பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும்?

Advertisement

பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று சந்தேகமா?

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு என்ன உணவு (baby food) கொடுப்பது என்று தினமும் குழம்பி போகும் தாய்மார்களுக்கு சிறந்த டிப்ஸ்.

காலை உணவு:

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவாக (baby food) ஒரு கிளாஸ் பால், இட்லி, தோசை, இடியாப்பம், கேரட், பீட்ருட், வெங்காயம், தக்காளி ஆகியவற்றால் செய்யப்பட்ட சான்விச் செய்து கொடுக்கலாம். காலை உணவாக ஏதேனும் ஒரு பழத்தை கொடுக்கலாம். அவித்த முட்டை அல்லது ஆம்லெட் செய்து கொடுக்கலாம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை தினமும் காலை உணவாக கொடுத்து வரலாம்.

குழந்தைகளுக்கு காலை உணவுகள் ஓட்ஸ் கொடுப்பது மிக அதிக நன்மையை தரும்.

மதிய உணவாக:

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக (baby food) சாதம், காய்கறிகள், மீன் போன்ற இறைச்சி உணவுகளை கொடுத்து வரலாம்.

மீன் சாப்பிடாத குழந்தைகளுக்கு தயிரை கொடுக்கலாம். தயிரை, சாதத்துடன் கலந்து கொடுக்காமல் தனியாக கொடுக்கலாம்.

அதாவது லெசியாக கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மதிய உணவுகள் சப்பாத்தி, பூரி போன்றவற்றை மதிய உணவாக கொடுத்து வரலாம்.

குறிப்பாக எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மதிய உணவில் தினமும் காய்கறி சேர்க்க வேண்டும். வெஜிடபிள் ரைஸ், காலிபிளவர் ரைஸ், சோயாபீன்ஸ் ரைஸ், கீரை ரைஸ், கேரட், பீட்ரூட் ரைஸ், கேரட் பனீர் புலாவ், வெஜிடபிள் தால் ரைஸ், பட்டாணி புலாவ், சன்னா புலாவ் இதில் ஏதாவது ஒன்றை தினமும் கொடுக்கலாம். சைடு டிஷ் ஆக கேரட், வெள்ளரி, பூசணிக் காய் தயிர் பச்சடி போன்றவற்றை கொடுக்கலாம்.

மாலை நேர உணவுகளாக:

பள்ளி முடிந்து, மாலை வீடு திரும்பியவுடன் அவல், பொரி கடலை, அவித்த கொண்டைக்கடலை, பாசிப்பயறு, பட்டாணியை அளவோடு கொடுக்கலாம்

குறிப்பாக மாலை நேரங்களில் பிரட் சாண்டுவெஜ், ஏதேனும் நொறுக்கு தீனி மற்றும் ஆவியில் வேகவைத்த நேந்திரம் பழம் போன்றவற்றை மாலை நேரத்தில் சாப்பிட கொடுக்கலாம்.

இரவு உணவுகள்:

இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு சாதம், ஆவியில் வேகவைத்த உணவு, தோசை, இட்லி போன்றவற்றை இரவு உணவுகளாக கொடுத்து வரலாம்.

மழை காலத்தில் இரவு உணவாக கஞ்சி சிறந்த உணவாக விளங்குகிறது. எனவே மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு இரவு உணவாக கஞ்சி கொடுத்து வரலாம்.

குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு 10 வயது முதல் 12 வயது வரையிலும், பெண் குழந்தைகளுக்கு 8 வயது முதல் 10 வயது வரை சத்தான உணவு கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

எலும்பு வளர்ச்சிக்கும், பற்களின் வளர்ச்சிக்கும் கால்சியம் சத்து மிகவும் அவசியம். எனவே குழந்தைகளுக்கு தினமும் ஒரு கிளாஸ் பால் கொடுப்பது மிகவும் நல்லது. பால் குடிக்காத குழந்தைகளுக்கு தினமும் ஒரு கிளாஸ் மில்க்ஷேக் செய்து கொடுக்கலாம்.

குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது கேரட், வெள்ளரி, பேரீச்சம் பழம் போன்றவற்றை சாப்பிடும்படி கொடுத்து அனுப்பலாம்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement