தலை திரும்பி எத்தனை நாளில் குழந்தை பிறக்கும்..! குழந்தை தலை திரும்பியதற்கான அறிகுறி என்ன.?

Advertisement

தலை திரும்பி எத்தனை நாளில் குழந்தை பிறக்கும் | Kulandai Thalai Yepodhu Thirumbum

கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கும் ஒரு குழப்பம் குழந்தை தலை திரும்பி எத்தனை நாளில் பிறக்கும் என்பதை பற்றி தான். பொதுவாக ஒரு பெண் கர்ப்பம் அடைந்த நாளில் இருந்து தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை பற்றி நிறைய யோசனையும், ஆர்வமும் இருக்கும். குழந்தை ஆணா, பெண்ணா, சிவப்பா, கருப்பா, குழந்தை யாருடைய முகஜாடையில் இருக்கும் என்றும். எப்பொழுது குழந்தையின் அசைவை உணர முடியும் என்று நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புவாள். அவற்றில் ஒன்று தான் குழந்தை தலை திரும்பி எத்தனை நாளில் பிறக்கும் என்பதை அறிய விரும்புவார்கள். அவர்களுடைய ஆர்வத்திற்கு இந்த பதிவு பதிலாக இருக்கும். சரி வாங்க தலை திரும்பி எத்தனை நாளில் குழந்தை பிறக்கும் என்பதை பற்றி அறியலாம்.

குழந்தை தலை எப்போது திரும்பும் | Kulandai Thalai Yepodhu Thirumbumcephalic position

பொதுவாக குழந்தையின் தலை எப்பொழுது திரும்பும் என்றால் 32 வாரத்தில் இருந்து 36 வாரத்தில் குழந்தையின் தலை திரும்பும் இது பொதுவாக நடப்பதாக. ஆனால் சிலருக்கு அவர்களுடைய உடம்பு வாகு பொறுத்து, அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையை பொது மாறுபடும். அதிலும் சிலருக்கு 36 வாரம் வரை தலை திரும்பாமல் இருந்து பிரசவ நேரத்தில் தான் தலை திரும்பும். ஆக நாம் சரியாக குழந்தையின் தலை எப்போது திரும்பும் சொல்ல முடியாது இதற்காக யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பொதுவாக 32 வாரத்தில் இருந்து 36 வாரத்தில் குழந்தையின் தலை திரும்பும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பிரசவத்தின் போது தாய் வீட்டுக்கு செல்ல காரணம் என்ன..?

கடைசி மாத ஸ்கேன் செய்தபிறகு தலை cephalic position-யில் இருந்தால் குழந்தை வெளியே வருவதற்கு சரியான Position-க்கு வந்துவிட்டது என்று அர்த்தம்.

கடைசி மாத ஸ்கேனில் cephalic position-யில் இல்லாமல் இருந்து அதற்கு அப்பறம் குழந்தை தலை திரும்பினால் அதனை எப்படி உணரலாம் என்றால். உங்கள் குழந்தையின் கால் தொப்புளுக்கு மேல் இருக்கும். ஆக அடிக்கடி உங்கள் குழந்தை வயிற்றில் உதைக்க ஆரம்பிக்கும். அப்போது உங்கள் தொப்புளுக்கு மேல் உள்ள வயிற்றில் வலிக்க ஆரம்பிக்கும் அதனை வைத்து நீங்கள் உணர முடியும்.

அதேபோல் உங்கள் இடுப்பு எலும்பு பகுதியில் லேசாக வலிப்பது போல் இருக்கும். அதனை வைத்தும் உங்கள் குழந்தை தலை திரும்பி உள்ளது என்பது உணர முடியும்.

அடிவயிற்று பகுதியில் ரொம்ப கனமாக இருப்பது போல் தோன்றும். அதாவது அடிக்கடி சிறுநீரகம் கழிக்க வேண்டும் என்பது போல் தோன்றும், அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்பது போல் தோன்றும். அடிக்கடி அழுத்தம் குடுப்பது போல் தோன்றும் இப்படியெல்லாம் இருந்தால் குழந்தையின் தலை திரும்பிவிட்டது என்று அர்த்தம் ஆகும்.

அதேபோல் குழந்தையின் இதைய துடிப்பை உங்கள் அடிவயிற்றில் உணர முடியும். இப்படி தோன்றினாலும் குழந்தையின் தலை திரும்பிவிட்டது என்று அர்த்தமாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் தலைவலி வருகிறதா..! இதற்கு மாத்திரை எடுத்தால் குழந்தையை பாதிக்குமா..!

இது போன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்
Advertisement