குழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன? Headache symptoms in tamil..!

headache symptoms in tamil

குழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன? Headache Symptoms in Tamil..!

Headache symptoms in tamil:- பெரியவர்களுக்கு மட்டும்தான் தலைவலி ஏற்படும் என்று அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். இப்போது குழந்தைகள் கூட தலை வலி பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். பெரியவர்களாகிய நாம் தலைவலி வந்தால் அதனை நாம் வெளிப்படுத்திவிடுகிறோம். ஆனால் இப்பொழுது சிறியவர்களுக்கு, குழந்தைகளுக்கும் கூட தலை வலி பிரச்சனை ஏற்படுகிறது. அதாவது பள்ளிக்கி செல்லும் குழந்தைகளுக்கு படிப்பு சுமை, தேர்வு சுமை, ப்ராஜக்ட் ஒர்க், வீட்டு பாடம் என்று பள்ளிக்கி செல்லும் குழந்தைகளுக்கு திணிக்கப்படும் பணி சுமையினால் இப்பொழுது உள்ள குழந்தைகளுக்கு தலைவலி பிரச்சனை ஏற்படுகின்றது.

குழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..!

 

ஒரு சில குழந்தைகள் அதை உணர்ந்து தன்  தாயிடம் அம்மா தலை வலிக்கிது என்று சொல்வதுண்டு. பெரும்பாலான பெற்றோர்கள் இந்த வயசுல உனக்கென தலைவலி என்று அலட்சியமாக இருப்பார்கள். இந்த செயல் மிகவும் தவறான ஒன்று தலை வலி யாருக்கு வேண்டுமானாலும் வரும். தலைவலிகளில் பல வகைகள் உள்ளன. ஒரு சில தலைவலிகளை அலட்சியம் செய்தால் அது உங்கள் குழந்தையின் உயிருக்கே பெரிய ஆபத்தினை ஏற்படுத்தி விடும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சரி இந்த குழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன? (Headache symptoms in tamil) என்பதை பற்றி படித்தறிவோம் வாங்க.

தலைவலி காரணங்கள் / Headache symptoms in tamil:-

ஒற்றை தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்..!

குழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன?

போதுமான தூக்கம் இல்லாமல் அல்லது வழமையான தூங்கும் வழக்கங்களில் திடீரென்று மாற்றம் ஏற்படுவதும் குழந்தைக்கு தலைவலி ஏற்படுவதற்கான காரணமாகும்.

குழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன?

அதேபோல் குழந்தைகள் நேரங்கடந்து தூங்கச் செல்வது அல்லது இடையில் முழித்து எழ நேரல், வழமையான நேரத்திற்கு முன்னரே எழ நேருதல். போன்றவைகளும் கூட குழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் ஆகும்.

குழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன?

சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமை, பசியோடு இருப்பது, போதிய நீராகாரம் இன்றி உடல், நாக்கு உலர்தல் போன்றவையும் தலைவலியைத் தூண்டலாம்.

குழந்தையின் மன அழுத்தம் காரணங்களினாலும் இந்த தலைவலி பிரச்சனை ஏற்படும்.

குழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன?

நீண்ட நேரம் கணினி, தொலைக்காட்சியினை பார்ப்பதினாலும் குழந்தைகளுக்கு தலைவலி பிரச்சனை ஏற்படுகின்றது.

குழந்தைக்கு தலையில் லேசாக அடிபட்டு, அதனால் காயம் ஏற்படுதல் ஆகியவையும் தலைவலியைக் கொண்டு வரலாம்.

குழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன?

தடிமன், காய்ச்சல், டொன்சிலைடிஸ், சீழ்ப்பிடித்த புண் போன்ற சாதாரண தொற்று நோய்கள்.

கடுமையான மணங்களை நுகர நேர்ந்தாலும் ஏற்படலாம். வாசனைத் திரவியங்கள், பெயின்ட் மணம், சாம்பராணி மணம் போன்றவை சில உதாரணங்களாகும்.

தலைவலி காரணங்கள் / Headache symptoms in tamil:-

குழந்தைகள் வளருகின்றனர். இதன்போது அவர்கள் உடலில் பலவிதமான ஹார்மோன் மாற்றங்கள் நேர்கின்றன. இவையும் தலைவலியைத் தோற்றுவிக்கலாம்.

தலைவலி காரணங்கள் / Headache symptoms in tamil:-

காரில் நீண்ட நேரம் செல்ல நேரும் போதும் சில குழந்தைகளுக்கு தலைவலி ஏற்படுகிறது.

தலைவலி காரணங்கள் / Headache symptoms in tamil:-

புகை மற்றும் புகைத்தல் காரணமாக கூட குழந்தைகளுக்கு தலைவலி ஏற்பட கூடும்.

காபி, கொக்கோ போன்ற கபேன் கலந்த பானங்களை அருந்துவதும் தலைவலியை ஏற்படுத்தவதாகச் சொல்லப்படுகிறது.

தலைவலி காரணங்கள் / Headache symptoms in tamil:-

குழந்தைகள் சில வகையான மருந்துகளை சாப்பிடுவதினால் குழந்தைகளுக்கு தலை வலி பிரச்சனை ஏற்படுகின்றது.

இயற்கையான முறையில் தலைவலியை எப்படி குணப்படுத்தலாம்?

மருத்துவர்களை நாட வேண்டியது எப்போது?

தலையில் கடுமையாக அடிபட்டு, அதன் காரணமாக (Headache symptoms in tamil) குழந்தைக்கு தொடர்ந்து தலைவலி ஏற்பட்டால் பெற்றோர்கள் கட்டாயமாக குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

குழந்தைகளுக்கு கடுமையான தலைவலியுடன் பார்வையில் மாற்றம், வாந்தியெடுத்தல், கழுத்து உளைவு, கழுத்து விறைப்பு, குழப்பமான மனநிலை, சமநிலை பாதிப்பு மற்றும் கடுமையான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை கண்டிப்பாக மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby health tips in tamil