பிறந்த குழந்தை பற்றி அறிந்திடாத சில உண்மைகள்..!

Advertisement

Some Unknown Facts About Newborn Baby in Tamil

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த விடையே தெரியாத உலகத்தில்.. புதிதாக பிறக்கும் குழந்தையின் வருகை மகிழ்ச்சியானது. குறிப்பாக அந்த குழந்தையில் வீட்டிற்கு மகிழ்ச்சியின் ஆரம்பம் என்றும் சொல்லலாம். பிறந்த குழந்தையை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். மிக மிக மிருதுவான சருமம், சிறிய கை மற்றும் கால்கள் பார்க்க மிக அழகாக இருக்கும். சரி இந்த பதிவில் புதிதாக பிறந்த குழந்தையை பற்றி அறிந்திடாத சில விஷங்களை பற்றி தெரிந்துகொள்வீம் வாங்க.

பிறந்த குழந்தை பற்றி அறிந்திடாத சில உண்மைகள்..!

No: 1

புதிதாகப் பிறந்த குழந்தையால் கண்ணீர் விட முடியாது.. பிறந்த குழந்தை அழும்போது, கண்ணீர் துளிகள் வராது. அவர்களால் கண்ணீர் விட முடியாது. சுமார் 2-3 வாரங்களிலிருந்து குழந்தைகள் அழத் தொடங்கும் போது, அவர்கள் ஒரு மாத வயது வரை கண்ணீர் விட மாட்டார்கள். சில சமயங்களில் ஒரு குழந்தை நான்கு அல்லது ஐந்து மாதங்களில் முதல் கண்ணீர் விடலாம்.

No: 2

குழந்தை பிறக்கும் போது, முதல் அல்லது சில நாட்களில் அவர்களது மலத்தில் கடுமையான துர்நாற்றம் இருக்காது.

No: 3

சில சமயங்களில் குழந்தைகள் மூச்சு விடுவதை நிறுத்துகிறார்கள், இது பெற்றோர்களுக்கு பெரிய குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்திவிடும். பொதுவாக குழந்தைகள் 5-10 வினாடிகளுக்கு மூச்சு விடலாம், இது பெற்றோரை மிகவும் கவலையடையச் செய்யும். ஆனால் உங்கள் குழந்தை நீண்ட நேரம் சுவாசிக்காமல் நீல நிறமாக உடல் மாறினால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

No: 4

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு பார்வைக் குறைபாடு இருக்கும். குறிப்பாக குழந்தை பிறப்புக்குப் பிறகு முதல் சில வாரங்களில், அவர்கள் கருப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தை மட்டுமே பார்க்க முடியும் மற்றும் அவர்களின் முகத்திலிருந்து 8 முதல் 12 அங்குலங்கள் மட்டுமே கவனம் செலுத்த முடியும். இருப்பினும், சில வாரங்களுக்குப் பிறகு, அவை அந்தந்த நிறத்தில் பார்க்கத் தொடங்கலாம்.

No: 5 

குழந்தையின் அறிவுத்திறனில் 80% அறிவை தாயிடம் இருந்தே பெறுகின்றன.

No: 6

புதிதாகப் பிறந்த குழந்தையை ஒரு பெரிய சத்தம் அல்லது அவர்களின் சொந்த அழுகை மூலம் கூட அவர்கள் திடுக்கிடலாம், அதாவது பயப்படலாம்.

No: 7

இன்று உலகில் நடக்கும் 300 பிரசவங்களில் ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறக்கிறதாம்.

No: 8

பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஆணின் குரோமோசோம் தான் தீர்மானிக்கிறது.

No: 9

இந்த உலகில் ஒரு ஆண்டிற்கு சராசரியாக 131.4 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன. அப்படி பார்த்தால் ஒரு நொடிக்கு 4 குழந்தைகள் விதம், ஒரு நிமிசத்திக்கு 250, ஒரு மணி நேரத்திற்கு 15 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 கருவில் குழந்தை வளரும் விதம்..!

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby health tips in tamil
Advertisement