குழந்தையை கொசு கடிக்காமல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள் (Home remedies to kill mosquitoes)..!
Home remedies to kill mosquitoes – பொதுவாக அனைவருமே கொசு வீட்டுக்குள் வருவதை அனுமதிக்க மாட்டோம். ஏனென்றால் இந்த கொசுக்களினால் பல நோயில் ஏற்படும். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
சரி இந்த கொசுவை வீட்டுக்குள் வராமல் இருக்க என்ன தடுப்பு முறைகளை மேற்கொள்ளலாம், வீட்டுக்குள் வந்த கொசுக்களை விரட்டுவது எப்படி?, கொசு கடியில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி? என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
குழந்தையின் கொசுக்கடி தடிப்புகளை சரி செய்ய சிறந்த வழி..! |
கொசு விரட்டி தயாரிப்பு: 1
ஒரு மண் சட்டியில் கரிக்கட்டைகளை சிறிதளவு போட்டு மிதமாக தீமூட்டவும், பின்பு அதன் மீது பச்சை வேப்பிலை மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவரை சேர்க்கவும்.
பின்பு வீடு முழுவதும் புகை மூட்டம் போடுங்கள். இவ்வாறு செய்வதினால் வீட்டுக்குள் எந்த கொசுக்களும் வராத. வீட்டுக்குள் இருக்கும் கொசுக்களும் இறந்துவிடும்.
கொசு விரட்டி தயாரிப்பு: 2
ஒரு எலுமிச்சை பலத்தை எடுத்து கொள்ளுங்கள், பின்பு அவற்றின் மீது கிராம்புகளை சொறுவுங்கள். இவற்றை குழந்தைகள் படுக்கும் அறையில் வையுங்கள் இவ்வாறு செய்வதினால். கொசு இதனுடைய வாசனைக்கு வீட்டுக்குள் வராது.
கொசு விரட்டி தயாரிப்பு: 3
தேங்காய் எண்ணெயுடன் ஒரு துளி லாவண்டர் எண்ணெய்விட்டுக் கலந்து சருமத்தில் தேய்த்தால், கொசு நெருங்காது. தேங்காய் எண்ணெய் உள்ள பாட்டிலில் 10-15 துளிகள் லாவண்டர் எண்ணெய் கலந்து வையுங்கள்.
இதை கை, கால், கழுத்து ஆகிய இடங்களில் தடவலாம். வெளியே விளையாட செல்லும் குழந்தைகளுக்கும் இந்த எண்ணெயை கை, கால், சருமம் போன்ற இடங்களில் தடவிவிடலாம்.
டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க சிறந்த வழி (Dengue fever in…
கொசு விரட்டி தயாரிப்பு: 4
வேப்பிலை இலையை அரைத்து சாறு பிழிந்து அதனுடன் 5 துளிகள் லாவண்டர் எண்ணெயை கலந்து கொள்ளுங்கள்.
பின்பு இவற்றை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீடு முழுவதும் ஸ்ப்ரே அடியுங்கள். இவ்வாறு செய்வதினால் வீட்டுக்குள் கொசு வருவதை தடுக்கலாம்.
கொசு விரட்டி தயாரிப்பு: 5
வீட்டில் நுழையும் கொசுக்களை விரட்ட இது ஒரு சிறந்த வலி. அதாவது கற்பூரவல்லி இலை சாறு மற்றும் கற்றாழைச் சாறு இவை இரண்டையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்.
பின்பு ஸ்ப்ரே பாட்டிலில் இந்த கலவையை ஊற்றி வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் வீட்டுக்குள் கொசு வராமல் இருக்கும்.
கொசு விரட்டி தயாரிப்பு: 6
நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் மூலிகை சாம்ராணியை வாங்கி வந்து வீட்டில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை புகை போடுங்கள் அல்லது கற்பூர எண்ணெயை நீரில் கலந்து வீடு முழுவதும் தெளிக்கலாம். இதன் வாசனையால் கொசு வீட்டுக்குள் நுழையாமல் இருக்கும்.
வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க இதை சாப்பிடுங்க..!
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |