவர்களுக்கு சளியை அதிகரிக்க செய்து மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். 

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க இப்படி செய்யுங்க..!

எண்ணெய் உணவு:

baby for cold and cough in tamil

வீட்டிலோ அல்லது கடையிலோ செய்த எண்ணெயால் ஆன உணவுகளை குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்காமல் இருந்தால் சளி மற்றும் இருமல் குறைய தொடங்கும்.  

காரமான உணவுகள்:

காரமான உணவுகள்

சாதாரணமாக குழந்தைகளுக்கு சளி பிடித்து இருக்கும் போது தொண்டையில் ஒரு விதமான எரிச்சல் ஏற்படும்.

அந்த நேரத்தில் நீங்கள் காரம் அதிகம் உள்ள உணவுகளை கொடுத்தீர்கள் என்றால் அவர்களுக்கு தொண்டையில் ஏற்படும் எரிச்சலை அதிகரிக்க செய்து புண் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

அதனால் சளி மற்றும் இருமல் இருக்கும் போது காரமான உணவுகள் கொடுக்க கூடாது. 

இதையும் படியுங்கள்⇒ குழந்தைகளுக்கு வாந்தியும் வயிற்று போக்கும் உடனே நீங்க இதை மட்டும் செய்துபாருங்கள்

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்
Advertisement