குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள்..!

Raisins Benefits for Babies

குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள் (Raisins Benefits for Babies)..!

உலர் திராட்சை நன்மைகள் (Raisins Benefits for Babies)..!

உலர்திராட்சை ஆரோக்கியமானதாகவும், அனைவருக்கும் பிடித்த ஒன்றாகவும் அமைந்துள்ளது. இந்த உலர்திராட்சையில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகள் அதிக அளவு நிறைந்துள்ளது. இந்த உலர்திராட்சையை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது, இருப்பினும் குழந்தைகளுக்கு இந்த உலர்திராட்சையை எப்போது..? எவ்வளவு அளவு கொடுக்கவேண்டும்..? என்பதையும் இதன் மூலம் குழந்தைகளுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

குழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..!

உலர் திராட்சை நன்மைகள்..!

முதலில் உலர்திராட்சையில் உள்ள ஊட்டச்சத்துக்களை பற்றி தெரிந்து கொள்வோம்:-

உலர் திராட்சை நன்மைகள் (Raisins Benefits for Babies): 1

உலர்திராட்சையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.  உலர்திராட்சையில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலை சரி செய்ய சிறந்த மருந்தாக விளங்குகின்றது.

மேலும் இவற்றில் அதிகளவு இரும்பு சத்து நிறைந்துள்ளதால், உடலுக்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகின்றது.

உலர் திராட்சை நன்மைகள் (Raisins Benefits for Babies): 2

உலர்திராட்சையில் அடங்கியுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவுகிறது. உலர்ந்த திராட்சையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுகள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இரத்த சோகை மற்றும் புற்றுநோயை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் மற்றும் சரி செய்யவும் உதவுகின்றன.

குழந்தைகள் உலர்திராட்சை சாப்பிடுவவதால் கிடைக்கும் நன்மைகள்:

Raisins Benefits for Babies:-

உலர்திராட்சை குழந்தைகள் அதிகம் சாப்பிடுவதினால் அவர்களது உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது.

பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுகள் உலர்திராட்சையில் அதிகளவு நிறைந்துள்ளதால், குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.

உலர்திராட்சை குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உலர்திராட்சையில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான பிரச்சனையை சரி செய்ய பயன்படுகிறது.

குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படும் போது உலர்ந்த திராட்சை தண்ணீரைக் கொடுப்பதால் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராகப் போராட உதவும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

1 வயது குழந்தை உணவு வகைகள்..!

குழந்தைகளுக்கு உலர்திராட்சை கொடுக்க வேண்டிய சரியான வயது:-

உலர் திராட்சை நன்மைகள் (Raisins Benefits for Babies): 3

குழந்தைகளுக்கு எப்போது உலர்திராட்சை கொடுக்கவேண்டும் என்ற கேள்வி அனைத்து தாய்மார்களுக்கும் இருக்கும். அதாவது குழந்தை பிறந்து 6 முதல் 8 மாதங்களில் திராட்சையை கொடுக்க ஆரம்பிக்கலாம். அதேபோல் உலர்ந்த திராட்சைகளை குழந்தைகள் தானாக அமரும் திறனை வளர்த்து கொண்ட பிறகு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சைகளை கொடுக்கும் போது சிறு சிறு துண்டுகளை நறுக்கி கொடுக்க வேண்டும். அதேபோல் குழந்தைகள் அவற்றை உண்ணும் போது அருகில் நீங்கள் இருக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகளுக்கு உலர்திராட்சை கொடுக்க வேண்டிய சரியான அளவு:-

உலர் திராட்சை நன்மைகள் (Raisins Benefits for Babies): 4

குழந்தைகள் ஒரு வயதினை தாண்டி விட்டார்கனால் ஒரு நாளைக்கு, குழந்தைகளுக்கு 2 அல்லது 3 தேக்கரண்டியளவு சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது பிசைந்த உலர் திராட்சைகளைக் கொடுக்கலாம்.

பிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி?

குழந்தையின் உணவு:-

உலர் திராட்சை நன்மைகள் (Raisins Benefits for Babies): 5

குழந்தையின் உணவில் உலர்திராட்சையை எவ்வாறு சேர்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உலர்ந்த திராட்சைகளைக் குழந்தைகளின் உணவில் நேரடியாகச் சேர்க்கக் கூடாது. முதலில் அவர்களுக்கு உலர்ந்த திராட்சைகளின் நீரைக் கொடுங்கள். பின்னர் மெதுவாகச் சாறு, கூழ் அல்லது பிசைந்த திராட்சைகளைக் கொடுங்கள். அத்துடன் மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்தும் கொடுக்கலாம். இது குழந்தைகளின் செரிமானத்திற்கு உதவும்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Baby health tips in tamil