குழந்தைக்கு வேர்க்குரு குறைய டிப்ஸ்..! Home remedies for heat rash in babies..!

Home remedies for heat rash in babies

குழந்தைக்கு வேர்க்குரு குறைய டிப்ஸ்..! Home remedies for heat rash in babies..!

Home remedies for heat rash in babies/ வேர்க்குரு குறைய:- கோடை காலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் அதாவது, குழந்தைக்கு சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே குழந்தைகளை இம்மாதிரியான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். சரி இந்த பதிவில் கோடைகாலத்தில் குழந்தைக்கு வேர்க்குரு வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை இங்கு பார்க்கலாம் வாங்க.

குழந்தைக்கு வேர்க்குரு குறைய

வேர்க்குரு வராமல் தடுக்க டிப்ஸ் 1:

  • வியர்க்குரு மறைவதற்கு இரவு படுக்கைக்கு முன்பு திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பொடியினை வெந்நீரில் கலந்து குடித்து வரலாம். 
  • இல்லையென்றால் அந்த பொடியினை கரைத்து உடலில் தேய்த்து குளித்து வர வியர்க்குரு விரைவில் மறையும். மேலும் வியர்க்குருவிற்கு வெட்டிவேரின் பவுடரையும் பயன்படுத்தி வரலாம்.

வேர்க்குரு மறைய டிப்ஸ் 2:

  • குழந்தைக்கு வேர்க்குரு நீங்க: கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்பு போன்று உடலில் நன்றாக தேய்த்து குளித்து வர வியர்வை பிரச்சனை நீங்கி வியர்க்குரு வராமல் இருக்கும்.

குழந்தைக்கு வியர்க்குரு குறைய டிப்ஸ் 3:

  • verkuru treatment for babies in tamil: மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சமமான அளவிற்கு எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்ததை வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி 1 மணி நேரத்திற்கு பிறகு குளிக்கவும்.
  • இந்த டிப்ஸினை பாலோ செய்து வர கோடை காலத்தில் வரும் வியர்க்குரு பிரச்சனையிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.

குழந்தைகளுக்கு வியர்க்குரு குறைய:

டிப்ஸ்: 1

பிறந்த இரண்டு மாத குழந்தையாக இருந்தால் தண்ணீர் அதிகமாக கொடுக்கலாம், குழந்தை தண்ணீர் அதிகம் அருந்தவில்லை என்றால் உலர்திராட்சியை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம்.

டிப்ஸ்: 2

தினமும் குழந்தையை ஒரு முறை குளிப்பாட்டி விடலாம் இதனால் குழந்தைக்கு உடல் சூடு தணியும்.

டிப்ஸ்: 3

அதேபோல் குழந்தைக்கு தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து விடலாம். எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.

இதையும் படியுங்கள் 👉 பச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி?

 

டிப்ஸ்: 4

குழந்தையின் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும், அதுவும் குழந்தையின் படுக்கையானது காட்டன் துணியாக இருப்பது மிகவும் சிறந்தது. காட்டன் துணி குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

டிப்ஸ்: 5

மேலும் குழந்தையின் படுக்கும் அறையில் ஏர்கூலர், ஏசி போன்ற குளிர் சாதங்கள் பொறுத்தப்பட்டிருந்தால் அதன் காரணமாக குழந்தையின் உடல் சூடு பிடிக்கும், எனவே இதனை தவிர்க்க குழந்தையின் கால் விரலில் மிக சிறிதளவு விளக்கெண்ணெயை வைத்து விடலாம். இதனால் குழந்தையின் உடல் குளிர்ச்சியடையும்.


குழந்தைக்கு வேர்க்குரு சரியாக கை வைத்தியம்:

Method: 1

குழந்தைக்கு வேர்க்குரு வந்துவிட்டால் உடனே வேர்க்குரு பவுடரை பயன்படுத்துவதற்கு பதில், சந்தனம் அல்லது நுங்கு சாறினை குழந்தையின் வேர்க்குரு மீது தேய்த்து மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் ஓரிரு நாட்களில் குழந்தையின் வேர்க்குரு பிரச்சனை சரியாகிவிடும்.

Method: 2

குழந்தைகளுக்கு வேர்க்குருடன் சிவப்பு தடிப்புகள் ஏற்படும் அதற்கு சிறிதளவு வேப்பிலையை பறித்து மைபோல் அரைத்து குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு சரியாகும்.

இதையும் படியுங்கள் 👉 வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு குறைய சில இயற்கை மருத்துவம்

 

Method: 3

குழந்தைக்கு வேர்க்குரு குறைய இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் அப்ளை செய்யங்கள், பின் காய்ந்ததும் கழுவிவிடுங்கள் இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு குறைய ஆரம்பிக்கும்.

Method: 4

குழந்தைக்கு வேர்க்குரு மிகவும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும் அதன் காரணமாக குழந்தைகள் அழுக ஆரம்பித்துவிடுவார்கள், அந்த சமயத்தில் வேர்க்குரு உள்ள இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம் இதனால் எரிச்சல் குறையும் மேலும், வேர்குரும் சரியாகிவிடும்.

Method: 5

சாதம் வடித்த கஞ்சி குழந்தையின் வேர்க்குரு பிரச்சனையை சரி செய்ய ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவே சாதம் வடித்த பின், அந்த கஞ்சியை நன்கு ஆறவைத்து பின் அதனை வேர்க்குரு மீது நன்றாக தேய்த்து விடுங்கள் பின் நன்கு காய்ந்ததும், குழந்தையை குளிப்பாட்டிவிடவும். இதனால் வேர்க்குரு விரைவில் சரியாகும்.

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்